எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 ஜனவரி, 2011

காகித ஓடத்தில் சங்கமத்துக்கு..

”புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற குரலில் எனக்கு நெருக்கமான ஒரு வாஞ்சை.. நல்ல விஷயம் சொன்னார் என் அன்பிற்குரிய., நம் அனைவரின் அன்பிற்கும் உரிய பத்மா.. ( padma reaches மற்றும் காகித ஓடம் என இரண்டு வலைத்தளங்களின்வாசி ...!! )..

மிகச் சமீபமாக இவரது இடுகைகள் சில என்னை உலுக்கும் அளவு வலிமையான படைப்புகளாய் இருக்கின்றன.. ஆடியின் முன்னும் பின்னுமாய் தானாய் தன்னோடு போராட்டம்.. முடிவுறாமல்.. மிக அருமையான வித்யாசமான படைப்புக்கள்.. ( கிறிஸ்துமஸ் தாத்தா கவிதையும் ) ..

முதலாளி வேலை செய்வோருக்கு விசேஷ நாட்களில் துணிகள் வாங்கித் தரலாம். நான் கேள்வியே படாத செயலாக இவரின் உதவியாளர் இவருக்கு பதில் அன்பாக புடவை வாங்கித் தந்துள்ளார்.. அந்த அளவு அன்புச் சுரங்கம் பத்மா..


வலைத்தள நட்புக்கள் எல்லோரையும் முன்னெடுத்துச் செல்வனவாக ., ஆரோக்கியமானதாக இருக்கிறது.. சமீபகாலமாக நான் அதை அதிகம் உணர்கிறேன்..

அவரை சங்கமத்தில் கவிதை சொல்ல அழைத்து இருக்கிறார்கள்.. அந்த சங்கமத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாக சொன்னார் பத்மா. புத்தாண்டின் இன்ப அதிர்ச்சி... இன்னும் சில வலைப்பதிவர்களும் லிஸ்டில் உண்டு.. உறுதிப் படுத்தப்பட்டபின் எழுதுகிறேன்..

சென்னை சங்கமத்தில் ஜனவரி 18 அன்று கிட்டத்தட்ட 100 கவிஞர்கள் கவிதை வாசிக்கப் போகிறார்கள்.. தேவநேயப் பாவாணர் அரங்கில். பத்மா எங்கள் பெயரையும் முன் மொழிந்ததால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இருந்து உமா ஷக்தி அவர்கள் தொலைபேசி மூலம் கலந்து கொள்வதை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்..

”தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என அனைவரையும் இணைத்துச் செல்லும் பத்மாவின் அன்பின் முன் என்ன சொல்ல.. நெகிழ்ந்து போய்க் கிடக்கிறோம். நன்றி பத்மா... !! இந்த ஒற்றைச்சொல் போதாதுதான் என்றாலும் அதை உபயோகிப்பது தவிர ஒன்றும் தெரியவில்லை ..

உங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் நாங்கள் சிறப்பாக கவிதை சொல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வலைத்தள மக்களுக்காக ஒரு வலிமையான இடம் கிடைக்க வேண்டும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.. !!

11 கருத்துகள்:

  1. நிச்சயமாக நீங்கள், பத்மா மேடம் மற்றும் அனைவரும் கலந்து கலக்குவீர்கள் நம்பிக்கை இருக்கிறது.. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //உங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் நாங்கள் சிறப்பாக கவிதை சொல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வலைத்தள மக்களுக்காக ஒரு வலிமையான இடம் கிடைக்க வேண்டும்.
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.. !!//


    நிச்சயமாக உங்கள் ஆசிர்வாதத்துடன் எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்த்னைகளும்... நன்றிங்கம்மா

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். தலைப்பையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி பாலாசி., இரவு வானம்., மாணவன்., கதிர்., ஸாதிகா., ஸ்ரீராம்., ஜலீலா., புவனா., ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாலாசி., இரவு வானம்., மாணவன்., கதிர்., ஸாதிகா., ஸ்ரீராம்., ஜலீலா., புவனா., ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...