திங்கள், 6 ஏப்ரல், 2015

ஃபேஸ்புக் பயன்பாடு பற்றி குங்குமம் தோழியில் கருத்து.முகநூல் பயன்பாடு பற்றி குங்குமம் தோழியின் திரு நீலகண்டன் என்னிடம் தொலைபேசி மூலம் பேட்டி கண்டார். அது நவம்பர் 1 - 15, 2014 குங்குமம் தோழி இதழில் 68,69,70,71,72 ஆம் பக்கங்களில் வெளியாகி உள்ளது. கிருத்திகா, சந்தியா, தமிழ், மாலா, தமயந்தி ஆகியோரின் கருத்துகளும் வெளியாகி உள்ளன.


71- 72 ஆம் பக்கங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கருத்துப் பதிவாகி உள்ளது.

///ஃபேஸ்புக்கை ஜனரஞ்சகமாகப் பயன்படுத்துபவர்களில் தேனம்மை லெக்ஷ்மணன் பிரதானமானவர்.  சக ஃபேஸ்புக்கர்களின் கேலி கிண்டலையும் தாண்டி தொடர்ச்சியாக சமையல், இல்ல நிர்வாகம், கவிதை என இயங்கி வரும் இவர், ஃபேஸ்புக்கை ‘தன் கனவுகளைத் திறந்த ஜன்னல் ‘என்கிறார்.

“கல்லூரிக் காலத்திலேயே எழுத்தாளராக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவள் நான். பல்வேறு காரணங்களால் அத்தருணத்தில் அதற்கான வாய்ப்புகள் வாய்க்கவில்லை. இப்போது குடும்பத்தார் தருகிற ஊக்கமும் வழிகாட்டலும் தீவிரமாக எழுதும் எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. எழுதும் படைப்பைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்ல ஃபேஸ்புக் ஊடகம் பயன்படுகிறது.

 ஃபேஸ்புக்கில் நான் எழுதியதைப் பார்த்தபிறகே பல இதழ்களில் எனக்கு எழுத வாய்ப்புக் கிடைத்தது. அந்த வகையில் மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயமாகவே ஃபேஸ்புக்கைப் பார்க்கிறேன்.

படித்து விட்டு வீட்டுக்குள்  இருக்கிற பெண்களுக்கு இந்தப் பேருலகத்தை விரித்துக் காட்டுகிற ஜன்னலாக இருப்பது ஃபேஸ்புக்தான். ‘கை அருகே உலகம்’ என்று சொல்வது இதற்குத்தான் பொருந்தும்.

பொதுவாக நமக்குச் சில கற்பிதங்கள் உள்ளன.  அரசியல் பற்றியோ, விளையாட்டுப் பற்றியோ பெண்கள் பேசவே கூடாது அப்படிப் பேசினால் வன்மமாக வந்து பதிலடி தருவார்கள். அந்த நிலை இன்று மாறி இருக்கிறது. நிறைய இளம் பெண்கள் சர்வ சாதாரணமாக வந்து சமூகக் கொடுமைகளை விவாதிக்கிறார்கள். வன்மத்தோடும் வக்கிரத்தோடும் வரும் கமெண்டுகளுக்கு அதே தொனியில் பதிலும் கொடுக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, நான் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்புவதில்லை. என் களம் தனி. தொடக்கத்தில் ஆர்வக் கோளாறில் நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்திருந்தேன். இப்போது லிமிட் செய்துவிட்டேன். யார் என்ன பதிவு போட்டாலும்  எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு அருகில் செல்லவே மாட்டேன். இன்று வரை வருந்தும் அளவுக்கான பிரச்சனைகள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. “ என்கிறார் தேனம்மை லெக்ஷ்மணன்.

----- அழகுறத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி திரு. நீலகண்டன் &  குங்குமம்  தோழி !.


7 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அழகான அருமையான பேட்டி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

//என்னைப் பொறுத்தவரை, நான் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்புவதில்லை.//

வெரி குட் ! :)

//என் களம் தனி தொடக்கத்தில் ஆர்வக் கோளாறில் நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்திருந்தேன்.//

இதுதான் நம்மில் பலரும் செய்துள்ள மாபெரும் தவறு.

//இப்போது லிமிட் செய்துவிட்டேன்.//

மிகச்சரியே. சந்தோஷம்.

//யார் என்ன பதிவு போட்டாலும் எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு அருகில் செல்லவே மாட்டேன்.//

நல்லதொரு கொள்கை. பெரும்பாலும் அனைவரும் கடைபிடிப்பதும் இதுவே.

//இன்று வரை வருந்தும் அளவுக்கான பிரச்சனைகள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை.//

மிக்க மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கோபால் சார். ஆம் நட்பும் கூட அளவோடு இருந்தால் நலமாய்த்தான் இருக்கு. :) நல்லதொரு கொள்கை என்று கூறியமைக்கு நன்றி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Chandragowry Sivapalan சொன்னது…

வலையுலகம் பற்றிய பலரது கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்துகின்ற மனிதன்தான் வெற்றியை அடைய முடியும்.இந்தவகையில் Facebook உமர் விதிவிலக்கல்ல. வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சந்திர கௌரி சிவபாலன் :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் முடிவான தீர்மானம் மிகவும் அருமை... தொடர்க... வாழ்த்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமையான கருத்து! அதுவும் இறுதியில் சொல்லி இருக்கின்றீர்கள் பாருங்கள்! அது சூப்பர்! எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதானே! இல்லையா. சரியான் விகிதத்தில் உபயோகித்தால் நல்ல பயனே!

வாழ்த்துகள்! சகோதரி!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...