தேனம்மை லெக்ஷ்மணனின் #சோகி சிவா – இரண்டாம் பதிப்பு
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026
சனி, 28 டிசம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 15.
27.
பச்ச மண்ணு - பச்சைக்குழந்தை , பச்சை மண்ணுப் போல இசைவாயிருத்தல்
பச்சக் குட்டி - சின்னப்பிள்ளை
பச்ச நத்தம் - சிறு குழந்தையைக் குறிப்பது. நத்தம் என்றால் ரத்தம்
என்று அர்த்தம்
அப்பச்சி - தந்தை
ஆத்தாமை - ஆற்றமுடியாத மனவருத்தம்
ஊர்த்தாக்கல் - ஊர் நிலவரம், ஊர் விஷயங்கள்
புதன், 18 டிசம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 14.
25.
சேஞ்சுக்குற - திருமணம் செய்து கொள்கின்ற
லெக்குல - இடத்துல
பொறசாதி - மற்ற சாதிக்காரர்கள்
மேங்கோப்பு - வீட்டின் மேல் பாகம்
தார்சு - கான்க்ரீட் தளம்
சேயிற வயசு - திருமணம் செய்யும் வயசு
வெள்ளி, 29 நவம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 13
23.
ஆத்தாடியோவ் - வெகுண்டு சொல்வது.
சுளகு - முறம் போன்று இருப்பது. முறம் விரிந்திருக்கும். சுளகு
முடிவில் குவிந்திருக்கும்.
பானாக் காதுச் சட்டி - ப னா வடிவில் கைப்பிடி வைத்த சட்டி
அத்தத்தண்டி - அவ்வளவு பெரிய
தோது - திருமணத்துக்குத் தோதாகச்/சீராகக் கொடுக்கும் பணம்,நகை.
பெருவாரிப் பேரு - நிறையப் பேர்
வியாழன், 7 நவம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 12.
21.
ரொட்டிப் பொட்டித் தகரம் - ஒரு காலத்தில் ரொட்டி/பிஸ்கட்
வைக்கப் பயன்பட்ட ஒரு நீள் செவ்வக டப்பா
பெருமை பீத்தக்கலம் - அடுத்தவர்களுடன் இயல்பாக உரையாடாமல்
தன்னைப் பெருமையாக எண்ணித் திரிபவர்களைக் கிண்டல் செய்வது. பீத்தல் கலத்தில், ஓட்டைக்கலத்தில்
வைப்பது போல பெருமை வடிந்து விடும் என்பது.
தெம்பட்டுச்சு - தென்பட்டது, காண/உணரக் கிடைத்தது.
அடி ஆத்தி - ஆச்சரியத்தின் போதும் ஒரு புது விஷயத்தைக் கேள்விப்படும்போதும் இப்படிப்பட்ட சொலவடைகளை இருபாலாரும் உதிர்ப்பார்கள்.
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 11.
19.
பிள்ளை பிறந்தது கேட்க - குழந்தை பிறந்ததைக் கேட்க
ஆம்பிள்ளையான் பேர் இட்டுக்க - கணவனின் பெயரை வாரிசுக்கு
இடுவது
அவ பேரைத்தான் இடோணும் - அவ பேரைத்தான் வைக்க வேண்டும்
பேரிட்டார்கள் - பெயரிடுதல் என்றால் பெயர் வைப்பது, பெயர்
வைத்தார்கள்.
வேளார் - குலதெய்வம் கோயிலில் தெய்வத்தொண்டு புரியும் பூசாரி.
படைப்பு வீடு - சாமிக்குப் படைக்க எனத் தனியாக வீடு இருக்கும்.
பூசை வீடு - திருக்கார்த்திகைப் பூசை செய்யும் வீடு.
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 10.
17.
புள்ள கூட்டுதல் - குழந்தை இல்லாதவர்கள் அதிகக் குழந்தை உள்ள
அதே கோவிலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பிள்ளையை சுவீகாரம் செய்து கொள்வார்கள்.
ஆம்பிள்ளையான் பேர் சொல்ல - கணவனின் பேர் சொல்ல வாரிசி வேண்டும்.
வீடு விளங்கோணும் - வீடு விளங்கப் பிள்ளைகூட்ட வேண்டும்.
புள்ள விடுற ஜாதகம் - பிள்ளை விடுற ஜாதகம் என்றால் அந்தப்
பையனுக்கும் ஜாதகத்தில் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகனாகப் போகவேண்டும் என்ற அமைப்பு
இருத்தல்.
