புதன், 23 செப்டம்பர், 2009

டேலியா

காவலர்களின் பாதுகாவலில்,
டில்லி முகல் கார்டனில்,
பனி பர்தாவில்,
பீட்ரூட் நிறத்தில்,
விரிந்த மயிலாய்....

பூக்களிலே புஷ்டியான
பூ நீதான்...
பிரிய மனமில்லாமல்
பிரிந்து வந்தேன்...

மெர்க்காராவின் எஸ்டேட்டில்,
யூக்கலிப்டஸ் மரங்களும்,
தேயிலைச் செடிகளும் சூழ,

இளஞ்சூரியனில்
பனி பர்தா விலகி
ஈரப் புன்சிரிப்பால்
எனை வரவேற்ற போது

குளிரை விழுங்கியதாய்
ஜிலீரென்றது
எனைப் பின்
தொடர்கிறாயோவென்று...

குளிர் பறைந்தது
எனை வரவேற்க
மழையிலும் பனியிலும்
பூத்துக் காத்திருக்கிறாயென்று...

6 கருத்துகள் :

இராகவன் நைஜிரியா சொன்னது…

டேலியா பூக்கள் கேள்விப் பட்டு இருக்கேன். இதுவரை பார்த்த ஞாபகம் இல்லை (அ) பார்த்து இருக்கலாம்.. இதுதான் டேலியா என்று அறியாமல்.

பனிப் போர்வை என்று சில இடங்களில் படித்து இருக்கின்றேன். முதல் தடவையாக பர்தா கூட சேர்த்து கவிதை இயற்றியுள்ளீர்கள்.

இந்த கவிதையின் பின்னால் ஒரு மெல்லிய காதல் வாசம் அடிக்கின்றது.

thenammailakshmanan சொன்னது…

Thanks for ur comments Thiru Raagavan

thenammailakshmanan சொன்னது…

நினைவலைகளுக்கு காலம் கடந்தும் தொடர்ந்து வரும் சக்தி உண்டு

Muniappan Pakkangal சொன்னது…

Dehlia is a nice flower.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...