எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

முதிர்கன்னிகள்

22.11.1984 கல்லூரிக் கவிதை

அந்தப்பூக்கள் வாடிக்கொண்டு
ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும்
அந்தப்பூக்கள் வாடிக் கொண்டு ...

காம்புக்கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன ...


கரங்களின் தொடுதல்களுக்குக்
காத்திருந்த அவைகளுக்குக்
காற்றின் முத்தங்கள் கூடக்கிடைக்காமல்...

திரும்ப திரும்ப மேல்வந்துவிழும்
அக்கினிக்கேள்விகளுக்கு பதில்
தெரியாத அசட்டு மாணவனாய்
அவமானப் பட்டுச் சுருங்கி...

மெல்லிய பூக்கள்
வரதட்சணையில்லாப் பெண்ணாய்
வெய்யில் ஏற ஏறக் கிழவியாகி ...

காம்பறுக்கப்பட்ட அந்தபூக்கள்
தெய்வங்களுக்கு மட்டுமல்ல
பிணங்களுக்குக் கூடப் போடப்படாமல் ....

யாருமறியாமலே புஷ்பவதியான அவை
தம் மரிப்புக்குக் காலையிலேயே
கண்ணீர் வடித்து பனித்துளியாய் வடிந்து...

காய்ந்த பூக்கள் கடைசியாய்க்
கருணையுடன் அனுமதிக்கப்படுகின்றன
மண்ணை முத்தமிடுவதற்கு...

அந்தப்பூக்களுக்கு வேரும் இல்லை
கிளையும் இல்லை
மகரந்தப்பையையும்
மணத்தையும் தவிர...

விதையைப்பொதித்து வைத்திருக்கும்
அந்தப் பூக்கள் விதைக்க
நிலமில்லாமல் மௌனித்து...

தங்கள் ஞாபகங்களைக்
காற்றுக்குத்தானமாகக் கொடுத்து விட்டு
மண்ணில் விழும் அந்தப் பூக்கள்
தங்களுக்குத் தாங்களே
மண்சமாதி கட்டிக் கொண்டு...

18 கருத்துகள்:

  1. //மெல்லிய பூக்கள்
    வரதட்சணையில்லாப் பெண்ணாய்
    வெய்யில் ஏற ஏறக் கிழவியாகி ...
    //

    நல்ல ஒப்பீடு...என்னவொரு சிந்தனை இந்த பூக்களின் காதலிக்கு...

    பதிலளிநீக்கு
  2. முதிர்கன்னிகள் குறித்த அனுதாப பதிவுகள் எனக்கு
    உடன்பாடில்லை.முதிர்கன்னிகள் உருவாக காரணமாய் இருக்கும் இந்த சமூக அமைப்பைச்
    சாடுகின்ற பதிவுகள் தான் இன்றையத் தேவை.
    1984 -ல் எழுதியதால் பரவாயில்லை

    பதிலளிநீக்கு
  3. // தங்கள் ஞாபகங்களைக்
    காற்றுக்குத்தானமாகக் கொடுத்து விட்டு
    மண்ணில் விழும் அந்தப் பூக்கள்
    தங்களுக்குத் தாங்களே
    மண்சமாதி கட்டிக் கொண்டு..//

    அப்பா... பிரமாதம்... மண்சமாதி கட்டிக் கொண்டு... எங்கேயோ போயிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  4. 25 வருஷத்துக்கு முன்னாடியே உங்க சிந்தனைகள் பரந்து விரிந்து இருக்கின்றன. பாராட்ட வார்த்தைகளில்லை.

    ///அக்கினிக்கேள்விகளுக்கு பதில்
    தெரியாத அசட்டு மாணவனாய்
    அவமானப் பட்டுச் சுருங்கி...

    மெல்லிய பூக்கள்
    வரதட்சணையில்லாப் பெண்ணாய்
    வெய்யில் ஏற ஏறக் கிழவியாகி ...///

    கவிதை அருமை என்று சொல்லத்தடுக்கும் வ(லி)ரிகள்.

    பதிலளிநீக்கு
  5. கவிதை அட்டகாசம்.. இருபத்தைந்து ஆண்டுகளில் கொஞ்சமாய் நிலைமை மாறியிருந்தாலும், உண்மை என்றும் உண்மைதானே..

    பதிலளிநீக்கு
  6. மெல்லிய பூக்கள்
    வரதட்சணையில்லாப் பெண்ணாய்
    வெய்யில் ஏற ஏறக் கிழவியாகி ...

    அருமை!!!!

    பதிலளிநீக்கு
  7. நன்றி புலவரே உங்க பாராட்டுக்கு

    உங்க ஏற்றத்தாழ்வு படித்தேன் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. பரிதியன்பன் அருமை (பாலா கவிதைகள்)

    நீங்க ஐ டிவியில் வந்தது பார்த்தேன்

    புதுவை அரசாங்கத்தால் இரண்டு நூல்களுக்கு பரிசு பெற்றவரா

    வாழ்த்துக்கள்

    உங்கள் பேட்டி முழுவதும் அருமை

    நிறைய புத்தகங்களும் வெளியிட்டு இருக்கீங்க

    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. நன்றி ராகவன் உங்க பாராட்டுக்கு

    வெண்டைக்காய் மோர்க்குழம்பும் பாகற்காய் பிட்ளையும் செய்து சாப்பிட்டீர்களா ராகவன்

    ஆனா உங்க பினூட்ட கவிதைகளை மிஸ் பண்றோம்

    மிக அருமை

    அந்தப் பூ பெயரை யாரவது சொன்னா எனக்குத் தெரிவியுங்க ராகவன்

    அடுத்த பூக் கவிதைக்குத்தான்

    :-)))))

    பதிலளிநீக்கு
  10. நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

    உங்க காதல் எக்ஸ்டஸி வெற்றியடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நன்றி நவாஸ் உங்க பாராட்டுக்கு

    உங்க பிரிய மகள் நூர் எப்படி இருக்காங்க

    பதிலளிநீக்கு
  12. பட்டியன் படங்கள் அருமை

    உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. நன்றி சுவையான சுவை உங்க பாராட்டுக்கு

    அடுத்த ரெசிப்பி என்ன

    பதிலளிநீக்கு
  14. தங்கள் ஞாபகங்களைக்
    காற்றுக்குத்தானமாகக் கொடுத்து விட்டு
    மண்ணில் விழும் அந்தப் பூக்கள்
    தங்களுக்குத் தாங்களே
    மண்சமாதி கட்டிக் கொண்டு... ........
    ..........மண் சமாதி........... உணர்ச்சிகளை புரிந்து கொண்டதால் மலர்ந்த அருமையான கவிதை பூ.

    பதிலளிநீக்கு
  15. நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க சித்ரா வாங்க

    முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வருகை தந்து இருக்கீங்க

    நன்றிஉங்க விமர்சனத்துக்கு

    சித்ரா முதல் முறையா உங்க வலைத்தளத்துக்கு வர்றேன்
    ஆனா பாருங்க நிறுத்த முடியாம படிச்சுக்கிட்டே இருகேன் மா
    ரொம்ப அருமை வெகுளித்தனமா., முட்டாள் தனமா., கடவுள் மற்றும் சுன்டெலி சினிமான்னு கலக்குறீங்க தோழி

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வாருங்கள் நிகே

    முதல் முறையா என் வலைத் தளத்துக்கு வருகை தந்து இருப்பதற்கு நன்றி மா

    முதல் கவிதையே கவிதை பற்றியா?
    கலக்குறீங்க நிகே ..


    உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!!!
    அன்புடன் தேனு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...