வெள்ளி, 18 டிசம்பர், 2009

என்கவுண்டர்

ரொம்ப நாளாச்சு நான் இப்படிக் குமுறிக் குமுறி
அழுது... என்கவுண்டர்ல எசகுபெசகா சுடப்பட்ட
மாதிரி போனில ரங்கமணிக்கிட்ட என் நியோ
கவுண்டரைக் காணலைன்னு சொல்லி ரெண்டு
துண்டு நனையிற அளவு அழுகாச்சி ...

எப்போ பிளாக் ஆரம்பிச்சனோ அப்போவிலேர்ந்து
இதே ரோதனையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டே
அவர் கேட்டார் சினிமா பார்த்து அழுற பழக்கத்தை
நீ இன்னும் விடலயான்னு ஏதோசின்னக்கவுண்டரப்
பார்த்து நான் அழுகிறேனு நினைச்சுகிட்டு....

மத்யானம் சித்த தூங்கிட்டுவரலாம்னு போயிட்டு
வந்தா இங்கே விசிட்டர்ஸ் கவுண்டுள்ள காட்ஜெட்
காலியா இருக்கு.., சைபர்ல முழுச்சுகிட்டு.

கமெண்டு ஓட்டு எல்லாம் அப்புறம் ...முதல்ல
நான் பார்த்து ரசிக்கிறது நியோ கவுண்டரதான்....
எத்தனை பேர் வந்தாக எந்த ஊர்லேர்ந்து
வந்தாகன்னு பார்த்தாதான் சோறு
தண்ணியெல்லாம் இறங்கும்....

பெரியவனை எழுப்பி சொன்னாக்க அடடா இது
என்ன சென்னைக்கு வந்த சோதனைனு
கண்ணத்திறக்காமலே பார்க்கலாம் என்றான்...

ஏதோ வீட்டில் திருடுபோய் விட்டது போல ரொம்ப
பதட்டப்பட்டு சொந்தம் .பந்தம். ஊர் .உறவு. அக்கம்
பக்கம். போனு. இ - மெயில், மெஸஞ்சர், ஜீ டாக்,
பேஸ் புக் எல்லாத்துலயும் ஓடி ஓடி சொல்லிட்டு
வந்தாச்சு...

காலேஜ்ல படிக்கிற சின்னவன்கிட்ட சொன்னா
அவன் ஜிம்முக்கு போறேன் போயிட்டு வந்து
டைம் கிடைச்சா பார்க்கலாம்னான் ..
அப்பறம் சும்மா சும்மா சும்மா ஆரம்பிச்சதுலேர்ந்து
அவன்கிட்டே இப்படியே ஏதாவது செஞ்சுகொடு.,
மாத்திப் போடுனு ரப்சர் பண்ணா..

கொஞ்ச நாளா வீட்டுப்பக்கம் வர்றவங்க எல்லாம்
அலர்ஜியால பாதிக்கப்படுறாங்க எல்லாம் நம்ம
ப்ளாகோமேனியாதான்.. அடுத்த வொகேஷனுக்கு
கூட எல்லாரும் சென்னை ட்ரிப்பை கான்ஸல் பண்ணிட்டாங்கன்னாபார்த்துக்குங்க நம்ம
அறுவையோட மகிமையை..

ஏதோ புதுசா பொறந்த புள்ளய காட்டுறமாதிரி
வீட்டுக்கு வர்றவங்க கிட்ட ப்ளாக்க காட்டுறதும்
தப்பிக்கப் பார்க்குறவங்ககிட்ட பில்லு மாதிரி
ப்ளாக் ஐடியை எழுதிக் குடுக்குறதும் பத்தும்
பத்தாதுக்கு அவங்க செல்போனுல வேற அத
மெஸெஜ் பண்ணுறதுமா இருந்ததால வந்த
விருந்தும் வரும் விருந்தும் பயந்துருச்சு..

அப்பறம் என்னன்னா நாம எதாவது ஊருக்குப்
போனுனாக்கூட போணுமேன்னு மூஞ்சியத்
தூக்கி வைச்சுக்கிட்டே போறது...
போற வீட்டுல எல்லாம் நெட்டு இருக்கான்னு
பார்க்குறது ....அப்புறம் அவங்க வீட்டுலயே
ரெண்டு மணி நேரம் நெட்டுல உக்கார்ந்து
அவங்களப்படுத்துறதுன்னு கணக்கு வழக்கே இல்லை..

இன்னைக்கு வீட்டுல என்ன கமெண்டுன்னா ,"எப்பப்
பார்த்தாலும் சின்னப் பிள்ளைங்க மாதிரி நெட்டுல
உக்கார்ந்து இருக்குறது .,காலையில எழுந்திரிச்ச
வொடனே பல்லு கூட தேய்க்காம நியோகவுண்டர
முறைச்சுப் பார்க்குறதுனு ,"...நாம அவங்களபோன
வருஷம் என்னன்ன சொன்னமோ அதயெல்லாம்
ஞாபகம்வச்சு நம்மள சொல்றதுனு ஒரே கலாட்டா..

