ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரோஜா

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

துணி எடுக்கச் சென்ற நான்
தன்னையுமறியாமல்
கன்னங்களை அழுந்தத்
துடைத்துக் கொண்டேன்...

நேற்று நீ இட்ட முத்தம்
ரோஜாவும் முட்களுமாய்
கன்னம் வழி கசிந்து
பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று

9 கருத்துகள் :

இராகவன் நைஜிரியா சொன்னது…

// துணி எடுக்கச் சென்ற நான்
தன்னையுமறியாமல்
கன்னங்களை அழுந்தத்
துடைத்துக் கொண்டேன்.. //

ஆஹா.. ஆடிப்போயிட்டேங்க..

அருமையான கவிதைங்க

Yalavan சொன்னது…

நன்றாக உளது கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு

கவிக்கிழவன்
http://kavikilavan.blogspot.com

Muniappan Pakkangal சொன்னது…

Mutham,Roja,Mutkal-nalla korvai.

thenammailakshmanan சொன்னது…

இராகவன் நைஜீரியா அவர்களே
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

thenammailakshmanan சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிக்கிழவன்...
யாழவன் உங்கள் கவிதைகள் நிஜமானவை

thenammailakshmanan சொன்னது…

தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதற்கு
நன்றி முனியப்பன் ஸார்

ஈரோடு கதிர் சொன்னது…

சூப்ப்ப்ப்ப்ர்....

thenammailakshmanan சொன்னது…

நன்றி கதிர் உங்க கருத்துக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...