எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 30 அக்டோபர், 2017

தூத்துக்குடி ராமநாதபுரம் உப்பளங்கள்.

”உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பதும் ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பதும் பழமொழி. !

நெய்தல் நிலத்துக்கே உரிய ஒரு தொழில் உப்பு விளைவித்தல். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைக்கும் உதவிய ஒரு பொருள் உப்பு. களர்நிலம், உவர்நிலம் என்று உப்பு விளைவிக்கப்படும் பூமி அழைக்கப்படுகிறது. உப்பு அளம் என்றும் கோவளம், பேரளம் என்று கடற்கரைக் கிராமங்களில் பெயர் அமைந்திருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.

உப்பு விற்றவர்களை உமணர்கள் என்று பண்டைஇலக்கியக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கழுதைகளின் முதுகில் உப்பை மூட்டையாகக் கட்டிச் சென்று விற்பவர்களை  உப்புக் குறவர்கள் என்று கூறுவதும் உண்டு.

உப்புப் பெருகுவதுபோல் பணம் பெருகும் என்பதால் உப்பை பூஜை அறையில் வைத்து வணங்குவோரும் உண்டு. உப்பு என்பது பணத்துக்குச்/தனத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

உப்பு என்றதும்  காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகமும் நினைவுக்கு வரலாம். 

உணவு வகைகளில் (தற்காலத்தில் உப்பு சேர்க்காவிடினும்) இயற்கையாகவே சில காய்கறிகளில் உப்புச் சத்துகள் உறைந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்பதற்காகவே கல் உப்பின் பயன்பாடு (  சுத்திகரிக்கப்படாத  கடல் உப்பு ) வலியுறுத்தப்படுகிறது. டேபிள் சால்ட் எனப்படும் நைஸ் உப்பு/தூள் உப்பு/ பொடி உப்பில் இந்த அயோடின் கொண்டது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்போது இதில் இயற்கையாக இருக்கும் அயோடின் என்னாச்சு ?

ராக்சால்ட், இந்துப்பு, ப்ளாக்சால்ட்,  சைனீஸ் சால்ட் எனப்படுபவை, பாறையில் இருந்து கிடைப்பவை, நாம் உபயோகப்படும் கல் உப்பே கடலில் இருந்து கிடைக்கும் உப்பாகும்.

இவை தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும்வழியில் அமைந்த உப்பளங்கள்.

கடற்கரை அருகில் உள்ள நிலங்களை வயல் பாத்திகள் போலப் பிரித்து அதில் கடல் நீர் கொட்டப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.

நால்வரும் நடுத்தம்பியும் வெள்ளைக்காரத் தம்பதியினரும்.

காரைக்குடியில் இறைப்பணி ஆற்றிவரும் திருநாவுக்கரசர் நற்பணி மன்றத்தினர் பல வருடங்களாக திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இல்லம் செழிக்கவும், நிம்மதி நிலைபெறவும், நன்மை ஓங்கவும் இம்முற்றோதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருமணம், சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் , புதுமனை புகுவோர் ஆகிய சுபநிகழ்வுகளிலும் இம்முற்றோதல் செய்கிறார்கள். மேலும் கோயில்களிலும் திருவாசகம் பாடப்படுகின்றது.

இதில் பன்னிரு திருமுறைகளுடன் எட்டாம் திருமுறையில் உள்ள  ”திருவாசகமும்” முழுமையாக ஓதப்படுகிறது. சந்த நயத்தோடு கூடிய இப்பாடல்களை செவிமடுத்தாலே யாக்கை நிலையாமை பற்றிய தெளிவும் பேரின்பப் பரம்பொருளைப் பற்றும் அவாவும் தோன்றும். 
நால்வரின் புகைப்படத்தைத் தாங்கி நிற்பவர் என்னுடைய நடுச்சகோதரர் வள்ளியப்பன் என்ற பாபு என்ற சேவுகன்செட்டி. இவர் தற்போது இல்லை. 2013 ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிவபதவி அடைந்துவிட்டார். ஆகையால் இப்படம் எனக்கு முக்கியமான ஒன்றாகிறது.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அன்னப்பறவை - ஒரு பார்வை.





இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும் - ஒரு பார்வை.

கல்லூரிப் பருவத்திலும் கல்யாணப் பருவத்திலும் கொடுக்கப்பட்ட நூல்களை இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். அவற்றில் ஒன்று இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும்.  1981 களில் வந்த கவிதைகள். 
லீவ்ஸ் ஆஃப் ஐவிக்கு  அதிகம் ஆர்ட்டிகிள் கொடுத்ததுக்காக கிடைச்ச பரிசு.

காகிதச் சங்கிலிகள். - ஒரு பார்வை.

நேற்று பழைய புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சுஜாதாவின் புத்தகம் கையில் சிக்கியது.  முகநூல் சகோ கல்யாண்குமார் சொல்லியபடி நம் பால்யத்தில் படித்த (கல்லூரிப்பருவத்தில் ) எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும் என்ற அவாவில் இந்த இடுகை போட்டிருக்கிறேன். :)


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 25 அக்டோபர், 2017

இன்னும் சில மரச்சிற்பங்கள்.

உறவினர் ஒருவர் வீட்டில் கதவின் கைப்பிடியை சுற்றி வித்யாசமாக அமைந்திருந்த மரவேலைப்பாடு. பூக்கள் இலைகள் வளைவுகளை  சிற்பம்போல் எப்படி இப்படி நுண்ணியமாக செதுக்க முடிந்தது எனத் தெரியவில்லை. அதன் பக்கமே சாவிக்கான துவாரமும் செதுக்கப்பட்டிருக்கிறது !

வார்ப்பிரும்பில் செய்யப்பட்டு சில்வர் வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும் கைப்பிடியின்  கொண்டியிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்திய நதிநீர் இணைப்பு.

எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.

ஆகலாம் அப்துல்கலாம்.

அக்கினிச்சிறகுகள் கொண்டு
கனவுகளைச் செதுக்கு
ஆகலாம் அப்துல்கலாம்.

உயரவேண்டுமென்ற உத்வேகம்
குறிக்கோளில் பிடிவாதம் கொள்
ஆகலாம் அப்துல்கலாம்.

சாதாரண மனிதனிலிருந்து
அசாதரணாய் வெளிப்படு
ஆகலாம் அப்துல்கலாம்.

விவசாயம் காப்போம்.

வேரில் கொஞ்சம் வெப்பம் பிண்ணாக்கு
தூரில் கொஞ்சம் தோட்டச் சருகுகுகள்.
மாட்டுச் சாணம் மண்புழுக் கழிவுகள்.
மக்கிய தழைகள் மகசூல் பெருக்கும்.

வயலைக் கொல்லும் பூச்சிக் கொல்லிகள்
காயம் ஆக்கும் சாயத்தண்ணீர்

ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

ஊருக்கு அணி செய்யும்
பயிருக்கு உயிர் செய்யும்
உயிருக்கு நீர் வார்க்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

பாரெல்லாம் பயன் பெறவே
தூரெடுத்துத் தூர் வார்த்து
கரைகொண்டு கரை சேர்த்து
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

இளம் தொழில் முனைவோருக்கு சில ஆலோசனைகள்.

சர்வதேச நகரத்தார் வர்த்தக சபை சென்ற வருடம் துபாயை மையமாகக் கொண்டு இயங்கியபோது  தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் தொழில் அதிபர்களை இனம் காட்டியதோடு இளம் தொழில் முனைவோரையும் உருவாக்கத் திட்டமிட்டது.
இளம் தொழில் முனைவோருக்கு என்னென்ன குணாதிசயங்கள் தேவை , என்னென்ன திறமைகளைக் கைக்கொள்ள வேண்டும் என வழிகாட்டத் திட்டமிட்டது. இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அக்குழு அதன் முதல் படியாக  அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவந்த செட்டிநாட்டுக்  குழந்தைகளுக்கு நம் வேர் பற்றியும், கலாச்சாரப்  பாரம்பரியப் பெருமைகள் பற்றியும், முக்கியமாக நம் சமூகக் கட்டமைப்பு & வியாபாரத் திறமைகள் பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

சனி, 21 அக்டோபர், 2017

கறிக்குழம்பு.


