எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சாமந்தி

ஆடி மாசம்
அம்மன் கோயில்
கொடை...

மஞ்சள் பூசி
மஞ்சள் சூடி
மஞ்சள் அணிந்து
மகிமையாய் நீ...

பிரகாரம் எங்கும்
சிதறிக்கிடந்த
சாமந்திப் பூவிதழ்கள்
பேசிக்கொண்டன....

தம்மைத் தாமே
சூடியும் சுமந்தும்
அம்மனைச்
சுற்றி வந்ததாக...!!!

7 கருத்துகள்:

  1. பூ கவிதைகளில் மூன்றாவது கவிதை. இன்னும் மற்றப் பூக்கள் பற்றிய கவிதைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

    // தம்மைத் தாமே
    சூடியும் சுமந்தும்
    அம்மனைச்
    சுற்றி வந்ததாக...!!! //

    தற்பெருமை ???

    பதிலளிநீக்கு
  2. வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்
    மனிதருக்கே இருக்கும்போது
    வாசமுள்ள மலர்களுக்கு
    இருக்கக் கூடாதா தற்பெருமை???

    பதிலளிநீக்கு
  3. // வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்
    மனிதருக்கே இருக்கும்போது
    வாசமுள்ள மலர்களுக்கு
    இருக்கக் கூடாதா தற்பெருமை??? //

    சரியான கேள்வி கேட்டீங்க. பதில் தெரியலைங்க...

    தற்பெருமை சரியா / தவறா / தப்பா? இதுவே பல சமயங்களில் எனக்கு புரியவில்லை. இப்படி விடைத் தெரியாத கேள்விகளுக்கு என்னால் எப்படிங்க பதில் சொல்லமுடியும்.

    பதிலளிநீக்கு
  4. ப்ளாக்கில் கவிதை எழுதி வெளியிடுவது கூட தற்பெருமையின் வெளிப்பாட்டில் ஒன்று என நினைக்கிறேன். "எனக்கும் ஒரு கார் இருக்கு என்பது போல் எனக்கும் ஒரு ப்ளாக் இருக்கு " என்பது ...... தங்களின் மிகச்சிறந்த நான் ரசித்த வார்த்தைகள் ....நன்றிகள் திரு இராகவன் .

    பதிலளிநீக்கு
  5. "தம்மைத் தாமே
    சூடியும் சுமந்தும்
    அம்மனைச்
    சுற்றி வந்ததாக...!!!"

    ஏன் தற்பெருமை என்று கூறவேண்டும்? பெண்களோடு ஒப்பிட்டு என்றும் நினைக்கலாமே?

    பதிலளிநீக்கு
  6. நன்றி தினேஷ் பாபு

    உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...