எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு 7.

 11.

காரியம் - வேலை. இங்கே ஒருவரின் கடைசிக் காரியம் செய்வதைக் குறிக்கும்.

பட்டம் சுத்துதல் - ஒருவர் இறந்தபின் ஈமச் சடங்கின் போது அவரைக் குளியாட்டி உறவினர்கள் பந்தக் காலைச் சுற்றி வந்து வணங்குதல். பெண் என்றால் தோளில் வெண் புடவையைப் போட்டு மூன்று முறை பட்டம் சுத்திப் பிறந்த வீட்டினர் அப்புடவையை அவள் மேல் போடுவார்கள்.

வெள்ளைச் சீலைக்கார ஆச்சிக - கணவரை இழந்தவர்கள் வெள்ளைச் சேலை அணிந்திருப்பார்கள். அவர்களைக் குறிப்பிடும் சொல்.

பந்தக்கால் - இறந்தவரைக் குளியாட்டி இந்தப் பந்தக்காலில் பாய் விரித்துக்கிடத்துவார்கள். நாற்புறமும் சாணி வைத்துப் பந்தக்கால் நட்டிருப்பார்கள்.

சாவல் - சேவல்

கட்டத்தலம் - மயானம். உடலென்னும் கட்டையை எரிக்கும் தலம்.

நொடித்தல் - முகத்தைத் தோள்பட்டையில் இடித்தல், அல்லது பிறர்மீது கோபத்தோடு இடித்துக் காட்டுதல்.

லண்டி மட்டை - திட்டுச் சொல்வழக்கு. யாருக்கும் அடங்காதவள் என்று அர்த்தம்.

 

12.

கவர்மெண்டுல எடுத்துக்கிடுவாகளாம் - அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.

கரம்பை - சரளைக்கற்கள்.

ஒவ்வொருதாட்டியும் - ஒவ்வொரு முறையும்.

ஆத்தா வீட்டு ஆளுக - தாய்வழிச் சொந்தம்.

செலவுநடை - தினப்படிச் செலவு. அன்றாடச் செலவு.

வட்டிக்கடையில் அடைச்ச பணம் - வட்டித் தொழில் செய்யும் நம்பிக்கையான ஒருவரிடம் அசலைக் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து வட்டியை வாங்கிக் கொள்ளுதல்.

டிமிக்கி - ஏமாத்துதல்.

எக்கு - எனக்கு.

இறுக்கு - இரும்பு போல் உறுதி.

முகப்பு - வீட்டின் முன் பகுதி.

நடை - வீட்டின் நடைபாதைப் பகுதி. வாசலில் இருந்து ஆல்வீடு தாண்டி இரண்டாங்கட்டு வரை உள்ள நீண்ட நடைப்பகுதி.

வேகு வேகென்று - வேகம் வேகமாக.

கலவரப்படுத்திப்புடப்புடாது - பயப்படுத்தி விடக்கூடாது.

போஜன் ஹால் - சாப்பாட்டுப் பந்தி.

சீனாக்காரன் தலையில தீயைப் பத்த வை - இந்தியச் சீன யுத்தம் முடிந்தபின் சிறுவர்கள் பாடும் வேடிக்கைப் பாட்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...