அவென்யுவின் அழகுக்காய்
பூச்செடிகள் வளர்க்க
வாஸ்துவில் இருந்து
தப்பி வளர்ந்தது
முருங்கை ஒன்றும்..
விழுந்த குப்பையெல்லாம்
கூட்ட வந்த நீ
முருங்கை போல
முறுக்கு ஏறி..
வெட்டணும்னு
சொல்லும்போதெல்லாம்
பூச்சொரிஞ்சு
காய்ச்சு நிற்கும்..
முருங்கைப்பூ பால் கூட்டும்
முளைச்ச பிஞ்சுக்குழம்பும்
பிரசவிச்ச அக்காவோட
சேர்ந்து நானும்
ருசிச்சுருக்கேன்,....
கிளையை யாராவது
ஒடைச்சால் என் கை
ஒடிஞ்சது போல...
துடிதுடிப்பில்
நானும் அதுவும்...
குமிஞ்ச குப்பை
அள்ளிப்போட்டு
குறையொன்னும்
சொல்லாத நீ ...
பல்காட்டி சிரிக்கையிலே
பூத்துருக்கும்
முருங்கைப்பூ...
பூச்செடிகள் வளர்க்க
வாஸ்துவில் இருந்து
தப்பி வளர்ந்தது
முருங்கை ஒன்றும்..
விழுந்த குப்பையெல்லாம்
கூட்ட வந்த நீ
முருங்கை போல
முறுக்கு ஏறி..
வெட்டணும்னு
சொல்லும்போதெல்லாம்
பூச்சொரிஞ்சு
காய்ச்சு நிற்கும்..
முருங்கைப்பூ பால் கூட்டும்
முளைச்ச பிஞ்சுக்குழம்பும்
பிரசவிச்ச அக்காவோட
சேர்ந்து நானும்
ருசிச்சுருக்கேன்,....
கிளையை யாராவது
ஒடைச்சால் என் கை
ஒடிஞ்சது போல...
துடிதுடிப்பில்
நானும் அதுவும்...
குமிஞ்ச குப்பை
அள்ளிப்போட்டு
குறையொன்னும்
சொல்லாத நீ ...
பல்காட்டி சிரிக்கையிலே
பூத்துருக்கும்
முருங்கைப்பூ...
முருங்கைப்பூ மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது. பலவிதத்திலும் உபயோகமுள்ள பூ முருங்கைப்பூ.
பதிலளிநீக்குஎனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, என் அக்காவிற்கு குழந்தை பிறந்த போது என் பாட்டி முருங்கை பூ, முருங்கை பிஞ்சு எல்லாம் கொண்டு வரச் சொல்லி சமைத்து போடுவார்கள். என்ன சமைப்பார்கள் என்று கேட்டு விடாதீர்கள். அது தெரியாது. ஆனால் முருங்கை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பது நல்லாத் தெரியும்.
எல்லா விஷயங்களையும் நினைவின் பதிவில் வைத்து இருக்கின்றீர்கள் ராகவன்
பதிலளிநீக்குமருத்துவ குணத்தையும் சேர்த்து இருக்கலாம் என தற்போது நினைக்கின்றேன்
I ve add the information that u gave me Raagavan
பதிலளிநீக்குIs it correct now...
அச்சோ காலேல நீலச்சங்குப்பூ.இப்போ வந்து பாத்தா முருங்கைப்பூ.தேனு கலக்கிறீங்கப்பா.
பதிலளிநீக்குஅதோட 50 ஆவது பதிவா.என் நிறைவான வாழ்த்துகள் தோழி.
ஓ...முருங்கையிலை நிறைய மருத்துவக்குணம் இருக்குன்னு சொல்றாங்க.எங்க ஊர்ல குழந்தை பிறந்தவங்களுக்கு பத்தியக்கறி/குழம்புன்னு அரைச்சுக் கறி வச்சுக்குடுப்பாங்க.சக்கரை நோய்க்காரங்களுக்கு இலையை வறுத்துச் சாப்பிடக் குடுப்பாங்க.ஆனால் சாதாரணமாகவே பால்கறி,குழம்பு,வறை,சொதி ஏன் கடைந்தெடுத்த வெண்ணையில் முருங்கை இலையை பொரித்து எடுத்துத் தருவார்கள்.எங்கள் வீட்டில் இதுக்குப் பெரிய சண்டையே நடக்கும்.ஏன் நண்டு சமையல் செய்யும்போதும் தேடிப்போடுவார்கள் முருங்கையிலை.முருங்கைச் சமையல் வாசம் வாய் ஊறுது.
