வியாழன், 6 ஜனவரி, 2011

கானாமிர்தம்..

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு.. எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.. ” ., ”நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க.. ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட தமிழர் போலே.”, என்று புகழ் பாடும் தமிழ்ப் பாடல்கள் எனக்குப் பிடித்தம்..

கர்ணனில் ”மஞ்சள் பூசி., மலர்கள் சூடி .,” என வரும் தாய்மை பொலிந்த பாடல் எப்போது பார்த்தாலும் இனிக்கும்.. ”முத்தான முத்தல்லவோ..”, மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே.. ” ., ”ராஜா சின்ன ராஜா., பூந்தளிரே சின்ன நிலவே உன்னை நெஞ்சில் ஏந்திக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்.. காக்கும் தெய்வம் உன்னை..” ., " அழகிய கண்ணே .. உறவுகள் நீயே.. நீ எங்கே., இனி நான் அங்கே.. என் சேயல்ல தாய் நீ.....,” ” அத்தை மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா.. “ என்ற பாடல்கள் நெஞ்சில் நிறைந்தவை.. அதன் சிகரமான பாட்டு இது..


அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் மாற மாட்டேனா.. அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா.. ”

தனிமை.. காதல் கலந்த பாடல்கள் எப்போதும் பிடிக்கும்.. ”உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.. என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்.. “ மாலையில் யாரோ மனதோடு பேச..” "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது..” "சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா.." "அன்னக்கிளி உன்னத் தேடுதே.." "அடி அம்மாடி ஒரு சின்னப் பொண்ணு அவ ஆசை வச்சா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு.. .. ".. ” என் வானிலே ஒரே வெண்ணிலா.. ” “ புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி வந்து தூங்குது தூங்குது பாரம்மா.. உன்னையே உன்னையே என் மனம் எண்ணியே எண்ணியே தினம் தினம் ஏங்குது ஏங்குது பாரம்மா..”

காதல் பாடலில் எப்போது கேட்டாலும் இனிப்பது ., “ ஜல்., ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி.. சல சல சலவெனச் சாலையிலே செல்.. செல் .. செல்லுங்கள் காளைகளே .. சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே.. அவன் தான் திருடன் என்றிருந்தேன்.. அவனை நானும் திருடிக் கொண்டேன். முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்துவிட்டேன்.. ”மலரே மலரே உல்லாசம் உன்னைத்தான் சந்தித்தாள் .. உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்.. இதயம் எழுதும் கவிதை நீ.. ” " உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. “ .. ”பார்த்த ஞாபகம் இல்லையோ.. அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்.. நாம் வாழ்ந்திருந்தோம் பல காலம்.. “ இவையும் பிடித்தவை..

“லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்.. தக்கதிமிதா..” என சரோஜா தேவி பாடும் போதும் ., ”தேடினேன் வந்தது .. நாடினேன் தந்தது..” என கே ஆர் விஜயா பாடும் போதும் மயங்காமல் இருக்க முடியுமா.. ”காற்றே என் வாசல் வந்தாய்.. மெதுவாகக் கதவு திறந்தாய்.. காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்..” என ஜோதிகாவும்., “ மனம் விரும்புதே உன்னை உன்னை,, நினைத்தாலும் சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா.. என் பேரும் மறந்தேனடா .. உன் பேரும் தெரியாதடா..” என சிம்ரனும் ஆடும் போது சொக்காமல் இருக்க முடியுமா..

எனக்கு மிகப் பிடித்த இந்தப் பாடல் சிவாஜியும் தேவிகாவும்.. தேவிகா பாடும் போது சிவாஜியின் எக்ஸ்ப்ரஷன்ஸ் அருமையா இருக்கும்.. தனிமையும் இழுத்துச் செல்லும் காதலும் பொங்கி வரும் அன்புமாய்.. தீராக்காதல்தானே அமரத்துவம் வாய்ந்தது..

