எனது புது நாவல்.

திங்கள், 25 ஜூன், 2018

என் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை.

பூத்ததைப் பார்த்தோம் , காய்ச்சதைப் பார்த்துவிட கனிஞ்சதையும் முத்தினதையும் பழுத்ததையும் பார்த்தோம். ஏன்னா நாங்க இருக்கும் வீட்டில் இருந்து மாடித்தோட்டம் போட்ட வீடு தூஊஊரம். சோ வாரம் ஒருமுறைதான் போக முடியும்.

30 லேருந்து 40 வெல் க்ரோ பைகள், அதுல செடியோடவே கொண்டாந்துட்டாங்க. சிலதை மட்டும் அப்ப வந்து தூவுனாங்க.கீரை விதை மாதிரி. ஒவ்வொரு பேகையும் நாலு கல்லு வைச்சு அது மேல வைச்சாங்க. அந்த ஸ்பெஷல் கல்லு ரெண்டு டப்பா வந்தது. அப்புறம் கழி கொண்டு வந்து ஊன்றி அதுல இந்த க்ரீன் நெட்டைப் போட்டு நல்லா கட்டுனாங்க. ஒரு நாள் வேலை. இதெல்லாம் ஒரு வேன்ல வந்துது.

தோட்டம் போட்டவுடன் தோட்டம் போட்டுக் கொடுத்த மனுஷன்  அப்பவே சொன்னாரு, பதினைஞ்சாயிரம் கொடுத்துப் போட்டா எல்லாரும் மூணு மாசத்துல 15,000 ரூபாய்க்கு காய் அறுவடை பண்ணனும்னு நினைப்பாங்க. நீங்க அப்பிடி இல்லையே என்றார். இல்லை என்று இடம் வலமாக பலமாகத் தலையாட்டினோம். ஆனா மூணு மாசத்துல முக்கா கிலோ தக்காளி எடுத்திருப்போம். அரைகிலோ கத்திரி, அரை கிலோ வெண்டை ஒரு கொத்து பச்சை மிளகாய். 300 ரூபாய்க்குக் காய் எடுத்திருப்பமா தெரியல. ஆனா நம்ம தோட்டத்துக்காய்னு நினைக்கும்போது விலையாவது ஒண்ணாவது..  உரம், பூச்சி மருந்து, மரபணு காய் என்ற பயமில்லாமல் இருந்ததே அதுவே ஐஸ்வர்யம். ( நாம அதுக்குள்ள இடம் விட்டு இடம் மாத்தி திரும்ப க்ரீன் கொட்டகை லேபர் கூலி, வேன் கூலி எல்லாம் சேர்த்து அது 20,000/- ஆ எகிறிருச்சு )

ஆனால் வாராவாரம் செல்வதால் வெண்டைக்காய் முக்காலே மூணுவீசம் முத்திடும். விடுவமா சூப் வைச்சு சாப்பிட்டோம். லெமன் கிராஸை எதுல போடலாம்னு தெரியல.. :(

பாவக்காய் பழமாய்ப் போயிடும். அதத்தான் ஜூஸ் அடிச்சுக் குடிக்க முடியல :)

தோட்டம் போட்டுக்குடுத்தவர் மீன் கரைசல் & இன்னோரு வெல்லக் கரைசல் கொடுத்தாரு. அதை குடியிருப்பவர்களிடம் கொடுத்து தண்ணீரில் கரைத்துப் பூவாளியில் தெளிக்கும்படி சொல்லி வந்தோம்.  அவர்களுக்கும் விளைச்சலில் பங்கு உண்டு. :)

கீழே தோட்டத்தில் முருங்கை, பலா, வாழை எல்லாம் உண்டு. அது எல்லாம் அவர்களுக்கே. இந்த வல்லாரை,முருங்கைக்கீரை, பசலைக்கீரை இதெல்லாம் நமக்கு :)


லெமன் கிராஸ் , கத்தாழை & நாலைஞ்சு தக்காளி செடி, நாலைஞ்சு பச்சைமிளகாய்ச் செடி, நாலஞ்சு கத்திரி, நாலஞ்சு வெண்டி. இது போக அவரை, தட்டைப்பயித்தங்காய், பொன்னாங்கண்ணிக்கீரை, முள்ளங்கி, புடலை, பாகல், பீர்க்கை எல்லாம் போட்டுக் கொடுத்தார். ஆனால் அவரையும் தட்டைப்பயித்தங்காயும் நாலஞ்சுதான் வந்தது. முள்ளங்கி வந்துச்சா வல்லியான்னே தெரில. எப்ப அறுவடை செய்யலாம் ?
அவரைப் பூ.
பாகல் பூ.


