எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 டிசம்பர், 2009

ஒப்பனை

அதிகம் ஜரிகை அடைத்த
பட்டுக்களுடனும் நகைகளுடனும்
வலம் வரும் நான்...
ஒரு போதும் முயன்றதில்லை
முகம் மறைக்கும் ஒப்பனைக்கு...
தலைவாரி பூச்சூடி வகிட்டிலும்
நெற்றியிலும் பொட்டிடுவதுடன்
முடிந்துவிடும் என் அலங்காரம்...

மழைவெளித்த ஒரு மாலை
வெளிஉலகறியா நான் ஒரு
ஒப்பனை நிலையம் அடைந்தேன்...
எந்த விஷேஷமும் அவசியமும்
இல்லாமல் ஒரு ஒப்பனை ஆர்வத்தில் ...
முதலில் காஜல் போட்டபோது
கண் அழகாய் தெளிவாய்
இருப்பது போல் ....
பின் ரூஜ்ஜும் தடவி
பழக்கமில்லாமல் அளவுக்கதிகமாய்
செந் நிறமானது என் கன்னம் ...
துடைக்க முயன்றபோது
ஐ லைனர் கண்கள் மீது அப்பியும்
ரூஜ் இன்னும் திப்பியாயும்...
துணைக்கு வந்த என் குழந்தைகளெல்லாம்
என்னைக் கண்டு பதற்றப்பட...
முகத்தைக் கழுவி பொட்டிட்டு
வீடு வந்தேன் நான் குழந்தைகளுடன் ...

39 கருத்துகள்:

  1. அப்ப இந்த ஃபோட்டோ எப்ப எடுத்தது? முன்னாடியா? பின்னாடியா?

    பதிலளிநீக்கு
  2. மேடம் இது உண்மையான அனுபவமா...
    நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. என்னோட கேள்வியை அண்ணாமலையான் கேட்டுட்டாரு!

    அதனால இன்னொரு கேள்வி,
    மேக்கப்பை பார்த்து குழந்தைங்க பயந்த கதையை எப்ப எழுதுவீங்க?

    பதிலளிநீக்கு
  4. Nice Experience Thenammai.It happens once in a while and makes it unforgettable.

    பதிலளிநீக்கு
  5. இயற்கையாய் மஞ்சளும் குங்குமமும் இருக்க்க
    செயற்கையாய் ரூஜும் ஐ லைனரும் தேவையா

    அழகாக அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்

    புரியாதவர்கள் புரிந்து கொண்டால் சரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. அழகு கவிதை. அழகைப் பற்றிக் கவிதை.

    பதிலளிநீக்கு
  7. haa haa

    ஒரே காமெடி பிசாசாயிருப்பீங்க போல...!

    பதிலளிநீக்கு
  8. வடிவேலு மாதிரிதான் போல...நல்ல வேலை நம்மூருகாரப் பய ய்யரும் பாக்கல...அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  9. அழகியல் என்பது ஒப்பனைகளை சார்ந்து அல்ல என்பதை உணர்த்திய கவிதைக்கு நன்றி
    எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ////செந் நிறமானது என் கன்னம் ...
    துடைக்க முயன்றபோது
    ஐ லைனர் கண்கள் மீது அப்பியும்
    ரூஜ் இன்னும் திப்பியாயும்...
    துணைக்கு வந்த என் குழந்தைகளெல்லாம்
    என்னைக் கண்டு பதற்றப்பட...////

    லகலகலகலகலகலகலக - கலக்கல் போங்கோ. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  11. தங்கள் தாய் குறித்து ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவர் பிம்பம் உள்ளது. தனது மிகச் சிறிய வயதில்- எந்த மாதிரி தன் தாயை பார்த்தானோ, அந்த தாயை தான் அவன் கடைசி வரை பார்க்க விரும்புகிறான். தாய் அதிகபட்சமாக ஒப்பனை செய்தால் அவனுக்கு பிடிப்பதில்லை. சென்ற தலைமுறையினருக்கு இந்த தலைமுறை நாகரீகங்கள் பிடிக்காத மாதிரி. உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து பயப்படவில்லை. அவர்களுக்கு உங்களது நவ நாகரீக ஒப்பனைகள் பிடிக்க வில்லை. ஒரு வேளை நீங்கள் பிடிவாதமாக, அந்த ஒப்பனை தான் போட்டு கொள்வேன் என்றால், அந்த குழந்தைகளுக்கு நீங்கள் வேறொரு பெண்ணாக தான் காட்சி தருவீர்கள். அப்போது உங்கள் குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக நீங்கள் பார்க்க முடியாது. இது ஒரு உளவியல் அம்சம். அதை எந்த வார்த்தை ஜாலமுமின்றி கவிதையாக்கி உள்ளீர்கள். இதுவொரு அனுபவக் கவிதையாகவும் இருக்கலாம். அதனால் தான் இதை கருவாக எடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. அழகுக்கு அழகு சேர்க்கப் போன அனுபவம் சூப்பர்.. :)

