எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

விவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..

1. விவ .. சாயம்..************************
சாணி., சருகு.,
வேப்பம் பிண்ணாக்கு.,
மக்கிப் போன தோல்தழை..
மழைபெஞ்சா
மண்ணுழப்பி..

இத்தனையும் விட்டுப்புட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு.,
மேலே அள்ள
மேலுரம் போட்டு..


பருத்தி வரும்னு
பதறிப் பார்த்தும்.,
கத்திரிக்காய்க்கு
மரபணு மாத்தியுங்
காத்திருந்தா

சாயாத்தண்ணியா
கருத்து வந்தது..
சாயத்தண்ணி..
துவைச்ச நுரையாட்டம்..
பார்த்தீனியம் கூட பட்டுப்போக..

குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு..
சுரப்புத் தட்டிப்போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி....

===============================

2. அதீதம்..***************

சுயம் என்பது
வெங்காயத்தோலாய்
உள்ளே ஒன்றுமில்லாமல்..

சருகாய்த் தோல் சுற்றி
பளபளப்பாய்..
உரிக்க உரிய கண்ணீர்..

ஏற்றமும் இறக்கமும்
பழக்கமற்று
எதுவாய் அதுவென்று..

இனம் காண விழையாமல்
எதனுள்ளோ ஒளிந்து
அதாகி..

===========================

3. வெறுங்குடுவை....
*************************

நகராத எனக்கும்
எல்லாப் பக்கமும்
நிழல் தொடர்கிறது..

காலியாய் இருப்பதாலேயே
எல்லாவற்றையும்
ஏற்கும் தகுதி இருப்பதாய்..

ஏற்பவை என் உருவம் ஏற்று
கவிழ்த்த பின்
உருவமற்ற ஓவியமாய்..

எதை ஏற்பது என்பது
என்னால் தீர்மானிக்கப் படாமல்..

இறைமையோ ., கயமையோ.,
சமயத்தில் ஏதேதோவும் நிரம்பி..

உள்கிடப்பவற்றை உணர்கிறேன்..
கலப்பதில்லை அவற்றுள் இரண்டற..
எதாயிருந்தாலும் எப்போதும்..

=================================

4. சிலந்தி..
****************

குடியிருப்பு வலை
யாருக்கோ குப்பையாய்..

இரண்டு தளங்களை இணைத்து
கயிற்றுக் கட்டில்..

எச்சில் நூலில்
கால் நெசவில் வீடு..

தேடி வருவது தவிர
தின்பதில்லை எதையும்..

தேடிப்போவதில்லை
எதன் வாழ்வும் கெடுக்க..

வலை வனத்தில் சிக்கின
பூச்சிகளை வேட்டையாடுவதால்..

சீறும் சிங்கமாய் இல்லாமல்..
சிறிய சிலந்திப் பூச்சியாய்..

டிஸ்கி..1.. :- அதீதம் என்ற புதிய இணைய இதழில் விவ.. சாயம் என்ற என்னுடைய கவிதை 15 - 31 ., ஜனவரி 2011 இல் வந்திருக்கிறது .. நன்றி அதீதம்..:))

டிஸ்கி .. 2.. :- விவ.. சாயம் ., அதீதம்., வெறுங்குடுவை., சிலந்தி என்ற நான்கு கவிதைகளும் 11. 1. 2011 கீற்றுவில் வந்திருக்கிறது.. நன்றி கீற்று..:))

டிஸ்கி.. 3..:- சிலந்தி என்ற கவிதை 12 . 1. 2011 உயிரோசையில் வெளிவந்திருக்கிறது .. நன்றி உயிரோசை..:))

21 கருத்துகள்:

  1. எல்லா கவிதைகளையும் இணைய இதழ்களிலேயே வாசித்து விடுகிறேன். இங்கே மறு வாசிப்பு. எல்லாமே மிக சிறப்பாக பிரமிப்பை தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதைகள். சிலந்தி மிகப் பிடித்தது. வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. அனைத்து கவிதைகளும் அருமை. அதிலும், சிலந்தி - சான்சே இல்லை. கலக்கி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  4. எல்லாக் கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சிலந்தி ரொம்ப பிடிச்சிருக்கு தேனம்மை..

    பதிலளிநீக்கு
  6. மேடம், சிலந்தி கவிதை மிக அருமை...

    பதிலளிநீக்கு
  7. சும்மாவின் அம்மான்னு ஒரு வலைப்பூ பார்த்தேன்... யாருங்க உங்க மதருங்களா...?

    பதிலளிநீக்கு
  8. கவிதைகள் அனைத்தும் சூப்பர்

    பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கம்மா...

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. அனைத்துக்கவிதைகளும் அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  11. பாலூட்டிய பூமியை பார்த்து பதறும் பொது உங்கள் தாய்மனம் தெரிகிறது.
    சிலந்தி அருமை.

    பதிலளிநீக்கு
  12. அருமை. குறிப்பாய் அதீதம், சிலந்தி.

    பதிலளிநீக்கு
  13. எல்லா கவிதைகளும் அருமை தேனம்மை.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ரமேஷ்., ராமலெக்ஷ்மி., சித்து., சரவணன்., சாரல்., பிரபா ( என் அம்மாவோடதுதான் பிரபா..:))0., மாணவன்., புவனா., குமார்., ஸாதிகா., சிவகுமாரன்., அக்பர்., இளம் தூயவன்., ஸ்ரீராம்., கோமதி., சசி

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...