ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

செவ்வந்தி

பிறந்ததில் இருந்து
காதலித்துக் கொண்டே
இருக்கிறேன் உன்னை...

ஐந்து வயதில் தான்
என் அருகு வந்து
அமர்ந்தாய் நீ...

இன்று வரை
என்னை விட்டுப்
பிரியவில்லை...

ஆவி சோரச் சேர்ந்த நீ
அதன் பின் என்னை விட்டு
விலகியதுமில்லை...
என்னைக் கைவிடவுமில்லை...

உன்னை விட்டால்
உயிர்த்து இருப்பேனா
தெரியவில்லை...

நெஞ்சகத் துள்ளுறை மாதே...
வலைத்தளத்தில்
அமர்ந்துறை வாழ்வே...

லெட்சுமியும் கொற்றவையும்
சரஸ்வதியுமான தேவி...
என் மனம் எனும்
செவ்வந்தியை
சமர்ப்பிக்கின்றேன்...

உன்னால் உலக
அறிவு பெற்றேன்..
வார்த்தைகள் கற்றேன்..

நீ என் கூடவே இருப்பதால்
சென்ற இடமெல்லாம்
சிறப்பெனக்கு..
என்ன கைம்மாறு
செய்தேனுனக்கு...

குழந்தைகள் தாயை
நேசிப்பது போல உன்னை
வீழும் வரை நேசிப்பேன் ...

7 கருத்துகள் :

இராகவன் நைஜிரியா சொன்னது…

// லெட்சுமியும் கொற்றவையும்
சரஸ்வதியுமான தேவி...
என் மனம் எனும்
செவ்வந்தியை
சமர்ப்பிக்கின்றேன்... //

சரஸ்வதி பூஜைக்கு சமர்ப்பணமாக இந்த கவிதை அழகாக வந்துள்ளது.

அதிலும் மேற்கூறிய வரிகள் அருமை.

thenammailakshmanan சொன்னது…

மிகச் சிறப்பாக எழுத நினைத்து இருந்தேன் ...
ஏதோ அவசர நோக்கில் எழுதி விட்டேன்...
மிக எளிமையாகத்தான் வந்துள்ளது...
எனினும் நன்றி ராகவன்...

ஹேமா சொன்னது…

தேனு என்ன சரஸ்வதி தோத்திரமா.நல்லாயிருக்கு.

இண்ணைக்கு இரண்டு பூ பூத்தாச்சு.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா
எல்லாப் பூக்களும் உங்கள் பாராட்டால் இன்னும் மலர்ந்துமணம் வீசுகின்றன ஹேமா

ரிஷபன் சொன்னது…

நீ என் கூடவே இருப்பதால்
சென்ற இடமெல்லாம்
சிறப்பெனக்கு..
என்ன கைம்மாறு
செய்தேனுனக்கு...
உண்மைதான்.. நாம் பெற்றுக் கொண்ட அளவு திருப்பி செய்ய முடிவதில்லை..

Thenammai Lakshmanan சொன்னது…

சரியா சொன்னீங்க ரிஷபன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...