பாடல்கள் முடிந்த பின்னும்
மனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு...
கீறல் விழுந்த
முள்ளில் ஒலிக்கும்
கிராமபோன் ரெக்கார்டாய்...
வயலினிலிருந்து
பிர்காக்கக்களும் சங்கதிகளும்
முடிவில்லாமல்...
மூச்சுக்காற்றுக்கூட
இ(ச்)சையாய் பொழிந்து
அளவில்லாமல்...
தாளக்கட்டும் பாவமும்
தில்லானாக்களும்
அதிகமான பொழுதில்...
சரக்கம்பி அறுந்த மழையாய்
வில்லெடுத்ததும்
நின்ற இசை....
பிரியத்துக்குரியவர்
இல்லாத வீட்டுக்கோ
ஊருக்கோ சென்றது போல்...
அடித்த அலையில் விசிறப்பட்ட
ஜெல்லி மீனாய் தரையில்...
கனவில் வாழ்ந்து
விழித்தெழுந்து மீண்டும்
கனவுலகுக்குள்...
என்னைச்சுற்றி
எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!!
மனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு...
கீறல் விழுந்த
முள்ளில் ஒலிக்கும்
கிராமபோன் ரெக்கார்டாய்...
வயலினிலிருந்து
பிர்காக்கக்களும் சங்கதிகளும்
முடிவில்லாமல்...
மூச்சுக்காற்றுக்கூட
இ(ச்)சையாய் பொழிந்து
அளவில்லாமல்...
தாளக்கட்டும் பாவமும்
தில்லானாக்களும்
அதிகமான பொழுதில்...
சரக்கம்பி அறுந்த மழையாய்
வில்லெடுத்ததும்
நின்ற இசை....
பிரியத்துக்குரியவர்
இல்லாத வீட்டுக்கோ
ஊருக்கோ சென்றது போல்...
அடித்த அலையில் விசிறப்பட்ட
ஜெல்லி மீனாய் தரையில்...
கனவில் வாழ்ந்து
விழித்தெழுந்து மீண்டும்
கனவுலகுக்குள்...
என்னைச்சுற்றி
எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!!
”என்னைச்சுற்றி
பதிலளிநீக்குஎழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!! ”
நாங்களும்தான் இருக்கோம்..........
//இல்லாத மாய உலகில் நான்.....!!! //
பதிலளிநீக்குஅருமையான உலகம் (கவிதை)
//மூச்சுக்காற்றுக்கூட
இ(ச்)சையாய் பொழிந்து
அளவில்லாமல்..//
இந்த வரிகளில் வலி தெறிக்கிறது
அட ஆமாம் பக்கத்துலயே அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்குறதையே மறந்துட்டேன் மாய உலகத்துல
பதிலளிநீக்குநன்றி வேல்கண்ணன் உங்க முதல் வருகைக்கு நிஜமாகவே நேற்று முழுதும் உங்க மௌன புரிதல் மனசுக்குள்ள
பதிலளிநீக்குஉயிரோசையில் வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள்
//மெளனித்த வேளைகள்
என்னை கலவரப்படுத்துகிறது
நான்
மெளனித்த வேளைகள்
உன்னை சந்தேகிக்கவைக்கிறது//
///சரக்கம்பி அறுந்த மழையாய்
பதிலளிநீக்குவில்லெடுத்ததும்
நின்ற இசை..///
///கனவில் வாழ்ந்து
விழித்தெழுந்து மீண்டும்
கனவுலகுக்குள்...
என்னைச்சுற்றி
எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!///
பாலை கடலாகும், சிங்கம் சிலந்தி வலையில் சிக்கும், குரங்கும் காதல் கவிதையாய் தெரியும் மாயவுலகம் இப்படி எங்கெல்லாமோ என்னை திரியவைத்த கவிதை.
அருமை அருமை
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குரொம்ப நன்றி தேனம்மை அக்கா
பதிலளிநீக்கு//பிரியத்துக்குரியவர்
பதிலளிநீக்குஇல்லாத வீட்டுக்கோ
ஊருக்கோ சென்றது போல்...//
பிடித்திருந்தது..
//பிர்காக்கக்களும்//
இதற்கு என்ன அர்த்தம்.. தமிழ்ச் சொல்தானா?
//கனவுலகுக்குள்...
பதிலளிநீக்குஎன்னைச்சுற்றி
எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!! //
அருமை அருமை அருமை..!!
கவிதை நல்லாருக்கு,
பதிலளிநீக்குவார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.
கவிதை அழகு .
பதிலளிநீக்குசுகமான உணர்வை தந்த வரிகள் சிறப்பு
ஸ்டார்ஜன் உங்கள் வேறொரு இடுகைக்கான பின்னூட்டம் இங்கே வந்துவிட்டதால் நீக்க வேண்டியதாக விட்டது
பதிலளிநீக்கு//என்னைச்சுற்றி
பதிலளிநீக்குஎழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!! //
நல்லா இருக்குங்க.மாய உலகு-அழகு :)
கவிதை அழகு!!
பதிலளிநீக்குபாடல்கள் முடிந்த பின்னும்
பதிலளிநீக்குமனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு... வார்த்தைகளை எங்கே பிடிக்கிறிர்கள். அழகான கவிதை.
//ஜெல்லி மீனாய் தரையில்...//
பதிலளிநீக்குஏன் கவலை, கெண்டை, கெளுத்தி எல்லாம் சொல்ல மாட்டீங்கலோ?
:-)
அட்டகாச கவித மற்றும் வார்த்தைகள்..
///கனவில் வாழ்ந்து
பதிலளிநீக்குவிழித்தெழுந்து மீண்டும்
கனவுலகுக்குள்...
என்னைச்சுற்றி
எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்
இல்லாத மாய உலகில் நான்.....!!/////
மிக அருமை.. யோசிக்க யோசிக்க ... அமிழ்ந்து போகிறது மனது..
மிக மிக அற்புதம் கவிஞரே..
பதிலளிநீக்குவார்த்தைகளின் கோர்வை கச்சிதம்...!
பாடல்கள் முடிந்த பின்னும்
பதிலளிநீக்குமனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு...
நல்லா வெளிப்பாடு...
கவிதை முழுவதும் அழகாய் இருக்கிறது...
வாழ்த்துக்கள்...
மாய உலகின் சஞ்சாரம்
பதிலளிநீக்குபஞ்சாரம் ஒலிக்கும் கோழிக்குஞ்சு சப்தம்
பிருகாக்களாய் மாற்றும் கவிதை மொழி
இசை தெளித்த கவிதை
பதிலளிநீக்குமெல்லிசை
வாழ்த்துக்கள்
பிராட்பேண்ட் இணைப்பு கோளறு ஆகவே இரண்டு மூன்று நாட்களாகும் சரியாக
சரியான பின் தொடர்கிறேன்
விஜய்
கணிணி திரையும், தொலைக்காட்சி திரையும் மாயக்கயிறால் பலரை கட்டிப்போட்டிருக்கிறது. இதில் இருந்து விலகுவது எளிது.
பதிலளிநீக்குSwitch off!
கவிதையெல்லாம் தேவையில்லை.
வாசலில் கீரைக்காரியுடன் பேரம் பேசினாலே போதும்.
பைங்கிளி பாரிஜாதம் எப்படி இருக்காங்க நவாஸ்
பதிலளிநீக்குநன்றி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்
அட எனக்குத்தான் மாய உலகம் அப்படின்னு நினைச்சேன்... உங்களுக்குமா?
