புதன், 30 செப்டம்பர், 2009

பூவரசம்பூ

பயாலஜி லாப்பில்
தவளைக்கும் எலிக்கும்
இனப்பெருக்க உறுப்பும்

இதயம் இணைந்த
சுவாச உறுப்பும்
இருக்கிறதா என

ஆணியும் குண்டூசியும்
மாட்டி தேடிக்
கொண்டிருந்தோம்...

தாவரவியல் பாடத்துக்காக
ஹெர்பேரியம் செய்ய
உன் வீட்டில் இருந்து...

பூவரசம் பூக்களைப்
பாடம் செய்து எனக்காகக்
கொண்டு வந்தாய்...

ஒரு பூவரசம் பூவில்
மட்டும் சின்னதாக
ஒரு சிவப்பு
இதயத்தையும் வரைந்து...

இருவரின் கைகளும்
பூப் பரிமாற்றத்தின் போது
உரசிக் கொண்டதில்
இதயம் வாய்க்கும்
வயிற்றுக்குமாகத் துடித்தது...

இன்று ஆர்ட் கேலரியில்
உன் ஆலிலைப் படக்
கண்காட்சியைப் பார்த்த
போது நினைத்தேன்...

இன்னும் விடவில்லையா
நீ பாடம் செய்தவற்றில்
படம் வரைவதை ...

18 கருத்துகள் :

கவிதை(கள்) சொன்னது…

+2 நினைவுகளை கிளறி விட்றீங்க. இவ்வளவு பூக்களா கிரேட். "நீ பாடம் செய்தவற்றில்
படம் வரைவதை ... " Beautiful.

thenammailakshmanan சொன்னது…

பயாலஜியில் நீங்களும் சூப்பர்தான்

//கார்டெக்ஸ் கழிவுப் பதிவை விரைந்து வெளியேற்று //

நல்லா இருந்துச்சு

நேசமித்ரன் சொன்னது…

இந்தக் கவிதையை கவிதையில் இருப்பவர் வாசித்தால்
கேட்கக் கூடும்

நீ இன்னும் வார்த்தைகளால் படங்களை
பூக்களை பூக்கள் சார்ந்த இதயங்களை
உயிர்ப்பிப்பதை நிறுத்தவில்லையா

என

நன்றாக இருக்கிறது பருவம் பிறழாமல் நீங்கள்
வளர்த்து வைத்திருக்கும் பூந்தோட்டம்

thenammailakshmanan சொன்னது…

நேச மித்திரன் உங்கள் நேய நாயகி அருமை

மாஜிக் ரியலிஸம்

போஸ்ட் மார்டனிஸம் என்று கலக்குறீங்க

நன்றி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

இராகவன் நைஜிரியா சொன்னது…

// இன்னும் விடவில்லையா
நீ பாடம் செய்தவற்றில்
படம் வரைவதை ...
இடுகையிட்டது //

நினவலைகள் ... எப்போதும் மறக்காதுங்க...

தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு நினைவு வந்தது சினிமாப் பாடல்...
பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு... என்ற பாடல்தாங்க.

பழைய நினைவுகள் வந்து முட்டி மோதிச் சொல்லுகின்றன. அது கவலையில்லாமல் திரிந்த காலம்..

இராகவன் நைஜிரியா சொன்னது…

// போஸ்ட் மார்டனிஸம் //

பின் நவீனத்துவத்தில் கல்லக்கல் நேசமித்ரன் அவர்கள். ஒவ்வொரு கவிதையும் கலக்கல் கவிதை.

thenammailakshmanan சொன்னது…

பூவரசம்பூ பற்றி எழுதலாம்னு நினச்ச்வுடனே என் மனசுல ஓடுன பாடல் வரி அதுதான்
ட்க் ட்க் குன்னு இப்புடி நினைவலைகள்ல மன்னனா இருக்கீங்க ராகவன்

Mrs.Menagasathia சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!!

சந்ரு சொன்னது…

நன்றாக எழுதி இருக்கிங்க

thenammailakshmanan சொன்னது…

thanks menakasathiya
nice to view ur SHASHIGA

thenammailakshmanan சொன்னது…

thanks chandru
nice of ur ilangai valaip pathivargaland sonthangal and chandruvin pakkam

கவிதை(கள்) சொன்னது…

"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி"

ரொம்ப சூப்பர்ங்க

ஹேமா சொன்னது…

பூக்களின் தோழியே நலமா?நானும் கூட.தேனு எத்தனை பூக்களுக்குள் தேன் எடுப்பதாய் யோசனை.ஞாபகப் பூக்கள் சருகானாலும் சின்னச் சின்ன நினைவு வாசனைகளைச் சுமந்தபடிதான்.அத்தனை பூக்களும் கதை பேசுகின்றன உங்கள் வரிகளூடாக.

thenammailakshmanan சொன்னது…

thanks vijay for reading my old issues of poems too...

thenammailakshmanan சொன்னது…

Hema,
nice to see u again ma
innikku enna ezuthi irukkiingannu paarkkanum thanks for ur comments pa

பா.ராஜாராம் சொன்னது…

ஆச்சர்ய படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் தேனு!பூவரசம் பூவும் அழகாய் பூத்திருக்கு!

thenammailakshmanan சொன்னது…

thanks Rajaram for ur comments

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...