    பதிலளிநீக்கு
  13. கவிதை நல்லா இருக்கு :))

    எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. ராரா ....மாதிரி இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
  15. wow, ithey pol ella pengalum ninaithal evalavu azagai irukum...

    பதிலளிநீக்கு
  16. கல்யாணங்கள்ல இப்படித்தான் தோணும்.. மேக்கப் இல்லாமயே நல்லாத்தானே இருக்காங்க..னு!

    பதிலளிநீக்கு
  17. சிதம்பரத்துல இருக்கும் போதுதான் எடுத்தது முகம் தொடும் முன்னாடி

    பதிலளிநீக்கு
  18. நன்றி சுயம் தேடும் பறவை உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  19. உங்க சினிமாவுல ஒரு காமெடியா வச்சுக்கலாம் செல்வா

    பதிலளிநீக்கு
  20. ஆமாம் முனியப்பன் ஸார் சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  21. என்னை சரியாகப் புரிந்து கொண்ட சகோதரர் விஜய்க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. நன்றி கோபி
    உங்க பிருந்தாவனம் அருமை

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. ஒரே.....சிரிப்புத்தான் தேனு.

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஹேமா ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க நல்லா சிரிங்க

    பதிலளிநீக்கு
  25. நன்றி வசந்த் உங்க கோபம் என் மேல இல்லை அப்பாடா நிம்மதியா இருக்கு

    பதிலளிநீக்கு
  26. நன்றி புலிகேசி சத்யராஜை ஏன் விட்டுட்டீங்க

    பதிலளிநீக்கு
  27. நன்றி டாக்டர் ருத்ரன்

    முதல் முதலா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி

    புத்தாண்டுப் பரிசாய் என் மனம் கவர்ந்த லா.ச.ரா.., சிங்கம் போன்ற ஜெயகாந்தன் அடடா மிக அருமை நீங்களும் கூட


    கலக்குறீங்க டாக்டர் ருத்ரன்

    பதிலளிநீக்கு
  28. நன்றி வேல்கண்ணன்

    உங்க மௌனபுரிதலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. நன்றி நவாஸ்

    சந்திரமுகி கியாபகம் வந்துருச்சா

    எல்லோரும் சேர்ந்து என்னை இப்படி க்யூவில வந்து வரிசையா கிண்டல் பண்ணுறீங்களே

    :-))))

    பதிலளிநீக்கு
  30. நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை தமிழுதயம்
    ஆனால் இதன் மூலம் நான் உணர்த்த வந்ததே வேறு ..இன்னொவிஷயமும் இருக்கு..

    அது என் வலைத்தளத்திலேயே இருக்கு.. எல்லோரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்டதால் நான் அப்படியே விட்டு விட்டேன் ..

    பதிலளிநீக்கு
  31. நன்றி பட்டியன்

    மகாபலிபுரத்தில் உங்கள் நிழலையே நிஜமான நிழற்படமாக போட்டு இருக்குறது நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  32. நன்றி சிவாஜி சங்கர்

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. நன்றி ராம்
    உங்கள் ப்லாக் ரொம்ப நல்லா இருக்கு
    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி

    சந்த்ரமுகியை நீங்க மறந்துபோயிடக்கூடாதுல்ல

    பதிலளிநீக்கு
  34. ஐமே என்ற சத்தீஷ் நரசிம்மன்

    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி உங்க ராசிபலன் நல்லா இருக்கு சமையல் குறிப்பு கூட

    பதிலளிநீக்கு
  35. அண்ணாமலையான் நான் என்ன ஹைஸ்பீடு கந்தசாமியா.. கொஞ்சம் ஸ்லோதான்

    பதிலளிநீக்கு
  36. இனி வண்ணத்துப் பூச்சி எப்ப விஸிட் பண்ணும் ரிஷபன்

    பதிலளிநீக்கு
  37. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...