கறிக்குழம்பு.

வெசம் வைக்கத்தான் காசு வாங்கிட்டுப் போனியா “ முகமெல்லாம் ஜிவுஜிவுக்க வாசலிலேயே நிற்கவைத்து கேள்விச் சவுக்கால் விளாசிக் கொண்டிருந்தாள் புவனா.

“யக்கா என்ன அக்கா இப்பிடி கேக்குறீங்க. என்னய போய் இப்பிடிக் கேட்டீங்களே அக்கா.. “ திக்கித் திக்கி அழுது கொண்டிருந்தாள் கங்கம்மா.

“ஆத்தாளைப் பாத்துக்குறேன், ஆத்தாளைப் பாத்துக்குறேன்னு காசு வாங்கிக்கிட்டு கடோசீலஅண்ணன் தம்பி வீட்ல கொண்டு போய்த் தள்ளுனது பத்தாதா. சொத்த வாங்கக் கையெழுத்துக் கேட்டீங்க சரி. அது ஏண்டி ஒத்தப் பொட்டப்புள்ளயா ஒன்னப் பெத்தவளுக்கே வெசம் வைச்சுக் கொன்னு போட்டே பாவி “ கண்கள் கலங்க ஓங்கிக் குரலெடுத்து ஆங்காரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள் புவனா. கோபத்தில் அவள் உடல் அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

”யக்கா என்ன நம்புங்கக்கா. நான் வெசம் எல்லாம் வைக்கல. அது ஆசைப்பட்ட கறிக்கொழம்பைத்தான் கொண்டு போனேன். சோத்துல போட்டு ஊட்டும்போது கூட கண்ணீர் விட்டுக்கிட்டே சாப்பிட்டுச்சுக்கா.. யக்கா. நானே எங்காத்தாளுக்கு வெசம் வைப்பனா..”

“இத எல்லாம் நம்பச் சொல்றியா. அப்பிடியே வெளிய போயிரு. எனக்கு ஆளும் வேணாம் தேளும் வேணாம். ஒம் மூஞ்சீல முழிக்கக்கூடப் பிடிக்கல. நீயெல்லாம் ஒரு மனுசியா. நீ சமைச்சத இனி எனக்குத் திங்கப் பிடிக்குமா. எங்க எனக்கும் வெசம் வைச்சிருவியோன்னுதான் பயமா இருக்கும் .. போ வெளியே “ என்று கத்தினாள் புவனா.

அவளது மூர்க்கத்தின் முன் நடுங்கி மயக்கம் வந்தவளாய்த் தடுமாறி எழுந்து சுவரைப் பிடித்து கதவைப் பிடித்து அழுது வடிந்த கண்களை முந்தானையால் துடைத்தபடி வெளியேறினாள் கங்கம்மா.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

இந்தியாவின் ”ஜோன் ஆஃப் ஆர்க்” என்று சரித்திர ஆய்வாளர் வேங்கடத்தால் புகழப்பட்டவர், தனது ஐம்பதாவது வயதில் வாளேந்திப் போராடி சிவகங்கைச் சீமையை மீட்டு அரசோச்சியவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.  



டிஸ்கி:- முகம்மது யூசுப்கான் கட்டுரையைப் பாராட்டிய திசையன்விளை ஆர். ஜி. காயத்ரிக்கு நன்றி. 