இருபத்தியெட்டு இருபத்தியெட்டுனு நாடுங்களப்
பார்த்துப் புளகாங்கிதம் அடையிறது .,ஆயிரத்தி
நானூத்தி எண்பத்திரெண்டுன்னு எண்ணிக்கிட்டே
இருக்கிறதுனு ஒரு வரமுறையில்லாம நான்
பண்ணிக்கிட்டு இருந்ததுக்கெல்லாம்
நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன் ...

அதுவே ஒழுங்காத்தான் எண்ணுது இவுங்கவேற
உக்கார்ந்து எண்ணிகிட்டுனு... அதுல பாருங்க...
அராப் எமிரெட் மட்டும் எவ்வளவுன்னு தெரியாது
கூட்டுனம்னாத்தான் தெரியும் மிச்சஆளுங்க அவங்கன்னு

இதைஎல்லாம் திரும்ப சொல்லி நல்லா வாங்கிக்க
வேண்டாம்னு எப்பவுமே அதிகாரமாவே கேட்டுப்
பழக்கப்பட்டதால கொஞ்சம் சிரமப்பட்டு கொரல
தாழ்த்தி சின்னவன்கிட்ட போனில சொன்னவுடனே
சரி போனா போகுதுனு புதுசு ஒண்ணு
போட்டுக்குடுத்துட்டான்

இந்த ப்ளாகர்ல ஒரு பிரச்சனை என்னன்னா நாம
ஏதாவது ஆசப்பட்டு நாமளா ஒரு கேட்ஜெடை
இணைப்போம்னு போனா அவசரக்குடுக்கமாதிரி
லோட் ஆகுறதுக்குள்ள வேற எதையாவது
ஆராய்வோம்... அது திடீர்னு காணாமல் போயிரும்
இந்த நேரத்துல நீ என்ன பண்ணிக்கிட்டு
இருந்தாய்னு கேக்கும்.... அது தெரிஞ்சால்
நானே சரி பண்ணிக்குவேனேனு நினைச்சுக்கிட்டு
எல்லா இடமும் போய் கம்ப்ளைண்ட்
கொடுப்போம்... அப்புறம் ஏதாவது மனசு வந்து
திரும்பக்கொடுக்கும் ....

முகப்புத்தகத்துல சித்ரா சாலமோன் சொன்னாங்க
எல்லாத்தையும் ஒரு பாக் அப் எடுத்து
வைச்சுக்குங்கன்னு அதைதான் செய்யணும்...
அட.. திரும்பி வந்துது பார்த்தால் ரெண்டு
கவுண்டரும் இருக்காங்க...

அப்புறம் ரொம்ப நன்றிங்கப்பா என்னோட
கஷ்டத்துல பங்கு எடுத்து கேள்வி கேட்டு
அறிவுரையெல்லாம் கொடுத்த அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
குறிப்பா அமுதா தமிழுக்கும்

33 கருத்துகள் :

Chitra சொன்னது…

சினிமா பார்த்து அழுற பழக்கத்தை நீ இன்னும் விடலயான்னு ஏதோசின்னக்கவுண்டரப் பார்த்து நான் அழுகிறேனு நினைச்சுகிட்டு.... ....குச்சி மிட்டாய் கீழே விழுந்துட்டு என்ற உங்கள் அழுகையும் அழகு. திரும்பி கண்டு கொண்டு குதூகலித்த உங்கள் சிரிப்பும் அழகு.

பா.ராஜாராம் சொன்னது…

தேனு..
நீங்கதானா?செம்ம்ம கலக்கல்!
good!keep rockking!

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

ஹ ஹ ஹா

பிலாக் எழுதுறதைய்ய்ம் அதனோட விளைவுகளையும் நகைச்சுவையாய் சொல்லியிருக்கீங்க தேனக்கா..

ஆமா ஊருகீரு போனாகூடவா...?

சரித்தேன்

உங்களுக்கு ப்லாக்கோபோபியா வந்துருச்சு....

புலவன் புலிகேசி சொன்னது…

ம் எடுத்து வச்சுக்குங்க..இந்த இணைப்பு அதற்கு உதவியா இருக்கும்...
http://athekangal.blogspot.com/2009/12/settings-export-blog-down-load-blog.html

அண்ணாமலையான் சொன்னது…

உங்களுக்கு ப்லாக்கோபோபியா வந்துருச்சு....” அப்படித்தான் நினைக்கறேன்..

புதுகைத் தென்றல் சொன்னது…

ஹி ஹி ஹி ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை

:))

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

:)))))))

PPattian : புபட்டியன் சொன்னது…

ம்.. நகைச்சுவைலயும் கலக்கறீங்க... கவுண்டர் திரும்பி வந்ததில் சந்தோஷம்.. :)

ரிஷபன் சொன்னது…

அடக் கஷ்டமே.. இப்ப அடுத்த பதிவுக்கு யோசிச்சத இப்படி பொசுக்குனு போட்டுட்டீங்களே.. இந்த அவஸ்தை அப்ப பொதுதானா.. இப்பதான் நிம்மதி.. ஜாலியான பதிவு..

