ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நந்தியாவட்டை

விடியலின் ஈரத்தில்
புஷ்கரணியில் குளித்து
நந்தவனத்தில் உலா...

தளிர்க் கைகளால்
நந்தியாவட்டைகளைக்
கொய்து கொண்டிருந்தாய்...
என் மனசைக் கொய்வதாய்...

கோயிலில் த்வீதிய பாதம்
என்று கூட்டத்தில்
ஒரே மிதி பாதம்... ..

பறித்த பூ தொடுக்க
ஈரக்கூந்தலுடன்
நடந்துசென்றாய்...

சொட்டுச் சொட்டாய் நீரும்
பூக்குடலை நிரம்பி
நந்தியாவட்டமும் ...

உன் கொலுசுச் சத்தத்துடன்
சிதறிக் கொண்டே சென்றன
என் மனசைப் போல...

12 கருத்துகள் :

ஹேமா சொன்னது…

தேனு கடைசிப் பந்தியில் காதலோடு அசத்திட்டீங்க.
நந்தியாவட்டைப் பூவைப் பார்த்தே எவ்வளவு காலமாயிடுச்சு.நினைக்கவே அதன் மெல்லிய வாசமும் அழகும் கண்ணுக்குள் வருது தோழி.

thenammailakshmanan சொன்னது…

மெல்லிய வாசம் என்று கூறினீர்களே ஹேமா.... மிகச் சரி...
என்னையும் சூழ்கிறது வாசம்...

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

வருக வருக...

பதிவுலக காதல்கவிஞியே..

//தளிர்க் கைகளால்
நந்தியாவட்டைகளைக்
கொய்து கொண்டிருந்தாய்...
என் மனசைக் கொய்வதாய்...//

ம் நந்தியாவட்டை பூவை ஞாபகப்படுத்திட்டீங்க

thenammailakshmanan சொன்னது…

வாங்க... பிரியமுடன் ...வசந்த்...!

பிரியாணி எல்லாம் தீர்ந்துடுச்சா...
ஷஷிகா பிரியாணி ---ரெசிப்பி நீங்க...?

பட் பிரியாணி... சூப்பர் கலக்குங்க...

நன்றிங்க உங்க பின்னூட்டத்துக்கு...

கலகலப்ரியா சொன்னது…

அருமைங்க.. கவிதை மலர்ந்து மணக்கிறது.. நந்தியாவட்டைய போல..

இராகவன் நைஜிரியா சொன்னது…

நந்தியாவட்டை... வெள்ளைக் கலரில் - அடுக்கு நந்தியாவட்டை, ஒத்தை நந்தியாவட்டை என இரண்டு உண்டு.

குடந்தையில் படிக்கும் காலத்தில், வீட்டில் ஒற்றை நந்தியாவட்டை மரம் உண்டு. பூக்களைப் பறித்து கோயில்களுக்கு கொடுத்தும் உண்டு.

நைஜிரியாவில் சில நாட்களுக்கு முன்புதான் அடுக்கு நந்தியாவட்டை செடியைக் கண்டுபிடித்து, வீட்டுத்தோட்டத்தில் நட்டு வைத்து இருக்கின்றேன்.

(இது என்னாது கவிதையைப் பற்றி பின்னூட்டம் போடுவதை விட்டு, இந்த சுயபுராணம் பாடிகிட்டு இருக்கானேன்னு நினைக்கப் பிடாது... சும்மா ஒரு மாறுதலுக்காக)

இராகவன் நைஜிரியா சொன்னது…

// சொட்டுச் சொட்டாய் நீரும்
பூக்குடலை நிரம்பி
நந்தியாவட்டமும் ...

உன் கொலுசுச் சத்தத்துடன்
சிதறிக் கொண்டே சென்றன
என் மனசைப் போல... //

மனசை கவ்விச் சென்றனரோ... காதல் ரசம் சொட்டுகின்றது... ஈரத்தலையில் இருந்து சொட்டும் நீர் போல்..

thenammailakshmanan சொன்னது…

வாங்க கலகலப் பிரியா...
நன்றிங்க... உங்க பாராட்டுக்கு ..

என்ன இருந்தாலும் கோனார் நோட்ஸ் ரேஞ்சுக்கு மொழிபெயர்ப்புல நீங்க கில்லி ....
படிச்சு ரசிச்சேன்...
அருமை..

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராகவன்...

கோயில்களில் பூத்தொடுத்துக் கொடுப்பதற்கு என்று ஒருவர் உண்டு

அது போல் தேசிகர் என்று ஒருவர் சாமி சன்னதியில் தேவாரம் திருவாசகம் என்று பாடுவார் மிக அருமையாய் இருக்கும்

தற்போது அவர்கள் எல்லாம் அருகி விட்டார்கள்

நாகஸ்வர மேள வாத்தியக்காரர்கள் இடத்தை நகாரா பிடித்து விட்டது

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்குங்க.

thenammailakshmanan சொன்னது…

வாங்க ராஜாராம்
உங பின்னூட்டத்துக்கு நன்றீங்க

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...