சனி, 14 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ராதிகா யோகேந்தரின் புத்தகப் பையோடு மறைந்த பாட்டி

என் அன்பிற்குரிய (முகநூல் ) தங்கை ராதிகா யோகேந்தர். அசப்பில் என் இன்னொரு தங்கை லல்லி மாதிரியே இருப்பார். குறும்பிலும் கூட. நிறைய வாசிப்பார். தினம் போடும் ஸ்டேட்டஸ்களில் நகைச்சுவை அள்ளும். அவ்வப்போது கணவரிடம் வாங்கிய பல்புகளையும் பகிர்ந்து சிரிக்க வைப்பார். மொத்தத்தில் உற்சாகப் பந்து. அன்பின் உருவம்.

இவரிடம் நான் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அவங்க பள்ளிபருவ நினைவுகள் அல்லது கார் ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்கள் பத்திக்  கேட்டிருந்தேன். இந்த வாரம் கேட்டதுக்கு உடனே வரமளித்து விட்டார்ப்பா. அதிலும் புதன் இரவு கேட்டதுக்கு வியாழன் இரவே அனுப்பி விட்டார். நிறைய பேரிடம் கேட்டு எல்லாம் பெண்டிங்கில் இருக்கு. ( அவங்கள எல்லாம் பின்னாடி கவனிச்சுக்குறேன். கிர்ர்ர்ர் ) :) தாங்க்ஸ் டா ராதி உடனே அனுப்பிச்சதுக்கு
.


வணக்கம் நான் ராதிகா யோகேந்தர் ..நான் கோவைல வசிக்கிறேன் ..பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மேல் உள்ள ஆர்வத்துல தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்..அப்புறம் முகநூல், வாட்ஸ் ஆப்,இன்ஸ்டாகிராம் இதுல எல்லாம் களமாடிட்டு ,ஸ்முல் அப்டிங்கிற ஆப்ல பாட்டும் பாடிட்டே, வீட்டையும் கவனிச்சு,கணவர், குழந்தையை நல்லா பாத்துக்கிற ஒரு நல்ல குடும்பத்தலைவி..கணவர் அரசு பள்ளி ஆசிரியர், ஒரே மகள் சின்ன அளவான மகிழ்ச்சியான குடும்பம்.

புதன், 11 அக்டோபர், 2017

சாரல்கவரியும் மழைச்சலங்கையும்

1601. avoid bubble busters and work for progress.. happy morning makkass..

1602. தலைவர் சிலமுறை முட்டாளே என்று திட்டி இருக்காரு. சீறி எழுந்து சினக்கும் நான் இன்று சிரித்து அனுபவித்தேன். ஒருவேளை பழகிருச்சோ

1603. அன்பை அதிகம் ஊற்றினாலும் நட்புத்தாவரம் பட்டுவிடும்.

1604. தனக்குத்தானே சாரல்கவரி வீசிக்கொள்கிறது மழை.ஒரு கையில் மிஷ்கின், இன்னொரு கையில் இதமான சூட்டில் நரசூஸ், பால்கனி சேரிலும் குட்டிமுத்தம் இட்டு இழுக்கிறது மழை. கொசுவலைத் தடுப்பின் பின் பின் சேரில் விழுந்து ஆடி மடிசாயும் மிளகாய்ச்செடியின் பூவும் நானும் மழையுடன் கைகோர்க்க காற்றும்  குளிருடன் நடனமாடத் துவங்குகிறது. 

1605. சரம் சரமாய்க் குதித்திறங்குகிறது மழை , ஒருமுறை ஆமோதிப்பாய் "ம்" என்று சொன்னதற்கு.  தேர்வடமாய் என்னைச்சுற்றி முறுக்கி இழுத்தாட்டுகிறது . மூழ்கி எழுந்து இலையைப் போல மிதந்து மிதந்து பின்னே போகிறேன்.

1606. அளவற்ற பெருவெளி நீர்த்திப்பியால் நெகிழ, சந்தோஷமாய்க் கரைந்தோடுகிறது சேறு, சுயமிழத்தலில் இவ்வளவு இன்பமா

1607. பால்கனிச்சுவரில் ஒண்டி துளசியும் மிளகாயும பாலக்கும் ஆச்சார்யக் கண்கொண்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன திடீரென நடனத்தை நிகழ்த்திய மழையை. எனக்குத்தான் பதக் பதக் என்கிறது எங்கே மழை தன் சலங்கை உதறி அவற்றைத் தள்ளிவிடுமோவென.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 3.

