தமிழ் அன்பருக்கும்.,
தமிழ் அன்பர்களுக்கும்
நண்பர்களுக்கும் வணக்கங்கள்..
* ஆதி மூர்க்கம் விலா
கொய்து செய்த
பாதி மூர்க்கம் நான்..
* இன்றும் இருக்கும்
சாதிச் சண்டையில்
* ஈழம்., ஈராக்.,
ஈரான்., ஆஃப்கனில்
இழுக்குப்பட்டவள் நான்..
* ரத்தம் கக்கும்
யுத்தம் வெறுக்கும்
ஜான்சிராணியும் நான்..
* கபால மாலை
சுமந்து வருந்தும்
பூமித்துர்க்கையும் நான்..
* சிதைக்கச் சிதைக்கப்
பொறுக்காமல் வெடிக்கும்
பூகம்பம்., சுனாமியும் நான்..
* மதத்தின் பெயரால்
(திரு)மணத்தின் பெயரால்
பச்சைகுத்தப்பட்டவள் நான்..
* இனம்., மொழியற்று
இரண்டற்றுக் கிடக்கும்
இன்றைய யுவதியும் நான்..
* சம்பந்தமற்று
சிறையுற்று வாடும்
சின்னப் பெண்ணும் நான்..
* பிரதமர் ., ஜனாதிபதியாய்
கருணை மனு நிர்ணயிக்கும்
பெருமைப்பெண்ணும் நான்..
* எழுத்துப் பரம்பரை
சங்கப் பலகையின்
காக்கைப்பாடினியும் நான்..
* எல்லா சிறையையும்
யோகாவால் மாற்றிய
யோகாவால் மாற்றிய
கிரண் பேடியும் நான்.
* முயலகன் கூட
நிலவறையில் அடக்கிய
கருவறைச் சட்டம் நான்..
* காற்றில் ஏறி
விண்ணையும் சாடிய
கல்பனா சாவ்லாவும் நான்..
* போகப்பொருளாய்
கடத்திய பீஷ்மனை
வீழ்த்திய அம்பை நான்..
* மேரி க்யூரி.,
மேதா பட்கர்.,
மகாஸ்வேததேவியும் நான்..
* என்னுள்ளே என்னை
மலர்த்திக் கொண்ட
மௌனப்பூவும் நான்..
* அனைத்தையும் அணைத்து
அன்பால் நனைக்கும்
அடிமைப் பெண்ணும் நான்..
* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..
* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்..
* இல்லத்துள் அடைபட்டு
உள்ளங்களால் வெளிவந்த
ஆங்சான் சூயியும் நான்..
* சங்கமத்தின் வழி
கருத்தினைப் பகிரும்
கனியின் மொழியும் நான்.
* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..
* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..
தமிழ்மொழி கங்கை..
எங்கள் கவிமொழி யமுனை..
கனிமொழி சரஸ்வதி..
கவிதை முக்கூடலில்
சங்கமிக்க வந்த அனைவருக்கும்
நன்றியும் வாழ்த்தும்..
ஈரோடு தமிழன்பன் அவர்கள் முன்னிலையில்., கலாப்ரியா தலைமையில்., அமைப்பாளர் இளையபாரதி., சங்கமத்தில் சபையேற வாய்ப்பளித்த கனிமொழி., ஞானக்கூத்தன்., கயல் தினகரன்., ஆண்டாள் பிரியதர்ஷிணி., சக்தி ஜோதி ஆகியோர் முன்னிலையில் திங்களன்று தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற கவிதைச் சங்கமத்தில் வாசிக்கப்பட்ட எனது கவிதை..
வாழ்க.. தமிழ்..
வளர்க அதன் புகழ்..
வரும் ஆண்டுகளிலும் இன்னும் பலரை சிறப்படைய வைக்கட்டும் சங்கமம்..!!!
ரொம்ப நல்லா இருக்கு...படிக்கிறப்ப உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியவில்லை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
கவிதை நதியா பாய்கிறது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஜி!!!
பதிலளிநீக்குநல்லாருக்கு உங்க எடுத்துகாட்டுகள்!
எங்கே போனாலும் (சங்கமம், கீற்று, திண்ணை, உயிரோசை) உங்கள் கவிதை தனித்துவமாய் நிற்கிறது. வாழ்த்துகள் உங்களுக்கு, பதிவுலகுக்கும் பெருமை.
பதிலளிநீக்குgood good
பதிலளிநீக்குமகிழ்ச்சி,வாழ்த்துகள்.
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு தேனம்மை.
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு
பதிலளிநீக்குகவிதை ரெம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
SUPER!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅற்புதம் நல்ல சப்ஜெக்ட் எடுத்து கவிதை அரங்கேற்றி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
அற்புதம் நல்ல சப்ஜெக்ட் எடுத்து கவிதை அரங்கேற்றி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
அற்புதம் நல்ல சப்ஜெக்ட் எடுத்து கவிதை அரங்கேற்றி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பிரமாதமாக வந்திருக்கிறது கவிதை....
பதிலளிநீக்குஆஹா! இதத் தான் எதிர்பார்த்தேன். அருமை.
பதிலளிநீக்குஉங்கள் பயணத்தில் இதுவும் ஒரு படிக்கல்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குபெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. உள்ளிருந்து ஊற்றெடுத்த வரிகளும் வெகு அருமை. வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குTHODARNTHU ITHU POLA ETHIRPARKIRAN
KARUNAKARAN
பெண்ணின் பெருமையை அழகாய் சொல்லி விட்டீர்கள் கவிதையாய்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை.
மிக மிக அருமைக்கா
பதிலளிநீக்குவரிகளில், வலுவும்
வேகமும் இருக்கிறது வாழ்த்துக்களக்கா
கவிதை சூப்பர் ஆனால் ஒரு சிறிய குறை கவிதை ரொம்ப சிறியதாக இருக்கு ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகடைசியில... ’பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்ன்னு’ சொல்லியிருந்தா இன்னும் பாந்தமா இருந்துயிருக்குமே.. :))))
பதிலளிநீக்குநல்லாயிருந்ததுங்க.. தாள கதியோட வார்த்தைகள் :)
சிற்சில முரண்கள் இருந்தாலும் கவிதை எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் தோழியே
பதிலளிநீக்குபோகப்பொருளாய்
பதிலளிநீக்குகடத்திய பீஷ்மனை
வீழ்த்திய அம்பை நான்..
எனக்குப் பிடித்த வரிகள் இவை!
வாழ்த்துக்கள்..மகிழ்ச்சி...
பதிலளிநீக்குநன்றி கௌசல்யா., கருணாகரசு., ராம்ஜி., வசந்த்., ரமேஷ்., பத்மா., ஜெரி., சாரல்., குமார்., ஆயிஷா., சித்து., வெற்றி., பிரபாகர்., சாந்தி., ஜோதிஜி., காஞ்சனா., ராமலெக்ஷ்மி., கர்ணன்., கோமதி., மலிக்கா., சசி.,ஸ்ரீராம்., அஷோக்., கீதா., ஆர் ஆர் ஆர்., ஹரி..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி.
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி & வலைச்சரம் :)
பதிலளிநீக்கு