எனது புது நாவல்.

வெள்ளி, 29 ஜூன், 2018

துபாய் டெஸர்ட் சஃபாரி. DESERT SAFARI ( DUBAI )

துபாய் செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய பயணம் டெஸர்ட் சஃபாரி.

மணல் குன்றுகளில் ஜீப்புகள், பைக்குகளில் செல்லும் சாகசப் பயணம்தான் டெஸர்ட் சஃபாரி.

உல்டி வரும், வயிறு பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் போவதைத் தவிர்ப்பது நலம்.

மணற்பாங்கான குன்றுகளில் ஏறி இறங்கி 20 லிருந்து 30 நிமிஷம் வயிறு வாய்க்கு வரும்வரை இந்த க்ரூஸர்களில் அமரவைத்து பெல்ட் போட்டு ஓட்டிச் செல்வார்கள். பாதியில் அம்மா அப்பா இறக்கிவிடுங்க என்று கத்தக் கூட வாயைத் திறக்க முடியாது. ஒரே தலைசுத்தல்தான். :) எனவே பிபி இருப்பவர்கள் யோசித்துப் பயணிக்கவும்.

மதியம் 3 - 3.30 வாகில் நம்மை துபாய்க்கும் ஷார்ஜாவிற்கும் நடுவில் குறிப்பிட்ட ஹோட்டல் அல்லது பிக்கப் பாயிண்டில் ஏற்றிக் கொள்வார்கள்.  ஒரு நபருக்குக் கட்டணம் 150 திர்ஹாம் என நினைக்கிறேன்.


பாலைவனத் தடங்கள்.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா படம் ஞாபகம் வருதா :)

இல்லாட்டி ஜீனி, லைலா, அல்லாதீன். :)

கார்களின் அணிவகுப்பு.

இங்கே மாலை சூரிய ஒளியையும் பாலைக்குன்றுகளையும் படம் பிடிக்கலாம்.

ஒவ்வொரு காரிலும் ஆண்டனா போல் ஒன்று இருக்கிறது. சிக்னல் அல்லது திசை காட்டவா ?

எங்கு பார்த்தாலும் SAND DUNES  எனப்படும் மணற்குன்றுகளும் பாலையின் குத்துப் புதர்களும்தன.


இந்தக் குத்துப் புதர்கள் செடிகளிலும் பாலை மணலிலும் கூட பூச்சிகள், பாம்புகள் உயிர்வாழ்கின்றனவாம் !ஒட்டகம் எல்லாம் எடுத்தா இன்னும் தனி வாடகை. அது வேறு இடத்துக்குப் போகணும் ஒட்டக சவாரிக்கு. கேமல் ரைட்.

தாறு மாறா கொஞ்ச நேரம் ஓட்டி தலையையும் குடலையும் திருப்பிப் போட்டபின் கொஞ்சம் ரெஸ்ட்.

அதன் பின் அதே முறையில் திருப்பிப் போட்டபடி ரிட்டர்ன் :)

பாலையிலும் பாறைகள்.

நம்ம பையர்.

இவ்ளோ பேரா ?!

இதற்கென்று ஸ்பெஷலாக உள்ள வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.

மலைப்பக்கப் பிரயாணத்துக்கு நான்கு டயர்களிலும் க்ரிப் இருப்பது போல் இந்த பாலைவனப் பிரயாண வண்டிகளும் கிச் சென்று நிற்கின்றன.  அநேகமாக பல வண்டிகள் லாண்ட் க்ருஸர்தான்.


நீரற்ற பாலையிலும் எத்தனை செடிகள். கடவுள் படியளக்கிறார் எல்லாவற்றிற்கும். !


டெஸர்ட் செக்யூரிட்டி வெஹிக்கிள்ஸ் இல்லை க்வாட் பைக் ரைடர்ஸ்.
பைக் ரைட் செய்யலாம். இதுக்கு பேரு க்வாட்பைக் ஆனா அதுக்கும் தனியா 125  திர்ஹாம் பணம் கட்டணும் :)

அட்ரீனலினை சுரக்கச் செய்யும் மணல் கிளறிய பயணம்.

தாறாமாறா போய் தலை குப்புற விழுந்தாலும் கவலை இல்லை. மணல்தானே மென்மையா இருக்குமாம்.

பாலைவனத்திலும்  போர்டு வைத்து சாண்ட்  ஸ்கீயிங்யும் செய்ய முடியுமாம்.

புழுதியைக் கிளப்பிட்டுப் போகுது க்வாட் பைக். சீக்கிரம் நம்மள வூட்டுல கொண்டு விட்டா தேவலை. பூமியும் ஆகாயமும் மண்ணுக்குள்ள சுழட்டி சுழட்டி விண்ணளந்த பெருமாள் மாதிரி தட்டாமாலை சுத்துது. :)

சன்செட் ஃபோட்டோகிராஃபி எடுத்தாச்சு, கேமல் கூடாரம், பெல்லி டான்ஸ், பார்ப்பக்யூ உணவுகள், ஹூக்கா பிடிக்கிறது எல்லாம் இனி பார்க்கப் போறோம்.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட..! சூப்பர்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

KILLERGEE Devakottai சொன்னது…

படங்கள் எடுத்த விதமும் ஸூப்பர் சகோ.

R Muthusamy சொன்னது…

பிரமிப்பூட்டும் பதிவு

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

பதிவு பதிவு !! :)

Thenammai Lakshmanan சொன்னது…நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி முத்துசாமி சகோ

நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...