நாளப் பின்ன - பிற்காலத்தில், தன் காலத்துக்குப் பிறகு.
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 9.
15.
ஆத்து ஆத்துப் போய் - அழுது அழுது மனம் இற்றுப் போய்
தூக்குச் சட்டி - சொருகு சட்டி, தூக்குப் பாத்திரம்.
கசாப்புக் கொழம்பு - மட்டன் குழம்பு.
மொளக்கமாத்துக் குச்சி - விளக்குமாற்றுக் குச்சி, பெருக்குமாறு,
துடைப்பக் குச்சி.
துண்ணூத்து மடல் - திருநீற்று மடல், விபூதி கொட்டிவைக்கும்
மரத்தாலான மடல்.
அரச விட்டு - ஆண்பிள்ளையை அரசு என்பார்கள்.
செவ்வாய், 3 செப்டம்பர், 2024
சோகி சிவா சொல்வழக்கு -- 8.
13.
பொட்டல் - மைதானம்.
கூட்டுப் பட்டா - கூட்டாக இருக்கும் பட்டாப் பத்திரம்.
கூட்டுப் பத்திரம் - ஒரே பத்திரம்.
தாய்ப்பத்திரம் - பூர்வீக சொத்துப் பத்திரம்.
வேத்தாள் - அந்நியர், வேறு ஆள்.
பாட்டையா - அப்பாவின் ஐயா. ஐயாவின் அப்பச்சி.
இருசி மட்டை - கருணை இல்லாதவள்.
திங்கள், 26 ஆகஸ்ட், 2024
சோகி சிவா சொல்வழக்கு 7.
11.
காரியம் - வேலை. இங்கே ஒருவரின் கடைசிக் காரியம் செய்வதைக்
குறிக்கும்.
பட்டம் சுத்துதல் - ஒருவர் இறந்தபின் ஈமச் சடங்கின் போது
அவரைக் குளியாட்டி உறவினர்கள் பந்தக் காலைச் சுற்றி வந்து வணங்குதல். பெண் என்றால்
தோளில் வெண் புடவையைப் போட்டு மூன்று முறை பட்டம் சுத்திப் பிறந்த வீட்டினர் அப்புடவையை
அவள் மேல் போடுவார்கள்.
வெள்ளைச் சீலைக்கார ஆச்சிக - கணவரை இழந்தவர்கள் வெள்ளைச்
சேலை அணிந்திருப்பார்கள். அவர்களைக் குறிப்பிடும் சொல்.
பந்தக்கால் - இறந்தவரைக் குளியாட்டி இந்தப் பந்தக்காலில்
பாய் விரித்துக்கிடத்துவார்கள். நாற்புறமும் சாணி வைத்துப் பந்தக்கால் நட்டிருப்பார்கள்.
சாவல் - சேவல்
திங்கள், 5 ஆகஸ்ட், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 6.
9.
உத்தரவு - சம்மதம். அனுமதி, ஆசி
பொங்கச்சீர் - பொங்கப்பானை கொடுத்தல்.
மொறைச்சிட்டைப்படி - பெண் பார்த்ததிலிருந்து அனைத்தும் மாப்பிள்ளை
பெண் வீடுகளில் முறைச்சிட்டையில் குறித்தபடியே கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.
எத்தைத்தண்டி - எவ்வளவு பெரிசு.
ரெட்டை வீடு - இரண்டு வீடுகள் இணைந்தது.
ரெட்டை வளவு - இரண்டு வீடு இணைந்து இருந்தால் இரட்டை வளவு
என்பார்கள்.
மருகிக் கொண்டு - மனதில் கவலையை மறைத்துக் கொண்டு.
வியாழன், 18 ஜூலை, 2024
சோகி சிவா சொல்வழக்கு -- 5
8.
கல்யாணப் படைப்பு - திருமணம் முடிந்ததும் சாமி வீட்டில் படைத்து
வழிபடுவது.
கோழிப்படைப்பு - சாமிக்கு கோழி அறுத்துப் படைப்பதுண்டு. இதை
அசைவப் படைப்பு என்பார்கள்.
ஒறங்கப்பச்சி - உறங்கு அப்பச்சி, தூங்குப்பா எனச் சொல்லுதல்.
மறுவீடு - திருமணம்
முடிந்து மறுவீடு வருவது.
