வெள்ளி, 18 செப்டம்பர், 2009

விட்டில்

யார் தடுத்தும் கேளாது
மாயக்கனவுக்குள்
வீழ்ந்து கொண்டு...

வலைகளை விரித்து
எலிகளை இயக்கி...
இன்னும் எனக்கான
பொறிகளைப் பெருக்கி...

ட்விலைட்டின் வேம்பயர் நீ...
உன்னால் உறிஞ்சப்பட
கழுத்தெல்லாம் ரத்தம் சேமித்து...

உன் ஈர்ப்பு விசையாலே
உனைச் சுற்றும்
துணைக்கோளாய்...

உன் நெருப்புப் பொறிபட்டு
நான் கருகி வீழ்வேன்
என்றாலும் உன் கவர்ச்சி..
.
உன் சுயமும் என் சுயமும்
ஒன்றிலொன்று
அழிந்து கொண்டு...

மழைதுளி மட்டும் உண்ணும்
சாகரப் பட்சியாய்
மழையான உனக்கேங்கி...

பால் மட்டும் அருந்தும்
அன்னம் போல்
தனித்திருந்து...

நீ என்றன் பரமாத்மா...
நான் உந்தன் ஜீவாத்மா...
ஓடி ஒளியும் நாள் தீர்ந்து
உனை அடைவது எப்போது...???

15 கருத்துகள் :

Muniappan Pakkangal சொன்னது…

Nalla irukku.

thenammailakshmanan சொன்னது…

thanks muniappan sir

ரிஷபன் சொன்னது…

உன் சுயமும் என் சுயமும்
ஒன்றிலொன்று
அழிந்து கொண்டு...
கவித்துவம் வெளிப்படுகிறது இயல்பாக..

tamiluthayam சொன்னது…

கனவுக்குள் விழுவது மனித இயல்பு. கனவுக்குள் விழ்வதும் மனித இயல்பு.

r.selvakkumar சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்...
ம்ம்ம்...
ம்ம்...
ம்...
ஓ.கே!

கமலேஷ் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு மேடம்...

அண்ணாமலையான் சொன்னது…

”பால் மட்டும் அருந்தும்
அன்னம் போல்
தனித்திருந்து...”
உங்க கவிதைக்கு மட்டும் தனியா ப்ளாக் ஆரம்பிக்கனும் போல.

அவனி அரவிந்தன் சொன்னது…

ரசிக்கும் படியாக இருக்கிறது.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமை ரிஷபன் நீடூர் வாழி நீங்களும் உங்கள் தரும குணமும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம் கவலை இல்லாத மனிதன் அருமையாய் இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி செல்வா பாராட்டுக்கு //ம்ம்ம்ம்ம் //

திருப்பாவை திருவெம்பாவை நல்ல முயற்சி செல்வா

பாராட்டுக்கள் தொடர்ந்து தருவதற்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி கமலேஷ்
காதலின் பக்கங்களும் டீனேஜ் கவிதைகளும் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான்

உங்க ப்ளாக்கில் நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை அண்ணாமலையான்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அரவிந்தன் பாராட்டுக்கு

அருமை அவனி அரவிந்தன் வன்மழை கவிதைக்கு

பாராட்டுக்கள் யூத்புல் விகடனில் வெளி வந்ததற்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...