எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு

காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடை இடியாக
ஆட்டுவிக்கிறேன் என்
அன்பெனும் அதிகாரத்தில்...

அடைமழையில் நனைந்த
கோழியாக ஆடிக்கொண்டிருக்கும்
உன்னை இன்னும்...

சுவைபட சமைக்கத்தெரிந்த எனக்கு
சுருங்கச் செய்வத்தெரிவதில்லை...
எல்லாமே எல்லை மீறி
அமிர்தம் நஞ்சுக்குப் பக்கத்தில் ....

யாரும் மறுமுறை உன்னை
திரும்பிப் பார்ப்பது கூடப்
பிடிப்பதில்லை எனக்கு...

உன்னை மற்றவர்களின்
பார்வையிலே மறைத்துவிடும்
பொருட்டே உனை விடப்
பெரிதாகிக்கொண்டே போகிறேன்...

உன் பேச்சுக்கூட
எனக்கு மட்டுமேயான
பிரசாதமாய் யாருக்கும்
உண்ணத்தராமல் தடுக்கிறேன்...

உடம்பு சரியில்லை என்றால்
தொலைந்தாய் நீ...
வெப்ப மானியும் மாத்திரைகளும்
கஞ்சிப்பாத்திரமும் கஷாயமும் கொண்டு
உனைச் சுற்றும் புதுக்கோளாகி விடுவேன்...

தையல்நாயகி தன்வந்திரி
தெரசா ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
என நினைத்துக்கொண்டு...

நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப்
பார்த்தே என் கைரேகையைப்
பதித்துவிடுவேன் தழும்பாய்...

எனக்கான ரத்னம் நீ
யாரும் கிட்டேவந்தால்
கொத்தும் உத்தேசத்தோடு நாகமாய் நான் .. ..

கோயில்களில் மாங்கல்யத்தை
உண்டியல்களில் செலுத்தியும் முடியிறக்கியும்
சாவித்திரியாய் உன்பின் நான்...

என் அன்பு இம்சையைசகித்துக்கொண்டு
நீ சிந்தும் புன்னகையில்
உயிர்த்துக்கொண்டு இருக்கிறேன்...

எனக்கான எனக்கு மட்டுமேயான
உன்னைக் காப்பாற்றித்
தக்க வைத்துக்கொண்ட திருப்தியில்....

30 கருத்துகள்:

  1. உனைச் சுற்றும் புதுக் கோளாகி விடுவேன்
    அன்பின் ஆக்கிரமிப்பும் அலாதியான சுகம் தான்
    கொடுத்து வைத்தவர்...
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ///உன்னை மற்றவர்களின்
    பார்வையிலே மறைத்துவிடும்
    பொருட்டே உனை விடப்
    பெரிதாகிக்கொண்டே போகிறேன்...///

    ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  3. ///உனைச் சுற்றும் புதுக்கோளாகி விடுவேன்...///

    அருமை.

    பதிலளிநீக்கு
  4. அற்புதம்.. ஆனால் உண்மைதானா? :))

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதைகள் அவ்வப்போது எழுதுவது ஆச்சர்யம் இல்லை.ஏனென்றால் நான் கூட எழுதியுள்ளேன்.
    ஆனால் தொடர்ச்சியாக் அடை மழையாய் வருவது தான் ஆச்சர்யம்.தமிழ் வளர்த்த காரைக்குடி மண் தங்களையும் வளர்த்துள்ளது என நினைக்கிறேன்.கவிதாயினி என்ற அடை மொழியுடன் தாராளமாக உலா வரலாம். வாழ்த்துக்கள்.
    அன்புடன் வெற்றிவேல்

    பதிலளிநீக்கு
  6. ”அவர்” கொடுத்து வச்சவருங்க!

    பதிலளிநீக்கு
  7. உன் பேச்சுக்கூட
    எனக்கு மட்டுமேயான
    பிரசாதமாய் யாருக்கும்
    உண்ணத்தராமல் தடுக்கிறேன்...


    எனக்கான எனக்கு மட்டுமேயான
    உன்னைக் காப்பாற்றித்
    தக்க வைத்துக்கொண்ட திருப்தியில்....

    மிகப் பெரும்பாண்மையான
    பெண்களின் எண்ண வெளிப்பாடு..
    அருமை.......

    பதிலளிநீக்கு
  8. ஆத்தீ !!!அதீத அன்பை சொல்லும் இக்கவிதையில் காதலின் தீர்க்கமும் வாழ்வின் மேலான பிடிமானமும் பேச முடிகிறதே தேனம்மை உங்களால்

    நீளம்தான் கொஞ்சம் அதிகம் என்பேன்

    :)

    பதிலளிநீக்கு
  9. //என் அன்பு இம்சையைசகித்துக்கொண்டு
    நீ சிந்தும் புன்னைகையில்
    உயிர்த்துக்கொண்டு இருக்கிறேன்//

    ரெம்ப அருமை!!

    பதிலளிநீக்கு
  10. லக்ஷ்மணன் சார் மிக கொடுத்து வைத்தவர்

    எல்லாம் வல்ல அந்த தெய்வம் இத்தம்பதிக்கு நீண்ட ஆயுளையும் குறையாத அன்பையும் தர வேண்டுகிறேன்

    முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க உங்காத்துக்காரருக்கு

    வாழ்த்துக்கள் சகோதரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. Udambu sariyillai enraal tholainthaai nee.Pathipakthiyai thaandiya ungal anbai petrukondirukkum Chettiyarukku en vaazhthukkal.