பால்பழம் வைச்சுக் கும்பிடுதல் - வீட்டில் இருக்கும் சாமிக்கும்
முன்னோருக்கும் பால் பழம் படைத்துக் கும்பிடுதல்.
பால்பழம் சாப்பிடுதல் - திருமணம் முடிந்த தம்பதியர் தாய்வீட்டுக்கு மறுவீடு வரும்போது உறவுக்காரர்கள் கையால் பால்பழம் சாப்பிடுவார்கள்.
வியாழன், 27 ஜூன், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 4.
7.
எறையாமப் பேசு - சத்தம் போடாமல் பேசு
வறளி - கொடுக்க மனமில்லாதவர், வரட்சியான காய்ந்த மனநிலை.
கஞ்சம்
குலதெய்வக் கோவிலில் கொண்டு சேர்த்தல் - சமைந்த காலத்தில்
ஒரு பெண்ணை முனி அடித்திருந்தால் இறந்தபின் வீட்டில் அவர்க்குப் படைக்க முடியாது. எனவே
குல தெய்வக் கோவிலில் வேளாரிடம் அவரின் பேர் சொல்லிக் கருவறையில் ஆணியடித்துச் சாமியுடன்
சேர்த்துவிடுவார்கள்.
ஒய்யக் கொண்டா வீடு - செட்டி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு
வீட்டுக்கும் பேர் உண்டு. இதுவும் ஒரு வீட்டின் பெயர்.
கெம்புக்கல்லு செட்டு - சிவப்புக் கல் பதித்த நகைகள்.
வியாழன், 13 ஜூன், 2024
சோகி சிவா சொல்வழக்கு - 3
5.
ஆஸ்டின் கார் - அந்தக்காலக் கார் வகைகளில் ஒன்று.
வக்கூடை - மூடி போட்ட பிரம்புக் கூடை
வெளையாட்டுப் பொட்டி வேவு - குழந்தை பிறந்தவுடன் ஆயா வீட்டார்
இறக்குவது. இதில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கம் வெள்ளியிலிருந்து
உடை வரை ஆயாவீட்டார் சீராகக் கொடுப்பார்கள். இதற்கு ஆயா வீட்டுப் பங்காளிகளுக்கும்
உறவினர்களுக்கும் அப்பத்தா வீட்டில் வடிப்பார்கள். ( விருந்து வைப்பார்கள்)
சிட்டிக - குழந்தைக்கான விளையாட்டுச் சாமான்கள்.
நடவண்டி - குழந்தைகளை நடக்க வைக்க இப்போது வாக்கர் போல அந்தக் காலத்தில் பயன்பட்ட மரத்தால் ஆன நடை வண்டி.
ஞாயிறு, 26 மே, 2024
சோகி சிவா சொல்வழக்கு - 2.
3.
பொக்குன்னு - சீக்கிரமாக
பனிக்கொடம் - கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி அமைந்திருக்கும்
நீர்ச்சத்து
ஆத்தா சிவகாமி - பெண்குழந்தைகளைத் தாய் என்ற அர்த்தத்தில்
ஆத்தா என்று பிரியத்துடன் விளிப்பது வழக்கம்.
4.
ஐயாக்க வீட்டுப் பங்காளிக - பங்காளிகளில் கூடிக்கிற பங்காளிகள், ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்று பிரிவு உண்டு. ஒரே ஐயாவுக்குப் பிறந்த பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் வாரிசுகளை ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்பார்கள்.
வியாழன், 16 மே, 2024
சோகி சிவா சொல்வழக்கு - 1
1.
பத்தி - வளவு, முகப்பு ஆகியவற்றில் புழங்கும் பகுதி.
பஞ்சாட்சரம் - சிவனின் ஐந்தெழுத்து மந்திரம். நமச்சிவாய
உபதேசம் - சிவகோத்திரத்தைச் சேர்ந்த நகரத்தார் இன மக்கள்
துலாவூர், பாதரக்குடி ஆகிய மடங்களில் தங்கள் குருக்களிடம் சிவதீட்சை பெற்று உபதேசம்
பெறுவார்கள். இதில் ஆண்கள் பாதரக்குடியிலும் பெண்கள் துலாவூரிலும் சமய தீட்சை பெறுவார்கள்.
வேடுகட்டி - ஜாடி, கண்ணாடி சீசா போன்றவற்றில் வாய்ப்பகுதியைத் துணியால் மூடிக் கட்டுதல்.
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ”சோகி சிவா”
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂
மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂

