எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஏப்ரல், 2015

குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

16. சைனீஸ் செக்கர்ஸ்

இது எல்லாம் ப்ளாஸ்டிக் அட்டையில் விளையாடுவது. ஸ்டார் வடிவப் பள்ளம் கொண்ட ப்ளாஸ்டிக் அட்டையில் ஒவ்வொருவருக்கும் பத்துக் காய்கள் உண்டு. 6 பேர் விளையாடலாம். ஒவ்வொரு காயையும் தாண்டி தன் எதிர் ஸ்டார் கோணத்தை அடைய வேண்டும். யார் முதலில் சேர்க்கிறார்களோ அவர்களே வென்றவர்கள்.  

17. லூடோ

இதை நால்வர் விளையாடலாம். அப்ஸ்டகிள் ரேஸ் போல அங்கங்கே தடை வந்து நால்வர் கட்டத்தையும் சுற்றிவந்து கடைசியில் வின்னிங்க் பாயிண்டை அடைவது. இதில் தாயம் போட்டால்தான் ஆட்டம் ஆரம்பிக்கும். 


18. பரமபதம் – ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸ். 

பரமபதத்தை தாயக்கட்டை போட்டும், ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸை ப்ளாஸ்டிக் தாயக் காயினிலும் -- டைஸ்  வைத்து - விளையாடி இருக்கிறோம். 
பாம்பும் ஏணியும் இருக்கும் விளையாட்டு இது. பாம்பின் வாய் இருக்கும் கட்டத்தில் வந்தால் வாய் வழியாக வால் இருக்கும் கட்டத்துக்கு வந்துவிட வேண்டும். ஏணி வந்தால் ஏணிப்படி வழியாக மேலே ஏறி கடைசிப்படி உள்ள கட்டத்துக்கும் போகலாம். ஆனால் 99 கட்டத்தில் பாம்பு கடித்து சில சமயம் 2 ஆம் கட்டத்துக்கு வந்துவிடுவோம். திரும்ப முதல்லேருந்தா .. என்று சலித்துக்கொண்டே ஆரம்பிக்கலாம் :) இதேதான் ஸ்நேக்ஸ் & லாடர்ஸ் கேமிலும். 

19. பிஸினஸ். ட்ரேட். வியாபாரம். 

இது வியாபாரம் எனப்படும் விளையாட்டு. இதில் பணம் இடம் எல்லாம் உண்டு. ட்ரேடிங்க் செய்யக் கற்றுக் கொள்ளலாம். மிக நீண்ட நேரம் எடுக்கும் விளையாட்டு இது. பேப்பர் பணம் சுழலும் விளையாட்டு.20. காரம்போர்டு

இது தற்போதைய தலைமுறைக்கும் தெரிந்த விளையாட்டு. ஒரு சிவப்பு, 9 வெள்ளை 9 கறுப்பு காயின்கள் உண்டு. ஸ்ட்ரைக்கரும் போரிக் பவுடரும் ஈசியா மைனஸ் போட வைக்கும்.. :) 

21. செஸ்

இதுவும் இண்டர்நேஷனல் விளையாட்டு. விளையாடிக்கொண்டே இருக்கலாம். ராஜா ராணி, தேர், யானை, குதிரை சிப்பாய் என்று. ராஜாவுக்கு ஒரு கட்டம் மூவ் பண்ணலாம். ராணிக்கு எண்ட்லெஸ் பவர், தேர் கிராஸாதான் போகும் யானை நேரா சைடாத்தான் போகும், குதிரை எல் மாதிரி மூன்று கட்டம் தாண்டும். சிப்பாய்க்கு முதலில் இரு கட்டங்களும் அடுத்து ஒரு கட்டமும் கிராஸாகத் தாண்டலாம். ராஜாவுக்கு செக் வந்து விட்டால் காப்பாத்தணும். இல்லாவிட்டால் அவுட். சில சமயம் இருபக்கமும் வெற்றி தோல்வியின்றி ட்ராவில் முடியும்.  

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.


2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.

.

5 கருத்துகள்:

 1. பழைய விளையாட்டுக்கள் அனைத்தையும் படங்களுடன் நினைவூட்டி மகிழ்வித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. பரமபதம் என்றுமே சுவாரஸ்யம் - வாழ்வைப் போலவே...

  பதிலளிநீக்கு
 3. இப்போது விளையாடப்படும் விளையாட்டுகளும், பழைய விளையாட்டுகளையும் படங்களுடன் நினைவூட்டியதற்கு நன்றி! பரமபதம் எல்லாம் நிறைய விளையாடி உள்ளோம்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி கோபால் சார்

  நன்றி டிடி சகோ. ஆம்

  நன்றி துளசிதரன் சகோ. ஆம்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...