வியாழன், 3 டிசம்பர், 2009

இசைவு பிடிமானம்

நிலவு மரத்திலிருந்து
நட்சத்திரங்கள் விடியலில்
பழுத்த இலையாய்
உதிர்ந்து....

ஜன்னல் கம்பிகளுக்குள்
பறக்கவியலா பறவையாய் ...
வீடென்ற கூட்டுக்குள்...

குழந்தைகள் பறவைகளாக
பரந்த வானத்தில்
விரிந்த இறக்கைகளுடன்....
வெறுங்கூடாகிப் போனது வீடு....

முந்தானைக்குள்
முடிச்சிட்டு இருந்தேன்
தொட்டுப் பார்த்தால்
வெறும் முடிச்சு மட்டும்...

இராணித்தேனீயும்
வேலைக்காரத்தேனீயுமாய் நானிருக்க
ஆண்தேனீக்கள் அலைச்சலில்
அவரவர்க்கான தேடலில்....

மீன் தொட்டியின்
ஆரஞ்சு கறுப்பு
வெள்ளை மோலிகளுடன்
சக்கர் மீனாய் நானும்...

நீ விழித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்து
அலைந்துகொண்டு...

உனக்கு காய்ச்சலடித்தபோதெல்லாம்
எனக்குக் காயடித்ததுபோலும்
சளிப்பிடித்த போதெல்லாம்
எனக்கு சனிப்பிடித்தது போலும்
பிச்சியாய்க் கலங்கி....

பரிசுகளும் கோப்பைகளும்
பாராட்டுப் பத்திரங்களும்
நீ பெற்றபோதெல்லாம்
புதிதான பூவுடலுடன்
பறந்து மிதந்து....

அன்புப்பிடி என நினைத்து
மூச்சுத்திணரும்வரை அழுத்திப்
பிடித்து மகிழ்ந்திருந்தேன்...

விட்டுவிட்டால்
மூழ்கிவிடுமோவெனப்
பயந்து...

விட்டபின் தான் தெரிந்தது
தண்ணீருக்குள்ளும் உன்னால்
மூச்சுவிட முடியுமென.....

21 கருத்துகள் :

balakavithaigal சொன்னது…

அன்புப் பிடி .ஆம் அன்பை பாசத்தை அனுபவித்து நட்பை உணர முடியாதவர்கள் கலைஞராகவோ கவிஞராகவோ இருக்க முடியாது.உங்கள் கவிதை வெறும் சொற்களில்லை.அனுபவம்
நன்றி தேனம்மை

வினோத்கெளதம் சொன்னது…

அருமைங்க..எப்படி எல்லாம் யோசிச்சு எழுதுரிங்க..

தினேஷ் பாபு.ஜெ சொன்னது…

அன்புப்பிடி என நினைத்து
மூச்சுத்திணரும்வரை அழுத்திப்
பிடித்து மகிழ்ந்திருந்தேன்...

விட்டபின் தான் தெரிந்தது
தண்ணீருக்குள்ளும் உன்னால்
மூச்சுவிட முடியுமென.....


அழகு உங்கள் வார்த்தைகள்.....


உங்கள் அனுபவம் பேசுகிறது

கவிதை(கள்) சொன்னது…

பூக்களை விட்டதுக்கு அப்புறம் உங்கள் கவிதைகள் எங்கெங்கோ கொண்டு செல்கிறது எனை.

நிஜமாகவே இப்பிடியெல்லாம் யோசிக்கமுடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்

அசத்தல்கள் தொடரட்டும்

கவிதை போட்டியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்
(http://www.tamil.blogkut.com/uraiyaadal.php)

விஜய்

புலவன் புலிகேசி சொன்னது…

//அன்புப்பிடி என நினைத்து
மூச்சுத்திணரும்வரை அழுத்திப்
பிடித்து மகிழ்ந்திருந்தேன்...
//

அருமைங்க...உங்கள மாதிரில்லாம் எனக்கு எழுத வராது...

tamiluthayam சொன்னது…

கவிதை எழுத தனி தேடல் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.

Suvaiyaana Suvai சொன்னது…

அன்புப்பிடி என நினைத்து
மூச்சுத்திணரும்வரை அழுத்திப்
பிடித்து மகிழ்ந்திருந்தேன்...

விட்டபின் தான் தெரிந்தது
தண்ணீருக்குள்ளும் உன்னால்
மூச்சுவிட முடியுமென

அருமை!!!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை

வீட்டில் தனித்திருக்கையில் - ஆண்கள் அலுவலில் வெளியுலகில் - ராணித்தேனியாய் வீட்டில் - குடும்பம் ஒன்று சேரும் போது அன்புப்பிடியாய் இறுக்கி மகிழ்ந்து - விட்டுவிட்டால் மூழ்கிப்போய் விடுவோமோ என்ற ஐயத்தில் விட்ட பின் அறிந்தது - நீருக்குள்ளும் மூச்சு விட முடியுமென

அருமை அருமை கற்பனை அருமை

நல்வாழ்த்துகள் தேனம்மை

S.A. நவாஸுதீன் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு மேடம். அன்பின் பிடிமானத்தில் மூச்சுமுட்டுகிறது ஆனாலும் அதுதானே பிடித்திருக்கிறது. மிக அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா

அன்பு எல்லோருக்குமானது தானே

thenammailakshmanan சொன்னது…

நன்றி வினோத் உங்க வரவுக்கும் பாராட்டுக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தினேஷ் பாபு

உங்க அழகு கவிதை போலத்தான் இதுவும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

என்னையும் கவிதைப் போட்டியில் எழுதச் சொல்லி உற்சாகப் படுத்துவதற்கு நன்றி விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவரே

உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி

thenammailakshmanan சொன்னது…

தமிழுதயம்

மிக அருமையான கோர்வையான கதை


மனித நேயம் மிக்க பெண் அவள்

உங்களுக்கு பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

வாங்க சுவையான சுவை

இடியாப்பம் அதிரசம் பணியாரம் பன்னீர் பட்டர் மசாலான்னு கலக்குறீங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீனா சார்

உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அன்பு எல்லோருக்குமானது தானே

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸுத்தின்

உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி


உங்க அன்புக்குழந்தை நலமா

ஹேமா சொன்னது…

தேனு,என்ன ஒரு அனுபவ உண்மைகள்.
இப்போ உங்கள் அன்பின் பிடிக்குள் நாங்கள்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா

வாங்க இப்பல்லாம் உங்களை அடிக்கடி காணமுடிவதில்லையே தோழி

வேலைகள் அதிகமோ..?

நன்றி உங்க பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...