13.
பொட்டல் - மைதானம்.
கூட்டுப் பட்டா - கூட்டாக இருக்கும் பட்டாப் பத்திரம்.
கூட்டுப் பத்திரம் - ஒரே பத்திரம்.
தாய்ப்பத்திரம் - பூர்வீக சொத்துப் பத்திரம்.
வேத்தாள் - அந்நியர், வேறு ஆள்.
பாட்டையா - அப்பாவின் ஐயா. ஐயாவின் அப்பச்சி.
இருசி மட்டை - கருணை இல்லாதவள்.
வட்டிக்கடைத் தடைச்சட்டம் - 1977 இல் கொண்டு வரப்பட்ட அரசுச்
சட்டம்.
போக்கடாப் பயல் - போக்கற்றவன், அயோக்கியன்.
கொண்டிமாடு மாதிரி - கண்டிக்க ஆள் இல்லாமல், கோவில் மாடு
மாதிரி அலைவது,
வாய்செத்துப் போனாக - பயத்தால் பேச இயலாமல் இருப்பவர்கள்.
பக்கத்து வளவு - பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்.
ஈமக் கிரியை - இறுதிச் சடங்கு
பங்குக்காரவுக - வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ
அல்லது வெவ்வேறு கோயிலைச் சேர்ந்தவர்கள் பங்கு வாங்கிக் கொண்டு வந்தாலோ அவர்களைப் பங்குக்காரவுக
என்று சொல்வார்கள்.
14.
ஆத்தங்குடிக் கல் - போன நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில்
இருந்துவரும் ஆத்தங்குடி டைப் மார்பிள் கல்/மொஸைக் கல்/பூக்கல்.
ரெட் ஆக்ஸைட் - தரைக்கு சிமெண்ட் தளம் போடுவது போல் இந்த
ரெட் ஆக்ஸைடையும் போட்டுப் பூசி வைப்பார்கள்.
பெறளுது - பிரண்டு போதல்.
இரண்டாம்கட்டு - வீட்டின் பின்பகுதி. முதற்கட்டை அடுத்து
ஆல்வீடு அதன் பின் இருப்பது இரண்டாம் கட்டு.
சங்கு - குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சில்வர் பாலாடை
கேதம் - இறப்பு, சாவு.
ஒரந்தட்ட - உடம்பில் பிடித்த வாயு போன்றவற்றைத் தட்டுவதன்
மூலம் நீக்குவது.
பொறைத்தட்ட - புரை ஏறியவர்கள் இருமிக்கொண்டே இருப்பார்கள்.
புரைத்தட்டினால் அது நீங்கிக் குணமடைவார்கள்.
ஒரமெடுக்க - தலை நிற்காத குழந்தைகளுக்குக் கழுத்தில் சிலசமயம்
சுளுக்கு விழுந்துவிடும். அதை நீக்கப் புடவையில் வைத்து உருட்டி ஒரமெடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)