Susri சொன்னது…

உங்களுக்கு ப்லாக்கோபோபியா வந்துருச்சு ஹி ஹி!!

tamiluthayam சொன்னது…

வலைப்பூ வைத்திருக்கும் எல்லோருக்கும் இதே அனுபவம் தான். நீங்கள் அதையே ஒரு இடுகையாக்கி விட்டீர்கள்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா
உங்க ஆலோசனைக்கு நட்பு பத்தி நல்லா அருமையா சொல்லி இருக்கீங்க சித்ரா

thenammailakshmanan சொன்னது…

நன்றி மக்கா
எப்பிடி கண்டு பிடிச்சீங்க
உங்க முதல் கவிதையைப் படிச்சவுடனெ தலை வாழை இலை பார்த்து எனக்கும் பசி வந்துருச்சு அப்புறம் சாப்பிட்டீங்களா இல்லையா

thenammailakshmanan சொன்னது…

வசந்த் ப்ளாக் டெம்ப்லேட் அற்புதம்

எனக்கு ப்ளாக்கோ போபியான்னு கண்டு பிடிச்சு சொன்னதுக்கு நன்றி

கவிதை(கள்) சொன்னது…

நல்ல காமெடி சென்ஸ் உங்களுக்கு

அடிக்கடி இதுமாதிரி வயிறு குலுங்க சிரிக்க வைங்க

விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவன் புலிகேசி
ராகவன் நைஜீரியாவைப் பின்பற்றின உங்க பதிவர் சந்திப்பும் நல்லா இருக்கு

thenammailakshmanan சொன்னது…

அண்ணாமலையானே
நல்லாத்தான் கிளப்புறீங்க பீதிய !!!ப்லாக்கோபோபியாவா!!!!

thenammailakshmanan சொன்னது…

உங்க தூக்கத்துக்கும் என்னோட ப்லாக்கோபோபியாவுக்கும் டாக்டர் ருத்ரன் கிட்டே கேட்கலாமா புதுகை தென்றல்

thenammailakshmanan சொன்னது…

கிளியனூர் இஸ்மத் முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி..

6 வது அறிவில் உங்க கவிதை அருமை

//அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...//

thenammailakshmanan சொன்னது…

நன்றி பட்டியன்
பொண்ணோட சேர்ந்து ரைம்ஸெல்லாம் சொல்லுறது நல்ல பழக்கம்தான்

குட் :)

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன் உங்க கருத்துக்கு

அட இந்த இக்கட்டுக்கு ஒரு ஜாலியா

:-))))


ரிஷபன் ஒரு சின்ன அட போட வைக்கிறது உங்க ம்

thenammailakshmanan சொன்னது…

சுஸ்ரி என்னமோ பலாக்காய் கூட்டு பண்ணுன மாதிரி சந்தோஷமா எனக்கு ப்லாக்கோபோபியான்னு கண்டுபிடிச்சுட்டீங்களே

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம்

உங்க கடனற்ற வாழ்வு குறைவற்ற வாழ்வு
என்ற வார்த்தை அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

போட்டிக் கவிதைக்குப் பின் ஒண்ணும் காணலியே

என்ன வேலை அதிகமா

S.A. நவாஸுதீன் சொன்னது…

ஹா ஹா ஹா. என் கவுண்டர் சூப்பர்ஹிட்.

ரொம்ப சுவாரசியமா எழுதியிருக்கீங்க.

ஜோதிஜி சொன்னது…

வலைப்பூ வைத்திருக்கும் எல்லோருக்கும் இதே அனுபவம் தான். நீங்கள் அதையே ஒரு இடுகையாக்கி விட்டீர்கள்

உண்மை

ஹேமா சொன்னது…

தேனு சிரிச்சு முடில.நீங்கதானானு கூட ஒரு சந்தேகம்.ஒரு முறை மேல போய்ப் பாத்து உறுதியும் பண்ணிகிட்டேன்.அசத்தல் பதிவு.

Sivaji Sankar சொன்னது…

ஹா ஹா ஹா.

thenammailakshmanan சொன்னது…

நவாஸ் கவுண்டர் ஒன்னுக்கு ரெண்டு பேரா இருந்து தீர்ப்பு சொல்றோம்னு சொல்லிட்டாங்கப்பு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜோதிஜி உங்க கருத்துக்கு

உண்மை ஜோதிஜி நூலகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி குழந்தை நிலா
என்ன அழகான பேர்

உங்களுக்குள்ளும் மாற்றங்கள் நல்லா இருக்கு ஹேமா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சிவாஜி சங்கர்

உங்க இறகுக் கவிதைகள் அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...