எல்லாம் நல்லா இருக்கு ஆனா எறும்பு வில்லன் வந்து எல்லாத்தையும் கபளீகரம் பண்ணிடுது. இந்த எறும்பு வில்லனுக்காக அவங்க செடியைச் சுத்தி எறும்பு மருந்து பொடி போட்டு வைக்கிறாங்க. ஆனாலும் தப்பிச்சு ஓடி முளைவிடுற கீரை தளிரை எல்லாம் தின்னுபுடுது.

மத்த செடிகள்லயும் பேக் ஈரமா இருக்கதால ஓடி ஓடி தஞ்சமடைஞ்சு இருக்குதுக. எல்லாம் கறுப்புக் கட்டெறும்புகள்.

இது போக மாடியிலும் கூட அஸ்வினிப்பூச்சி தொல்லை !  இலை எல்லாம் பாருங்க வெள்ளையா இருக்கு.


ஓரளவு வளர்ந்துட்ட பிறகு தோட்டத்தில் தலைவர்.
குட்டி வெண்டைக்காய்.

குட்டித் தக்காளி. இவ்ளோதான் வருது பெருக்கவே இல்லை ஏன் ?

லைட்டா முத்திட்டாங்க. அது ஏன் வெண்டிக்காய் எல்லாம் தலைகீழா நிக்குது :)

தக்காளியோ தக்காளி :)

தக்காளிக்காய் குழம்பு வைத்துச் சாப்பிட்டோம். ருசியோ ருசி.
பாகற்காய்.
முதல் முதல்ல பாகக்காயை பறிக்கவேண்டாம்னு விட்டுட்டு வந்தா அது பழமாயிடுச்சு அடுத்த வாரம்  :(
இப்ப ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் போயி கிடைச்சதை அறுவடை செய்துட்டு வர்றது :)
வெண்டி , பீர்க்கை,கத்திரி, தக்காளி, தட்டைப்பயித்தங்காய் , பச்சை மிளகாய். செம சூப்பர்ல.

கத்திரிக்கா சிலப்போ மஞ்சளாகுது. அவரை ரொம்ப காய்க்கவே இல்லை, புடலை வரவே இல்லை. என்ன செய்யலாம். அப்புறம்... இந்த எறும்பு வில்லனுக்கு மட்டும் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. ப்ளீஸ். 

6 கருத்துகள் :

விஸ்வநாத் சொன்னது…

மிக அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சூப்பர். எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் கீழே யே...நிலத்துடன் வீடு என்பதால்....மிளகுக் கொடி உண்டு. பட்டை மரம், வாழை, பலா, மா தென்னை, கறிவேப்பிலை சேம்பு பயறு என்று....உங்கள் அறுவடை செமையா இருக்கே....

கீதா: தேனு வெண்டை நானும் போட்டேன் சிறிய பால்கனிதான் என் வீட்டில் அதில் தொட்டி வைத்து போட்டேன். வெண்டை சிறிதாகத்தான் வருது. கடையில் கொஞ்சம் நீளமாக ஆனால் இளசாக வருவது போல் வீட்டில் வருவதில்லை. அது போல் தக்காளிய்ம் அப்படித்தான். பரவாயில்லை கெமிக்கல் இல்லையே....கடையில் வருவது எலலம் கெமிக்கல் போட்டு பெருத்தவையோ என்னமோ...யாருக்குத் தெரியும். நான் கடையில் ஆர்கானிக் என்று ஆனை விலை குதிரை விலை விற்பவற்றை நம்புவதில்லை. அதற்குப் பதில் ப்ளாட்ஃபார்ம் பாட்டிமா தோட்டத்தில் விளைந்தது என்று கொண்டு வந்து விற்பவற்றை வாங்குவதுண்டு. அது கொஞ்சமாகத்தான் இருக்கும் பரவாயில்லை....பாட்டிமாவிற்கும் பிழைப்பு...நமக்குக் காயும் கெமிக்கல் இல்லாதது...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விசு சார்.

செமையா சொன்னீங்க கீத்ஸ். கேரளாவுல தோட்டத்துக்குக் கேக்கணுமா :)

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

R Muthusamy சொன்னது…

பசுமை காய்கறிகள் மற்றும் தோட்டம் குறித்த படங்கள் மனத்தைக் கவர்கின்றன.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...