லலித் கலா அகாடமியின் வாயிற்புறம் நிறைய சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான் ஓவியர் வீரசந்தானத்தை முதன் முறையாகப் பார்த்தேன். தாடி மீசையுடன் ஜிப்பா போட்டிருந்தவர் புகைத்துக் கொண்டிருந்தார். உள்ளே ஊர்ப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாதி விற்பனையும் ஆகி இருந்தன.  

அங்கே நான் பார்த்த மிச்ச ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
உள்ளே சென்றதும் விகடன் ஆசிரியர் ரா கண்ணன், சந்திரா, கவின்மலர்  ஆகியோர் இருந்தார்கள்.  நாணயம் விகடனில் என் மாமா நாகப்பன் எழுதுவது பற்றி கண்ணன் குறிப்பிட்டுப் பேசினார். சந்திரா, கவினோடு கைகுலுக்க ஆசைப்பட்டேன் . அணுக்கமான சூழ்நிலை தென்படாததால்  நகர்ந்து சென்று ஓவியங்களை பார்வையிடத் துவங்கினேன். அதன்பின் ஓவியர் கோபுலுவை நடுநாயகமாக அமரவைத்து புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான மனித முகங்கள் சிற்பங்களில் .

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2

தானே துயர் தீர்க்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள் என்ற தலைப்பில் முன்னேயே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்த இன்னும் சில ஓவியங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர்கள் ஜீவாநந்தன் பி ஆர் ராஜன் ஆகியோரின் ஓவியங்களை அதிலேயே பகிர்ந்துள்ளேன்.
ராம் அடைக்கலசாமியின் ஓவியம் மரங்களையும் இயற்கையையும்  பாதுகாக்கச் சொல்கிறது.
பாஸ்கரனின் ஓவியம். மீன்கள் இலைகள் என்று கலவையான படிநிலை ஓவியம்

திங்கள், 9 அக்டோபர், 2017

தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

*861.திருமண நடைமுறைகளில் தலைச்சீலையில் முடிவது என்று ஒரு சடங்கு உண்டு. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க அவர்கள்பின் நின்று மாப்பிள்ளை, மணமகளின் மாமன்மார்கள் , திருமணம் செய்துவைக்கும் வேதியர் சொன்னபடி வெற்றிலை பாக்கை இருவர் தலையிலும் மாற்றி மாற்றி வைத்து எடுப்பார்கள். ( இதை என் உறவினர் ஒருவர் சொன்னார் ) இதில் திருமணம் முடிந்ததும் செல்லும் வழிச்செலவுக்கான பணத்தை மாமன் கொடுக்க மணமகள் எடுத்துத் தலைச்சீலையின் முந்தியில் முடிந்து வைப்பதுதான் தலைச்சீலையில் முடிவது.

*862.திருப்பூட்டி முடிந்ததும் மாமியார் சடங்கு, நாத்தனார் சடங்கு முடிந்து அந்த வெற்றிலை பாக்கை இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளச்சொல்வார்கள். அது என்று நினைத்து எழுதி இருக்கிறேன் முன்னொரு இடுகையில்.

திருப்பூட்டிய  பின்பு மணவறையை வலம் வரும்போது மாப்பிள்ளையின் அங்கவஸ்த்ர நுனி & பெண்ணின்  திருமணப் பட்டின் முந்தி  இரண்டையும் முடிச்சிட்டு இருப்பதையும் தலைச்சீலையில் முடிவது என்று எண்ணி இருக்கிறேன்.  பொதுவாக இங்கத்திய திருமணங்களில்  கிடையாது. அது வடநாட்டார் பழக்கம்.

நிற்க.

