எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 செப்டம்பர், 2009

வாடாமல்லி

உருவத்தில் ஆணாகவும்
உள்ளத்தில் பெண்ணாகவும்
பருவ வேறுபாடு இல்லாத
பச்சிளம் குழந்தை நீ...

எல்லோருடனும் சேர்ந்து
வாழும் ஆசையில்
கதம்பத்தில் இணைந்தாய்...

தனித்துத் தெரிவது
உன் நிறம் மட்டுமல்ல
குரலும்தான்...

விதையில்லாமல்
பூ உதிரும் திசையெல்லாம்
பூத்துக்கொண்டே சென்றாய்...

சிகண்டியாகவும்...
பிருகன்னள்ளையாகவும்... .
பெண்மையிலும் போர்க்குணம்...
ஆண்மையிலும் நளினம்...

யாதுமான இறைவன்
நீயுமாகி நின்றான்...

13 கருத்துகள்:

  1. // விதையில்லாமல்
    பூ உதிரும் திசையெல்லாம்
    பூத்துக்கொண்டே சென்றாய்... //

    இதுவரைக் கேள்விப் பட்டதே இல்லீங்க. ஆச்சர்யமா இருக்கு.. உண்மையாகவா... இல்லை கவிதைக்காக எழுதப்பட்டதா?

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் திரு இராகவன்
    வாடாமல்லிப் பூக்களை எடுத்து மண்ணிலோ, தொட்டியிலோ சிறிது தூவிப் பாருங்கள். கொஞ்சம் வெய்யிலும் ஈரப்பதமும் போதும்
    ஒரு மாதத்திலேயே சின்னச் செடியில் ஒன்று இரண்டு பூக்களைப் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  3. "தனித்துத் தெரிவது
    உன் நிறம் மட்டுமல்ல
    குரலும்தான்..."
    ?

    பதிலளிநீக்கு
  4. நிஜமாவே இந்தக்கவிதையும் ஒரு வாடாமல்லிதான்

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்குத் தெரியாதா அண்ணாமலையான் குரல் வேறுபாடு அவர்களின் அவஸ்தை என்று

    பதிலளிநீக்கு
  6. நன்றி நவாஸ் உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  7. கவிதை ஒரு தகவலையும் சொல்லிப் போனது.. வாடாமல்..

    பதிலளிநீக்கு
  8. நல்லாயிருக்குங்க.. பிரச்சாரத்தன்மையில்லாம எழுதியிருக்கீங்க

    //விதையில்லாமல்
    பூ உதிரும் திசையெல்லாம்
    பூத்துக்கொண்டே சென்றாய்...
    யாதுமான இறைவன்
    நீயுமாகி நின்றான்... // :)

    பதிலளிநீக்கு
  9. புல் பேசும் பூ பேசும் கேள்விப் பட்டதில்லையா அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  10. ரிஷபன் உங்க மீட்டெடுப்போம் அருமை

    ஆஹாஹா அட்டகாசம் ரிஷபன் அசத்துறீங்க

    பதிலளிநீக்கு
  11. அஷோக் தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...