    பதிலளிநீக்கு
  12. இந்த உலகில் உன் அன்பை விட பெரிசாய் எதுவும் எனக்கு கிடைக்கப்போவதில்லை. அன்பு, பாசம், பரிவு இதன் அர்த்தங்கள் எல்லாம், வாழ்ந்து பார்த்தால் உணர முடியும். உங்கள் கவிதை அழகா, அந்த ப்ரியங்கள் அழகா... போட்டி போடுகின்றன இரண்டும்.

    பதிலளிநீக்கு
  13. நிறைய நிறைய முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. //உன்னை மற்றவர்களின்
    பார்வையிலே மறைத்துவிடும்
    பொருட்டே உனை விடப்
    பெரிதாகிக்கொண்டே போகிறேன்...
    //

    என்ன சொல்ல...நீங்க நீங்க தான்...என்னால முடியல.....

    பதிலளிநீக்கு
  15. பாலா கவிதைகளில் முண்டம் கவிதை நல்லா இருக்கு

    உங்க பாராட்டுக்கு நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  16. திரும்பவும் வந்து ரசித்தேன் நவாஸுத்தீன் நேசமும் நேசக் கோபமும் என்ற வார்த்தை என்னை இங்கு இழுத்து வந்தது நவாஸ்

    நன்றி உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  17. வாங்க பட்டியன் வாங்க
    முதல் முறையா வந்து இருக்கீங்க நன்றி உங்க பாராட்டுக்கு
    ஆமா அந்த புகைப் படங்கள் எங்கே எடுத்தது

    பதிலளிநீக்கு
  18. வாங்க வெற்றிவேல் ஸார் வாங்க

    நன்றி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    உங்க புதிய படைப்புக்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன் ஸார்

    ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதலயே

    புது வலைத்தளம் ஆரம்பிக்கும் எண்ணம் என்ன ஆச்சு

    பதிலளிநீக்கு
  19. இப்பத்தான் உங்க விமர்சனம் எல்லாம் பார்த்து நானும் ஏதோ எழுதுறேன்னு நல்லா இருக்குன்னு சொன்னார் வினோத்

    பதிலளிநீக்கு
  20. மாவீரர் தினம் பற்றிய செய்திகள் ஈழச் செய்திகள் என்று பயனுள்ள வலைத்தளம் வைத்து இருகிறீர்கள் செல்வா பாராட்டுக்கள்

    நன்றி உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  21. நன்றி தினேஷ் உங்க பின்னூட்டத்துக்கு

    போட்டிக்கு கவிதை எழுதிட்டீங்களா

    பதிலளிநீக்கு
  22. அவளும் ஒரு சிறகு கூடிய பறவையாய் இருந்தாள் எனக் கூறியதற்கு நன்றி நேசன்

    பாவம் சிலுவைகளை சுமக்க நேரிட்டு விட்டது

    பெண்ணை எண்ணங்களால் புரிந்து கொண்டதற்கு நன்றி நேசன்

    பதிலளிநீக்கு
  23. இடியாப்பத்துக்கு அடுத்தது என்ன சுச்ரி

    ரொம்ப பசியா இருக்கு எதாவது போட்டு இருப்பீங்களோன்னு வந்தேன்

    நன்றி சுச்ரி உங்க பின்னூட்டத்துக்கு

    பதிலளிநீக்கு
  24. நன்றி விஜய்

    உங்க அப்பழுக்கில்லாத அன்புக்கு நாங்க அடிமையாகிட்டோம்

    உங்க போட்டிக்கான கவிதை சுப்பர்ப்

    பதிலளிநீக்கு
  25. நன்றி டாக்டர் உங்க பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும்

    நல்ல பகிர்வு டாக்டர்

    ஹேமா சொன்னது போல எங்க போயிடீங்க

    மருத்துவரா இருக்குறதால உங்க சேவை அனைவருக்கும் தேவை

    உங்களைப் போல மருத்துவர் இருந்தால் நோய் கூட கொஞ்சம் விலகி இருக்கும்

    பதிலளிநீக்கு
  26. விளையாட்டாக செய்யும் காரியங்கள் வினையாவது பற்றி எழுதி இருந்தீர்கள் தமிழுதயம்

    அருமை

    நன்றி உங்க பின்னூட்டத்துக்கு

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஜோதிஜி உங்க பாராட்டுக்கு

    மாவீரர் தினம் பற்றிய பதிவு அருமை

    ஆனால் நடு நிலையோடு எழுதக் கூடியவர் நீங்கள் என உணர்கிறேன் ஜோதிஜி

    தொடர்ந்து படித்து வருகிறேன்

    அருமையான தகவல்கள்

    பதிலளிநீக்கு
  28. நன்றி புலவரே உங்க பாராட்டுக்கு

    //வறுமையில் ஏற்றத்தாழ்வு//

    அருமையான வார்த்தைப் பிரயோகம் புலவரே

    நல்லா இருக்கு

    :-)

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...