எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

கொடிச் சம்பங்கி

பூக்களுக்கு அனுமதி
இல்லாத இடங்களிலும்
நீ நுழைந்து விடுவாய்
பூப்போல...

பஸ்ஸின் நெரிச்சலில்
எரிச்சலில்
அலுவலகத்துக்கு நானும்
பள்ளிக்கு நீயும்...

சீருடையையும்
சிரமத்தையும் மீறி
தோழிகளுடன் சிரிப்பு ..
என் எரிச்சலுக்கு
மருந்தாய்..

நெருக்கமான
மோதிரம் போல்
கோர்க்கப்பட்ட
சம்பங்கி சூடி...

பச்சைக் காம்பும்
மஞ்சள் பூவும்
உன் கருவிழியும்
பார்வையும் போல்...

இறக்கையைப் போல்
என் மேல்
தத்தித் தத்தி...

பஸ் திரும்பும்
போதெல்லாம்
உன் மேல் மோதி
காற்று சம்பங்கி மணத்தை
என் மேல் அப்பியது..

நீ இறங்கிச் சென்றபின்
சம்பங்கி சூழ
நான்...

5 கருத்துகள்:

  1. பூக்களுக்கே கவி எழுதும் ஒரு கவித்தோழி.
    எத்தனை பூக்கள்.உங்கள் புன்னகைக்குள்.
    தேனு, விடுமுறையில் வெளியில் நான்.என்றாலும் ஒரு முறை ஓடி வந்தேன் உங்கள் பூங்காக்குள்.நிறைந்த வாசனை எடுத்துப் போகிறேன்.வருவேன் வீடு போனதும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி என்னுடைய ஹேமாவுக்கு...

    நீங்கள் எங்காவது வெளியில்தான்
    இருக்க வேண்டுமென நினைத்தேன்...

    எப்படி எனக்குத் தெரிந்தது?
    may be intuition...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அழகாய் இருக்கு தேனு.//பச்சை காம்பும் மஞ்சள் பூவும் உன் கருவிழியும் பார்வையும் போல//அப்பா..என்ன அருமையாய் இருக்கு.பூக்கள் தீர்ந்து போகாமல் இருக்க வேணுமே என்கிற பதைப்பு கூடிக்கொண்டே இருக்கு.beutiful!

    பதிலளிநீக்கு
  4. தொடரைஅடுத்து தொடரப்போவது யாரு
    சஸ்பென்சா இருக்கு ராஜாராம்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...