தலைச்சீலையில் முடிவதற்கும் இந்த தலைப்பு முடிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிண்டு முடிவதற்கு கூட :)

*863.பட்டுப்புடவை வாங்கியதும் கடைக்காரர்கள் கசவு பிரித்து முடிந்து கொடுப்பார்கள் அது குஞ்சலமாகத்  தொங்கும்.

நாம் *864 முந்திமுடியச்சொல்லிக் கொடுத்தால் இதற்கென காரைக்குடியில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் ( பெண்கள்)  புடவைக்கு முதலில் ஓரம்  அடிப்பார்கள். அதன்பின் இந்தக் குஞ்சலத்தைப் பிரித்து நன்கு நீவி சிறிய சீப்பால் சீவுவார்கள். *865இரு வரிசையில் இருந்து ஏழு வரிசை வரைமுடிந்து கொடுப்பார்கள். இந்த ஏழு வரிசை முடிந்து கொடுக்க  ஒரு வரிசைக்கு 50 ரூபாய் வீதம் மொத்தம் 350 ரூபாய் ஆகும். ஓரம் அடிக்க இருபது ரூபாய் தனி.

ஆனால் ஏழுவரிசை முடிய நூல் பத்தாவிட்டால் முந்தியில் நிறைய பிரித்து விட்டு முடிவார்கள். இவ்வாறு முடிந்தால் *866.சித்திரமாய் அழகாய் இருக்கும்.

இவ்வாறு இதை முடியாவிட்டால் ஓரம் எல்லாம் பிரிந்து விடும் என்பதெல்லாம் இல்லை. இது காரைக்குடிப் பக்கட்டு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கைவேலைப்பாடு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு எம்பிராய்டரி, பின்னல் வேலை இருப்பது போல் காரைக்குடிக்கே உரித்தான கைவேலை இது.

முன்பெல்லாம் யாரிடமாவது கொடுத்துத்தான் முடிவது வழக்கம். இதை நானே பின்ன கற்றுக் கொண்டேன். இங்கே இருக்கும் புடவைகள் ( 20 பட்டுப்புடவைகள் இருக்கும் ) நானே முடிந்ததுதான். ( தற்பெருமை. )

ஆனால் சிலவற்றை இரு வரிசைகளும். அதிகபட்சம் நான்கு வரிசைகளும் முடிந்துள்ளேன்.  ஒவ்வொரு குஞ்சலமாகப் பிரித்து *867முக்கோணமாகவும். எல்லா குஞ்சலத்தையும் பிரித்து வரிசையான *868செயின் முடிச்சாகவும் முடிந்துள்ளேன். 

கல்யாணம் ஆனதிலிருந்து ஊசி நூல் பின்னுறது, பிரிக்கிறது , முடியிறது.. ஸ்வெட்டர், க்ரோஷா, எம்பிராய்டரி,  ப்ளவுஸ் ஹெம்மிங் என்று டிவி பார்க்கும்போதெல்லாம் இதுதான் என் வேலைகள். ரங்க்ஸ் கொஞ்சம்  தள்ளியே அமர்ந்துகொள்வார். ஊசி நூலால் குத்தி விடக்கூடாது அல்லவா :)  :)

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.



கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.   

சனி, 7 அக்டோபர், 2017

புராதன வீடுகளும் புதுப்பித்தலும்

புராதன வீடுகளும் புதுப்பித்தலும்.

*841இந்தப் புராதன வீடுகள் சுமார் 500 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைதான். பெரும்பாலானவை 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  இருக்கும். இவற்றைக் கட்டியவர் கொள்ளுப்பாட்டையா.  தன் ஒரே வருமானத்தில் அவர்கள் கட்டிய இவ்வீடு இன்று அவர்களது பிள்ளைகுட்டி பேரன்பேத்திகளால் நிரம்பி *842.பங்கு வீடாகி விட்டது. ஆனால் ஒருவரே ரிப்பேர் பார்க்க இன்றைய வருமானத்தில் இயலுவதில்லை. எனவே அனைவரும் பங்கேற்று பழுது பார்க்கின்றார்கள். ஓரளவு பழுது உள்ள வீடுகள் தப்பிப் பிழைக்கின்றன. ஆனால் நிறைய*843 அளவில் சேதமான வீடுகளை *844மேங்கோப்பைப் பிரித்துவிட்டு இடத்தைப் பிரித்துக்கொண்டு பிளாட் கட்டி விடுகிறார்கள்.