நன்றி ஸ்டார்ஜன் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பதிலளிநீக்குஉங்க கவிதை எப்படி இருக்காங்க
பட்டியன் உங்க வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்குபிர்காக்கள் என்றால் ம்யூஸிக் நோட்ஸ்
உங்க உலகப் படம் மூன்றும் பற்றின விமர்சனம் அருமை
உங்க மனைவிகிட்டே திட்டு வாங்கியும் பார்த்த நீங்க ஹா ஹா ஹா நிஜமாவே நெஞ்சுறுதியான ஆள்தான்
நன்றி சிவாஜிசங்கர் உங்க இறகிலிருந்து இந்த மாய உலகுக்கு திரும்ப பறந்து வந்தேன்
பதிலளிநீக்குநன்றி அக்பர் உங்க சினேகிதனில் எசப் பாட்டும் நல்லா இருக்குது
பதிலளிநீக்குநன்றி நிகே உங்க பாராட்டுக்கு
பதிலளிநீக்குஅருமை நிகே எதிர்பார்க்கவேயில்லை
அசத்திட்டீங்க பைரவி சிறுகதையிலும்
நன்றி கவிப்பூங்குன்றன் நல்ல பட்டம் கொடுத்து இருக்காங்க உங்களுக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நன்றி சுஸ்ரி உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்குமுறுக்கு எப்ப கிடைக்கும்?
நன்றி தமிழுதயம்
பதிலளிநீக்குஉங்க லீவ் இடுகை அருமை
ஹா ஹா ஹா தொழிலாளிகளே
உங்க முதலாளி உண்மை சொல்லி இருக்கார் பாலோ பண்ணுங்க
கலை
பதிலளிநீக்குஎதை சொல்ல எதை விட
ஐட்டம் ஆறு தள்ளிக்கிட்டுப் போறது யாரு கலக்குறீங்க ...சிரிச்சு முடியல .
அதென்ன மிச்ச எறா சுறா வஞ்சிரம் எல்லாம் உங்களுக்கு பிடிக்காதா.. விட்டுட்டீங்க
நன்றி பலா பட்டறை
பதிலளிநீக்குஉங்க மனிதனும் தெய்வமும் அருமை பலாபட்டறை
நன்றி வசந்த்
பதிலளிநீக்குஅம்மாவும் மகனும் அருமை வசந்த்
நிச்சயம் வசந்தை பார்த்துட்டுத்தான் கடவுள் மத்த புள்ளைங்க வாய பூட்டுனதா கேள்வி
நன்றி கமலேஷ்
பதிலளிநீக்குஉங்க இலக்கணக் கவிதை மிக மிக அருமை கமலேஷ் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம் உங்கள் இந்தக் கவிதையை வைத்து இலக்கணம் படிக்க அருமையான வழி உங்க கவிதை
அசத்துறீங்க கமலேஷ்
நன்றி நேசன்
பதிலளிநீக்குதீண்டலற்று நிறையும் கருவறைகள் பரிதியின் ரேகைகளுடன்
என்ன அருமை நேசன்
உங்களைத்தான் 4 நாளா நான் தேடிக்கிட்டு இருக்கேன் விஜய்
பதிலளிநீக்குஎப்ப சரியாகும் உங்க இணைப்பு
செல்வா நன்றி உங்க கருத்துக்கு
பதிலளிநீக்குகீரைக்காரி 5 நிமிடத்தில் சென்று விடுகிறாளே சுவிட்ச் ஆப் செய்தாலும் வேறு என்ன செய்வது
உங்க திருவெம்பாவை ஏன் விட்டு விட்டு வருது தினம் சிவன் காத்து இருக்கிறார் உங்களுக்காக
கவிதை உலகம்.அது எங்களையே மறக்க வைத்து மறைத்து வைப்பது.
பதிலளிநீக்குநன்றி ஹேமா
பதிலளிநீக்குஉண்மை ஹேமா அவ்வப்போது இது போல் எண்னங்களால் நாமே நம் கதவை அடைத்துக் கொள்கிறோம் ஹேமா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!