எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆவாரம் பூ

பொங்கலுக்குப் பொங்கல்
விடுமுறையில் ஊர் வாரேன்..
புது நெல்லு வாசத்தில் நீ
வெல்லமிட்ட பொங்கல் தின்ன...

காணும் பொங்கலன்னிக்கு
கன்னுப்புள்ளையும் நெக்கதிரும்
ஆவாரம் பூவும் சொமந்த காலம்
என் நெனைப்பில் ஓடுதடி...

கண்ணுக்குத் தெரியாத
கயிறுவச்சு இழுக்குறீயே....
மஞ்சு வெரட்ட விட்டுப்பிட்டு
அடி..! என் மஞ்சக்கெழங்கு ஒன்னோட
பூப்பறிக்க வந்தேன்டி....

கொப்பும் குலையுமா
கொள்ளைச் சிரிப்போட
காடாட்டம் பூத்திருக்கும்...
ஆவாரம்பூ அலைஅலையா...
என் அயித்தைமக ஒன்னப்போல...

கூட நெறைய அள்ளி வந்து
குதிர் எரம்பக் கொட்டி வச்சோம்...
யார் கூட எப்பிடியோ
ஒங்கூட நெறைஞ்சு மகிரும்...

அள்ள அள்ளக் கொறையாத
அழகுப்பாதகத்தி...
அடுத்த பொங்கலுக்குக் காத்துருக்கேன்
அடி..! சேர்ந்து நாம் பூப்பறிக்க...!

11 கருத்துகள்:

  1. // அள்ள அள்ளக் கொறையாத
    அழகுப்பாதகத்தி...
    அடுத்த பொங்கலுக்குக் காத்துருக்கேன்
    அடி..! சேர்ந்து நாம் பூப்பறிக்க...! //

    இந்த தடவை இந்தியா வந்திருந்த போது, பல இடங்களில் வயற்காடுகள் கான்கீரீட் காடுகளாக மாறியிருந்ததைக் கண்டேன்.

    வருங்கால சந்ததியருக்கு, படத்தில் மட்டுமே ஆவாரம்பூவை காண்பிப்போம் என நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ராகவன்...
    பொங்கல் சமயம் கிடைப்பது கூட சிறிய கொப்புதான்...
    எங்கிருந்து கொண்டு வருவார்கள் என்பதும் தெரியவில்லை...
    "கான்க்ரீட் காடுகள்" என்பது சரியான வார்த்தைப் பிரயோகம்...
    எதிர் கால சந்ததியினருக்கு இயற்கையான காற்று கிடைக்குமா என்பதே சந்தேகம்....இப்போதே தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்

    பதிலளிநீக்கு
  3. ஏங்க என் ப்ளாக்குல பால் ஓடுது, ஆனா தேனத்தான் கானோம்?

    பதிலளிநீக்கு
  4. போயிட்டு வந்தாச்சு ஹைஸ்பீடு கந்தசாமி
    நல்லா இருக்கு அண்ணாமலையான்

    நல்ல பகிர்வு
    பசங்க திருந்தனும்

    பதிலளிநீக்கு
  5. அள்ள அள்ளக் கொறையாத
    அழகுப்பாதகத்தி...

    இந்த வரியில் மனதைக் கொள்ளையடித்து விட்டீர்கள்.. மனசு காதலில் லயிக்கும்போது பீரிட்டு வரும் உணர்வின் அற்புத வெளிப்பாடு..

    பதிலளிநீக்கு
  6. பொங்கலுதான் பக்கத்துல
    பூப்பறிக்க ரெடியாவுங்க...
    கவிதைப் புயல் தேனுவுக்கு
    மால போட்டு மரியாத செய்ய...

    பதிலளிநீக்கு
  7. நிஜமாவே...சூப்பருங்க...என்னைப்போல வெளி நாட்டில் வாழக் கூடியவர்களுக்கு எல்லாமெ கனவா போய்டுச்சுங்க....! உங்க கவிதை அப்படியே பொங்கலுக்கு எங்க கிராமத்துக்குள்ள போய்ட்டு வந்த ஒரு உணர்வு...! சூப்பர்.....!

    - Dheva. S

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரிஷபன்
    உங்க நிலவு கவிதை ரொம்ப அருமை ரிஷபன் அட்டகாசமா இருக்கு

    ம்ம்ம் கலக்குங்க

    பதிலளிநீக்கு
  9. அடடா மாலை எல்லாம் கிடைக்குமுன்னு தெரிஞ்சா இன்னும் அருமையாய் எழுதி இருக்கலாமே

    நன்றி அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  10. நன்றி தேவா முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க

    நன்றி உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...