”அழகே வா அருகே வா.. அழகே வா தலைவா வா..”

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் .. அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன் .. உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்.. உன் தலைவன் அவனே அவனே எனத் தாயின் குரல் கேட்டேன்..”

சொந்தம் வந்தது வந்தது வந்தது.. அந்த சுகமே மச்சான் தந்தது.. சொர்க்கம் வந்தது வந்தது.. அதைச் சொன்னால் என் மனம் துள்ளுது.. மாசங்கள் போனாலும் வருஷங்கள் ஆனாலும் பாசங்கள் போகாது மாமா.. கண்ணேண்ணு கொஞ்ச வேண்டாம்.. கிளியேன்னு கெஞ்ச வேண்டாம் கண்ணாலே பாடம் சொல்லு போதும்.. நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்தப் பொண்ணு வாழும்.. பூப்போன்ற தேகம் தொட்டு சோப்பாலே தேய்ச்சு விட்டு நீராட்ட நீயும் ஒரு சேய்தான்.. வாய்யான்னு ஒன்ன கொஞ்சி வாயார உண்ணச் சொல்லி சோறூட்ட நானும் ஒரு தாய்தான்.... வாழ்ந்தாலும் எந்தன் மூச்சு உன்னோடுதான் உன்னோடுதான்.. போனாலும் உன்னை விட்டு பூவோடுதான் பொட்டோடுதான்.. வாழ்வோம் மாமா வா.. ” இந்தப் பாடல்களை எல்லாம் எங்கள் சரஸ் மாமி பாடக் கேட்ட வேண்டும்.. காதுகள் பெற்றதன் இன்பம் உணரலாம்..

எனக்குப் பிடித்த பாடல்கள் தொடர் பதிவெழுத அழைத்த ஸாதிகாவுக்கு நன்றி.. நானே மறந்திருந்த பல பாடல்களை பாடிப் பார்த்துக் கொண்டேன்.. பாத்ரூம் சிங்கர் பா.. :)) .. பத்து எழுத சொன்னீங்க.. பலதும் எழுதிட்டேன்.. யூ டியூபில் தேடினேன் சிலது கிடைச்சுச்சு., சிலது கிடைக்கலை.. எனவே பாடல் வரிகள் மட்டும்.... நன்றி மக்காஸ் என் பாட்டும்., பாவமும் படிச்சதுக்கு..:))

மிக்க நன்றி பாலராஜன் கீதாவுக்கு.. இந்த பாடல்களின் லிங்கை எல்லாம் எனக்கு மெயிலில் கோப்பாக அனுப்பித் தந்தமைக்கு.. இப்போதுதான் முழுமையுற்றது போல் இருக்கு..

திரு ரமேஷ்.. நீங்கள் கேட்ட அம்மா பாடலும் இங்கே லிங்க் கொடுத்து இருக்கிறேன்.. டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. நன்றி பாலராஜன் கீதா..:))
http://music.cooltoad.com/music/song.php?id=426290&PHPSESSID=2e8c4ed71b791e366f5f385ad5db5617
http://music.cooltoad.com/music/download.php?id=426290&PHPSESSID=2e8c4ed71b791e366f5f385ad5db5617

27 கருத்துகள் :

அ.வெற்றிவேல் சொன்னது…

அனைத்து பாடல்களும் அருமை.. அந்தக் காலத்தில் தேவிகா அழகே வா அருகே வா என்று அழைப்பததை, அது எப்படி அழகே தன்னைத்தானே அழைப்பது என்று தேவிகாவின் அழகை, குறிப்பாக அந்தப் பாடலில் பார்த்து அதிசயித்து உண்டு. இன்னும் சொல்லலாம் என்றால் சொல்லிக் கொண்டே இருக்க ஒரு பதிவு பத்தாது தான்..