இங்கு சுவிஸ் ல் ஒரு சிறிய கட்டு மண்ணும் பழுத்தல் இலையுமா கலந்து இறக்குமதி செய்து வரும்.விலை பொன் போல.
//200 ஆவதாக வந்த தோழியே நீ நீடு வாழி.//
பதிலளிநீக்குதேனு,என்ன கணக்கு.200 ஆவது.உங்களுக்கு
200 தோழிகள் இருக்காங்களா?அப்பாடி !
என்றாலும் நன்றி.
எப்பவாவது நேரில் பார்க்கும் போது உங்களிடம் உதை வாங்குவேன் என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குஓவ்வொரு கவிதைக்கும் எதாவது சொல்லிகிட்டு இருக்கேன்.
ஆனால் அதன் மருத்துவ குணத்தை சேர்த்த விதம் மிக அழகு.
நன்றி. என் பின்னூட்டத்திற்கும் மதிப்பு கொடுப்பதற்கு.
அன்புத்தோழி ஹேமா 200 தோழிகள் கல்லூரிப் பருவத்தில் இருந்தார்கள்
பதிலளிநீக்குதற்போதுவட்டம் குறுகி விட்டது
குடும்பம் குழந்தை என்று 5,6 பேர் கூட ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க இயலவில்லை
என் வலைத்தளத்தில் 200 வது ஆளாக சுவிஸ்ஸில் இருந்து நீங்கள் வருகை புரிந்தீர்கள் நியோகவுண்டரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் உங்கள் வரவில் மனம் துள்ளியது
உடனே தட்டினேன் தகவலை...
என் வீட்டு வாயிலில் முருங்கை மரம் உள்ளது எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் பிஞ்சு பூ காய் இலை என்று வயிறு நிறைய மனம் நிறைய சாப்பிட்டுச்செல்லாம்
50ஆவது இடுகைக்கு உங்கள் வாழ்த்து எனக்குப் பெருமை சேர்க்கிறது ஹேமா
அன்புடன் தேனு
நான்தான் தங்களுக்கு நன்றி கூறவேண்டும் ராகவன்... பூக்களைப் பற்றி எதேச்சையாக எழுதினேன்...
பதிலளிநீக்குதாங்கள் மற்ற பூக்களைப்பற்றியும் எழுதும்படிக் கூறியது., புதிய உத்வேகத்துடன் எழுத வைத்தது...
தினம் நீங்கள் வந்து பின்னூட்டம் எழுதி ஊக்குவித்தது... உங்களுக்குப் பிடித்த வரிகளைமேற்கோள் காட்டியது என்று இன்று 50வது இடுகை வெளியிடுகின்றேனென்றால் அதன் எல்லாப் பெருமைகளும் உங்களைத்தான் சேரும்
மீண்டும் நன்றி ராகவன் என் 50 ஆவது இடுகை உங்கள் பின்னூட்டத்தால் எனக்கான இடம் ஒன்று வலைப்பதிவர் நல்லுலகில் ஈந்து உள்ளது
அனைவரையும் இணைத்து உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்லும் உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் ராகவன்
முருங்கை பூவுக்கு என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாம் என வந்தால்..அடிச்சு போடுறீங்க தேனு!உபயோகம் தாண்டி பூவை பூவாக மட்டும் பார்க்கிற இந்த மனசு அபூர்வம்!பத்திரபடுத்துங்கள்!.பிறகு வாறேன்..
பதிலளிநீக்குநன்றிங்க ராஜாராம்
பதிலளிநீக்குநல்ல கவிதை..
பதிலளிநீக்குThanks GUNASEELAN SIR
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!