*845மீனாக்ஷி சொக்கர் திருமணம். விஷ்ணு தாரை வார்க்கிறார்.

கீழே பிரம்மா  அமர்ந்திருக்கிறார். நடுவில் ஹோமத்தீ. மிக அற்புதமான முன்கோப்பு அமைந்த இல்லத்தில் என் சகோதரனுக்கும் பங்கிருக்கிறது.
*846மேலே உச்சியில் மஹாலக்ஷ்மி அருள்பாலிக்க இருபுறமும் கவரிப் பெண்கள்.

*846அதன் கீழ் பக்கவாட்டில் இருபுறமும் காவலர்கள்.

*847இடி விழாமலிருக்க உச்சியில் வைத்த வரகு சாமை பொதித்த கலசங்கள் முறிந்துள்ளன.

*848வேதியர் வேள்வியில் நெய் வார்க்கிறார். இரு பக்கமும் தும்புருவும் நாரதரும் இசைக்கிறார்கள். அவர்கள் இருபுறமும் இரு குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள்.

சாட்டர்டே ஜாலி கார்னர் - இப்னு ஹம்துனின் கடவுள் தேடலும் வாழ்க்கைப் பயணமும்.


முகநூல் சகோ ஃபக்ருதீன் இப்னு ஹம்துன். நான்கைந்து ஆண்டுகளாகத் தெரியும். நேரில் பார்த்ததில்லை. ஆனால் கல்யாண் நினைவுக்கவிதைப் போட்டியில் - நாங்கள் -  நான் இருமுறை பெற்ற பரிசுப் பணத்தை இந்தியா வந்திருந்தபோது மெயில்முலமாகக் கேட்டு எங்கள் வங்கி அக்கவுண்டில் செலுத்தியவர். 

இவரது வெண்பாம்கள் பிரசித்தம். அதுபோல் இவர் வல்லமை இணையம் வைத்த ஒரு கடிதப் போட்டிக்கு எழுதிப் பரிசும் பெற்றிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்க ஆசாத் ஜி, ஜமாலன், ஷேக் சகோ , கனவுப் பிரியன் போன்ற வளைகுடா வாழ் தமிழர்களில் இவரும் ஒருவர்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஷில்பாராமில் பாரம்பரிய நடனக் காட்சிகள் .

ஹைதை ஷில்பாராமத்தில் ( கலாச்சாரக் கிராமம்)  கோடைத்திருவிழாவின்போது பரதநாட்டியம் போன்ற பாரம்பரியக் கலைகளை வளர்த்தெடுக்கப் போட்டிகள் நிகழ்த்துகிறார்கள்.
 வரவேற்கும் நடனப் பெண் சிலைகள் அற்புதம்.

கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலைநிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலை அறிவியல் கல்லூரிகளும் , நர்சிங் கல்லூரி ஒன்றும் , ஒரு பாலிடெக்னிக்கும் , ஒரு பள்ளியும் இணைந்து செயல்படுகிறது.

அங்கே மகளிர் தினத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. சிறப்பான உரை என்று ஆசிரியர்கள் சிலர் பாராட்டினார்கள். தீசிஸ் மாதிரி இருக்கிறது என்றும் அதை மாணவிகள் புரிந்துகொண்டு  சிறப்பாகக்  கைக்கொள்ளவேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

பார்க் கல்லூரி மாணவிகளின் நடனம்.

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தின் ஆரம்பவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

அதன் பின்னர் அங்கே சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினர் திரு வீரராகவன்  ஒரு கவிதை  வாசித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...