அம்பிகா சொன்னது…

உங்க லிஸ்ட்ல இருக்கிற பல பாடல்கள் எனக்கும் பிடிக்கும். இனிமையான பாடல்கள்.
``மலர்கள் சூட்டி.. கர்ணன்,
ஜல்ஜல் எனும் சலங்கையொலி..பாசம்
மிக இனிமை’’

ராமலக்ஷ்மி சொன்னது…

பொழிந்த கானாமிர்தத்தில் நாங்களும் நனைந்தோம். இவற்றில் பல எனக்கும் பிடித்தமானவையே. நன்று தேனம்மை.

தமிழ் உதயம் சொன்னது…

“ அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் மாற மாட்டேனா.. அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா..//

"அம்மா உந்தன் கை வளையலாய் மாற மாட்டேனா... " என்று கேட்டதாய் ஞாபகம். என்ன படம். எனக்கு ரெம்ப பாடல். இந்த பாடல் உங்களிடம் இருக்கிறதா. இருந்தால் தாருங்கள். ”

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

சுவையான கானாமிர்தம்.

இனியவன் சொன்னது…

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன்னை //
இந்த பாட்டெல்லாம் எனக்கு சுப்ரபாதம் மாதிரி(ஒரு காலத்தில்) உங்களூடைய இரசனையில் எல்லா பாடலும் அருமை.

மாணவன் சொன்னது…

அனைத்து பாடல்களுமே காலத்தால் அழியாத எவர்கிரீன் ஹிட்ஸ்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க

மதுரை சரவணன் சொன்னது…

பாடல்கள் அருமை... சுவைப்பட தொகுத்து தந்துள்ளீர்கள். ..புதுமை. வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான தொகுப்புகள்.. இன்னிக்கு இதையெல்லாம் கேட்டாகணும் எனக்கு. உடனெ ஓடறேன் யூ ட்யூபுக்கு :-))

யாதவன் சொன்னது…

அணைத்து பாடல்களும் அற்புதம்

வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

தேனுவின் கானாமிர்தம் அருமை.

எல்லா பாடல்களும் நல்ல பாடல்.

THOPPITHOPPI சொன்னது…

இரவு நரங்களில் மட்டுமே இதுப்போன்ற பாடல்கள் எனக்கு கேட்க்க பிடிக்கிறது.

சந்தான சங்கர் சொன்னது…

மனதில் எங்கோ முனுமுனுக்க செய்யும்
பாடல்களின் வரிகளை தந்து மீண்டும்
அதில் எங்களை லயிக்க வைத்து விட்டீர்கள்
மிக்க நன்றி

ஜிஜி சொன்னது…

உங்க லிஸ்ட்ல இருக்கிற பல பாடல்கள் எனக்கும் பிடிக்கும். இனிமையான பாடல்கள்.

துளசி கோபால் சொன்னது…

உங்க தேர்வு அருமைப்பா. எனக்குப் பிடிச்ச பலதும் அதில் இருக்கு.

கர்ணனின் 'என் உயிர்த்தோழி கேளடி சேதி' எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அப்போ வந்த பாடல்கள் எளிமையா மனசுலே இடம் பிடிச்சுருச்சு. பாடல் வரிகளும் நாலுமுறை கேட்டாலே மனப்பாடம் ஆகிரும்.

பாட்டு ஆரம்பிக்கும் அந்த நொடியே அது என்ன பாட்டுன்னு இன்றும்கூடச் சரியாச் சொல்லமுடியுது!

இப்போ வரும் பாடல்கள் வரிகளும் இசையும்......ப்ச் ஒன்னும் சொல்றதுக்கில்லை. மக்கள் விரும்புகிறார்களாமே!!! நெசமாவா?

பாட்டுப்போட்டிகளிலும் மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் இப்பவும் 'அன்று' பாடியவைகளையே பாடுவதைக் கவனிச்சீங்களா????

