எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 டிசம்பர், 2009

நட்பு

ஊர்விட்டு ஊர்
நாடுவிட்டு நாடு
தேசம்விட்டு தேசம் ஏன்
ஜென்மம்விட்டு ஜென்மம்
கடந்தும் கூட தொடரும்
கால வர்த்த பரிமாணம்
அற்றது நம் நட்பு ...

பிரபஞ்ச செடியின்
சருகாகவோ
தளிராகவோ பூவாகவோ
மரித்துக்கொண்டும்
பூத்துக்கொண்டும் நாம்...

புத்தகங்களோ பூக்களோ
பழக்கூடையோ இனிப்போ ஏன்
ஒரு டீத்தூள் பாக்கெட்டோ கூட
கொண்டு எனைப்பார்க்க
எங்கிருந்தாவது வருகிறாய் நீ....

பாதியான உடலும் உணர்வும் கொண்டு
முழுமையடைய விரும்புவதாய்...

பரவசமாய் எதிர்பார்த்துக் காத்திருந்து
அலையோடு அலை மோதுவது போலும்
கடலோடு நதி சங்கமிப்பது போலும்
இயல்பாய் இருக்கிறது அது.....

ஒரு வாசிப்போ பின்னூட்டமோ
பாராட்டோ தந்து எனக்கான இருப்பை
மகிமைப் படுத்துகிறாய் நீ....

நான் மலையைப் போலும்
கடலைப் போலும் இருப்பதாக
எண்ணுகிறாய் நீ...
என்னுள்ளே கண்டத்திட்டுக்கள்
அதிர்வதைப் புரியும் வரை....

ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்வதும்
புன்னகைத்துக் கொள்வதும்
கை பிடித்து இறுக்கிக்கொள்வதுமே
போதுமானதாய் இருக்கிறது
இந்த ஜென்மத்தின் பிரிவுக்கும்
அடுத்த ஜென்மத்தின் சந்திப்புக்கும்....

இனம் மொழி மதம் ஜாதி கடந்து
உனக்காக பிரார்த்திக்கொண்டும்
உனக்கான அன்பை கண்களில்
தேக்கிக் கொண்டும் ஆவலாய் என்றும்....

பி.கு.
என்னைத் தன் அன்பாலும் விருதுவழங்கியும்
மகிழ வைத்த மேனகாசத்யாவுக்கும் சுஸ்ரிக்கும்
என் வாசகர்கள் அனைவருக்கும்
இந்த கவிதை சமர்ப்பணம்

24 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் தேனம்மை

    நட்பு இந்த இணைய வெளி வழங்கும் அரிய கொடை

    தேச தூரங்கள் கண்ட இடைவெளிகள் கடந்து
    கசியும் நேசத்தின் துளி ஆயுள்ரேகையை நீட்டுவிக்கும் அற்புதம்

    சமர்ப்பிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படி சொல்வது..

    நெகிழத்தரும் நட்புதான் சரி

    :)

    பதிலளிநீக்கு
  2. இதயம் கனக்குது சகோதரி

    பல புள்ளிகளாய் சிதறி கிடக்கும் நம்மை இணைப்பது இந்த வலை தானே

    எனக்கு தெரிந்து வாசகர்களுக்காகவே எழுதப்பட்ட முதல் கவிதை இதுதான்

    மிக்க நன்றி இறைவனுக்கு தங்களை அறிமுகப்படுதியதற்கு

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. வாவ் நட்பு பற்றிய கவிதை சூப்பர் அக்கா.மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. //இனம் மொழி மதம் ஜாதி கடந்து
    உனக்காக பிரார்த்திக்கொண்டும்
    உனக்கான அன்பை கண்களில்
    தேக்கிக் கொண்டும் ஆவலாய் என்றும்....

    // கலக்கிட்டீங்க சகோ.....

    பதிலளிநீக்கு
  5. நல்ல நட்பு பாராட்டும் கவிதை.....

    பதிலளிநீக்கு
  6. நட்பு - இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் இத்தனை நாளும் நினைத்து இருந்தேன்.

    மிக அருமையாக விவரித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றியும் வாழ்த்தும் தேனு.

    பதிலளிநீக்கு
  8. //நட்பு - ஒருவரை ஒருவர்
    பார்த்துக் கொள்வதும்
    புன்னகைத்துக் கொள்வதும்
    கை பிடித்து இறுக்கிக்கொள்வதுமே
    போதுமானதாய் இருக்கிறது
    இந்த ஜென்மத்தின் பிரிவுக்கும்
    அடுத்த ஜென்மத்தின் சந்திப்புக்கும்....//

    இதைவிட அழகாக சொல்லமுடியாது. நட்புக்கு மேலும் ஒரு கிரீடமாய் இந்தக் கவிதை.

    பதிலளிநீக்கு
  9. நட்புக்கவிதை அருமையோ அருமை.

    http://niroodai.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. //ஒரு வாசிப்போ பின்னூட்டமோ
    பாராட்டோ தந்து எனக்கான இருப்பை
    மகிமைப் படுத்துகிறாய் நீ....//

    நட்பு அழகாக வெளிப்பட்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  11. நட்பு குறித்த உங்கள் பதிவு.நட்பின் கண பரிமாணங்களை ஆழமாக உணர்த்தியது.உறவோடு பகிர்ந்து கொள்ள முடியாத்தைக் கூட நட்பில் பகிரலாம்.நட்பில் கரைந்தே உயிர் வாழும் என் போன்றோர்க்கு இதன் தாக்கம் அதிகம். உங்கள் நட்புக் கிடைத்ததற்கு ஆயிரம் நன்றிகள்.நட்பு தான் நம் வாழ்க்கையை நடத்துகிறது......

    பதிலளிநீக்கு
  12. அன்பின் தேனம்மை

    நட்பு - அதன் இலக்கணம் அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜென்மத்தின் பிரிவினிற்கும் அடுத்த ஜென்மத்தின் சந்திப்பினிற்கும் பாலமாக ஒரு நிமிட சந்திப்பே போதுமெனப் பறை சாற்றும் கவிதை

    நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  13. நன்றி நேசன்
    நேயத்தால் ஆனதுதானே வாழ்வு
    அருமை

    பதிலளிநீக்கு
  14. நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

    உங்களைப் போன்ற சகோதரரைக் கொடுத்ததற்காக நானும் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் விஜய்

    பதிலளிநீக்கு
  15. நன்றி மேனகா
    என் அன்புத் தங்கை நீங்கள்

    பதிலளிநீக்கு
  16. கமலேஷ் வாங்க

    உங்க வரவுக்கு வாழ்த்துக்கும் நன்றி

    கல்பனா சாவ்லா பற்றி உணர்வு பூர்வமாக எழுதி கலங்க வைச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
  17. நன்றி ராகவன் சார்

    உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி

    நீங்க இல்லாம என் இடுகைகளே இல்லை

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஹேமா

    மாவீரன் நாள் குறித்து உங்க இடுகையில் பார்த்தேன்

    கறுப்பான பதியம் அற்புதம் ஹேமா

    கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

    பதிலளிநீக்கு
  19. நன்றி நவாஸுத்தின்

    உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. நன்றி மலிக்கா

    உங்கவீட்டு செல்லப் பையனைப் பார்த்தோம்

    நல்லா இருக்காரு

    பதிலளிநீக்கு
  21. நன்றி புலவரே

    உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  22. நன்றி பாலா

    உங்கள் காதல் தோப்பின் கொள்கை முழக்கம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  23. நன்றி சீனா சார் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    நட்பு எல்லோருக்குமானது தானே

    இடம் பொருள் காலம் அற்றது

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...