எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 டிசம்பர், 2009

சூரியன் மகள்

யார் விதைத்தும்
பயிராய் முளைத்து...
யார் உடைத்தும்
கனியாய்க்கனிந்து...
யார் தோண்டியும்
வெள்ளமாய்ப்பொங்கி...
யார் மரித்தும்
எனக்குள் ஏந்தி....

என்னைத்துண்டாக்கி
எல்லைக்கோடிட்டு...
தனக்குள்ளே சண்டையிட்டு...
என் மேலே ரத்தம் சிந்தி...
உன் குருக்ஷேத்ரம் தாங்காமல்
நான் பாலையாகவும்
பாளமாகவும் வெடித்து
நேசமுற்றி விளைந்தே
காயப்பட்டு...

என்னை மிதிக்கிறாய்
மகிழ்கிறேன்...
உமிழ்கிறாய்
ஏற்கிறேன்...
எல்லா ரூபங்களாயும்
உன்னைக்கண்டு நான்....
உன் ஒரு ரூபம் மட்டுமே
காண ஏங்கி கனலுடன் நீ....

இங்கேயே இருக்கிறேன்...
நீ பிறந்திறந்து
பிறக்கிறாய்...
என்னில் தவழவும்
உதைக்கவும்....
சூரியன் மகளாய் நான்
இங்கேயே இருக்கிறேன் ...
எனக்கான மரணம் வரை ..

41 கருத்துகள்:

  1. அண்ணாமலையானே
    குடும்பத்தலைவிகளின் விடுமுறை நாளெல்லாம் எப்படி இருக்கும் என உங்களுக்குத்தெரியாதா ?

    இதோ இன்னைக்கு வேலை பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் போடுறது தான்

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலே எனக்கு தெரியாது.. சம்பளம் இல்லாத வேல உங்களுது...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்ல இருக்கு மேடம் கவிதை....
    உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு புன்னகையாய் மலரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

    கவிதைகள் ஒரே மாதிரியான தொனியில் ஒன்றே ஆன கருவை பேசுவது போல தோற்றம் தருகிறது

    தன்னிலையில் துவங்கி முடியும் கவிதைகள்

    இயல்பு நவிற்சி உயர்வு நவிற்சி கடக்க வேண்டுமே
    கவி

    உவமைகள் உணர்வுகளின் புதுமை நீரோட்டம் போல் நகரும் தெள்ளிய நடை உங்களின் கவிதைக்கு வாசகனை இழுத்து வருகிறது

    பதிலளிநீக்கு
  6. எல்லோருக்கும் அன்பும், மனிதநேயமும், சகிப்புத்தன்மையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு வாழ்வு சிறக்கட்டும்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மிகச் சரளமாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. அபாரம்! (அனைத்துக் கவிதைகளையும் படித்ததால் சொல்கிறேன்) சரியான கருவை தேர்ந்தெடுத்தால் மிக மிக அருமையான கவிதைகளை படைப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பும் சகோதரத்துவமும் வளரட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல இருக்கு தேனு,
    சூரியன் மகளுக்கு மரணம் வருமா என்ன ?

    பதிலளிநீக்கு
  11. "ஒப்பனை" கவிதை குறித்து, நான் சொன்ன கருத்து சரி தானா... பெண்களால் தான், நான் சொன்னது சரியா... சரியில்லையா... என்று அவதானிக்க முடியும். உங்கள் கருத்து தேவை.

    பதிலளிநீக்கு
  12. நன்றி அண்ணாமலையான் உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. நன்றி கமலேஷ் உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நன்றி சிவாஜிசங்கர் உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. சுய வெளிச்சமாய் சூரியன் மகள் பிரகாசிக்கிறது

    வாழ்த்துக்கள்

    எனது அன்பிற்கினிய அக்காவிற்கும் அவர்களின் அன்பு குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  16. //யார் மரித்தும்
    எனக்குள் ஏந்தி....

    நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு
  17. உங்க தாயப் பெண் அருமை நேசன்
    உங்கள் அறிவுரைகளை கவனத்தில் கொள்கிறேன் எல்லாத்தருணங்களிலும் எல்லா நிகழ்வுகளிலும் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வதே இதன் காரணம்
    எல்லார் சந்தோஷமும் என் சந்தோஷமாய் எல்லார் துக்கமும் என் துக்கமாய் உணர்வதால் எல்லாம் தன்னிலை வெளிப்பாடு மாதிரிதான்
    ப்ரஸன்ட்செய்ய முடியுது

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நேசன்

    பதிலளிநீக்கு
  18. கவிதை ரொம்ப அருமை

    எல்லா வளமும் பெற்று புத்தாண்டு இனிதாய் அமைய என் வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேனம்மை அக்கா

    பதிலளிநீக்கு
  19. அழகு கவிதை..புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நன்றி டாக்டர் ருத்ரன் என்னை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் ருத்ரன்

    பதிலளிநீக்கு
  21. நன்றி முனியப்பன் சார்

    உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. நன்றி நவாஸ் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. நன்றி சங்கவி என் வலைத்தளத்துக்கு முதல் முறையா வந்து இருக்கீங்க

    உபயோகமுள்ள பதிவு சங்கவி நீச்சல் பற்றி மிக அழகாகக் கூறி இருக்கிறீர்கள் எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியுமா

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. நன்றி செல்வா புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வா

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப நன்றி அக்பர்

    என்னோட வலைத்தளத்துக்கு முதல் முறையா வர்றீங்க

    நன்றி
    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  26. நன்றி வேல்கண்ணன்

    பழுத்த இலைகளும் மரங்களும் கூட காலப் போக்கில் மறைந்து விடுகின்றன வேல் கண்ணன் அருமையா எழுதி இருகீங்க ..முதுமையின் முடிவு அதுதான்.

    சூரியன் மகளானாலும் சூரியனுக்கே முடிவு இருக்கும் போது அவர் மகளுக்கு இருக்காதா என்ன

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  27. நன்றி தமிழுதயம்
    நீங்கள் போன இடுகையில் கூறியது அனைத்தும் அருமை
    உள்ளபடியே குழந்தைகளுக்கு அம்மாவை ஒப்பனை இல்லாலாமல் இயல்பாக இருந்தால் தான் பிடிக்கிறது
    இதில் என் அனுபவமும் இருக்கிறது

    ஆனால் நான் உணர்த்த வந்தது வேறு
    பலரும் பலமாதிரியாகப் புரிந்து கொண்டதால் அப்படியே விட்டு விட்டேன்



    தமிழுதயம்
    வீட்டைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக சொல்லி விட்டீர்கள் எல்லாமே உண்மை
    கொத்தனார் எஞ்சினியர்கள் பலர் வாடகை வீட்டில் தான் இருகாங்க
    வீட்டை வாங்குவது பெரிது இல்லை
    பராமரிப்பதுதான் ரொம்பக் கஷ்டம்

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  28. நன்றி என் அன்பிற்குரிய சகோதரரே

    உங்களுக்கும் நிர்லமா தேவிக்கும் என் அன்பு மருமக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. நன்றி கோபிநாத் உங்க வரவுக்கும் கருத்துக்கும்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. நன்றி ஸ்டார்ஜன் உங்க பாராட்டுக்கு
    வருத்தம் தந்த நிகழ்வு சுனாமி
    அதை ஒரு குழந்தையின் குரலில் கேட்கும் போது பரிதவிப்பு அதிகமாகிறது ஸ்டார்ஜன்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. நன்றி புலவர் புலிகேசி

    வாழ்த்துக்கள் புலிகேசி
    அட அம்பதுதானா
    அதுக்குள்ள இந்தப் போடு போடுறீங்க புலவரே அருமை ..
    தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

    கூகுளுக்கு வலைத்தளத்துக்கு எல்லாம் நன்றி சொல்லி இருக்கீங்க

    வாழ்க வளர்க பல்லாண்டு

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. நல்ல வார்த்தைகளின் கோர்வையாய் இருந்தாலும்.. இந்த கவிதை எனக்கு பிரியலை.. ட்யூப் லைட்.. :)

    உங்களுக்கும், குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  33. சூரியன் மகளாய்.. வார்த்தை அசத்துகிறது.. கவிதையும்!

    பதிலளிநீக்கு
  34. ருத்ரன் வரைக்கும் கொண்டாடும் கவிதாயினி ஆகிவிட்டீர்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. சூரியனின் மகள் ---பூமிதானே பட்டியன்

    பூமி சொல்வது போல் படிச்சுப் பாருங்க

    இப்ப புரியும்னு நினைகிறேன்

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  36. நன்றி ரிஷபன் உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும் உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஜோதிஜி
    ஆமாம் அவர் என் வலைத்தளத்தைப் படிக்கிறார் என்பதையே என்னால் நம்பவே முடியவில்லை ..

    நல்ல பகிர்வு ஜோதிஜி

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது சரி

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...