துளசி கோபால் சொன்னது…

உங்க தேர்வு அருமைப்பா. எனக்குப் பிடிச்ச பலதும் அதில் இருக்கு.

கர்ணனின் 'என் உயிர்த்தோழி கேளடி சேதி' எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அப்போ வந்த பாடல்கள் எளிமையா மனசுலே இடம் பிடிச்சுருச்சு. பாடல் வரிகளும் நாலுமுறை கேட்டாலே மனப்பாடம் ஆகிரும்.

பாட்டு ஆரம்பிக்கும் அந்த நொடியே அது என்ன பாட்டுன்னு இன்றும்கூடச் சரியாச் சொல்லமுடியுது!

இப்போ வரும் பாடல்கள் வரிகளும் இசையும்......ப்ச் ஒன்னும் சொல்றதுக்கில்லை. மக்கள் விரும்புகிறார்களாமே!!! நெசமாவா?

பாட்டுப்போட்டிகளிலும் மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் இப்பவும் 'அன்று' பாடியவைகளையே பாடுவதைக் கவனிச்சீங்களா????

ஹேமா சொன்னது…

பழைய பாடல்களில்தான் எவ்வளவு இனிமை.நல்ல தெரிவுகள் தேனக்கா !

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி வெற்றி., அம்பிகா., ராமலெக்ஷ்மி., ரமேஷ்.. ( உண்மை ரமேஷ் ., அந்தப் பாடல் வளையொலியில்தான் ஆரம்பிக்கும்.. நான் எனக்குப் பிடித்த வரிகளை எழுதினேன்.. பாடல் சிடி என்னிடம் இல்லை ரமேஷ்..)., புவனா., இனியவன்., மாணவன்., சரவணன்., யாதவன்., சாரல்., கோமதி., தொப்பி., சந்தான சங்கர்.,ஜிஜி., துளசி., ஹேமா..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஹுஸைனம்மா சொன்னது…

அருமையான பாடல்கள் எல்லாமே தேனக்கா.. நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க..

ஆயிஷா சொன்னது…

என்றும் இனிமையான பாடல்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல தேர்வு தேனக்கா.

ஜெய்லானி சொன்னது…

எல்லா பாட்டுமே நான் ரசித்த, ரசிக்கும் பாட்டுக்கள்தான் ....மனசை ரீவைண்ட் பண்ணிட்டீங்க :-)

ஜெய்லானி சொன்னது…

அதே கர்ண்ணில் வரும் “”உள்ளத்தில் நல்ல உள்ளம் “”பாட்டு வரிகள் மறக்க முடியாத தத்துவ வரிகள் :-)

ஸ்ரீராம். சொன்னது…

மிக அருமையான வரிகளைப் பகிர்ந்துள்ளீர்கள். மறக்க முடியாத பாடல்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

மை டியர் அக்கா.... எனக்கும் உங்களுக்கு பிடிச்ச பாட்டெல்லாம் ரொம்ப பிடிச்ச பாட்டு தான்...
"ஜல் ஜல்.. எனும் சலங்கை ஒலி...", "மனம் விரும்புதே....", ""காற்றே என் வாசல் வந்தாய்....",
"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..","மாலையில் யாரோ மனதோடு பேச......",
"புல்வெளி புல்வெளி தன்னில்....",""உன்னை நான் சந்திதேன்...","அத்தை மடி மெத்தையடி....",
"மண்ணில் வந்த நிலவே.. என் மடியில் பூத்த மலரே...அன்பு கொண்ட...", "பார்த்த ஞாபகம் இல்லையோ.."...
இப்படி லிஸ்ட் பெருசா போகுதே அக்கா.............ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா... சூப்பர் செலெக்ஷன்...!!
உங்களுக்கு.. என் அன்பும். அணைப்பும்... அக்கா...!! <3

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஹுசைனம்மா., ஆயிஷா., அக்பர்., ஜெய்., ஸ்ரீராம்., ஆனந்தி..

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...