11. ஓடிப்
பிடிச்சு:-
ஓடி விளையாடு பாப்பான்னு பாரதியார் எழுதினது இதப் பத்தித்தான். இதெல்லாம் கோடைகால விடுமுறை விளையாட்டுகள். தினம் சாயந்திரம் விளையாடுவோம்னாலும் கோடைகாலத்து விடுமுறைகளை சுவாரசியமாக்குன விளையாட்டுகள் இவை. எல்லாரும் ஓடணும். ஒருத்தர் பிடிக்க ஓடி வரணும். யார் பிடிபடுறாங்களோ அவங்க அவுட். அவுட் ஆகுறவங்க அடுத்த ஆட்டத்துல மத்தவங்களப் பிடிக்கணும்.
13. நொண்டியடிச்சுப் பிடிச்சு:-
இதுவும் ஓடிப்பிடிச்சுத்தான் . ஆனா ஓடாம நொண்டியடிச்சு ஓடுறவங்களைப் பிடிக்கணும். எங்க சொந்தக்காரப் பெண் ஒருத்தி நொண்டியிலேயே அசுரத்தனமா கால் பாவி தவ்வுவா பாருங்க பிடிபட்டுருவமோன்னு டெரரா இருக்கும். :)

12. ஒளிஞ்சு
பிடிச்சு:-
அதேதான் இது ஆனா எல்லாரும் ஒளிஞ்சுக்கணும்.
இதுக்குக் கண்ணாமூச்சி விளையாட்டுன்னும் சொல்லுவாங்க. ஒருவர் கண் பொத்திக்கொள்ள மற்றவர்கள் ஒளிந்து கொள்ள அவர்களைத் தேடிப்பிடிக்கும் விளையாட்டு. சிலசமயம் ஒருவர் அமர்ந்து தேடுபவரின் கண்ணைப் பொத்திக்கொண்டு இந்தப் பாட்டைச் சொல்வார்.தேடுபவர் சென்று ஒளிந்திருப்பவர்களைப் பிடித்துவர வேண்டும்.இதுதான் அந்த ஃபேமஸ் பாட்டு.
”கண்ணாமூச்சி ரேரே காதடப்பா ரேரே
ரெண்டு முட்ட தின்னுட்டு ஒரு/ரெண்டு/மூணு முட்ட கொண்டு வா.”

14. நொண்டி ஆட்டம் :-
இதுக்கு ஒரு ஓட்டாஞ்சில்லி உபயோகிப்போம். அந்தக் கல்லைத் தூக்கிப் போட்டு நொண்டியடிக்கணும். அப்ப அந்தக் கல்லைக் காலாலேயே சிரட்டி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும். கட்டத்தை விட்டு வெளியே போச்சோ அவுட்.
இரண்டு வரிசையா 4 கட்டம் போட்டு கடைசி கட்டத்துல ( வலதுபக்கம் கடைசி - எட்டாவது ) ஒரு இண்டூ போட்டு இருப்போம். முதலில் ஒரு ஒரு கட்டமா நொண்டியடிக்கணும். அந்த இண்டூ போட்ட கட்டத்தை மிதிக்காம தாண்டனும். அடுத்து இரண்டு இரண்டு கட்டமா. அப்புறம் மூணு மூணு கட்டமா.
கடைசியா இச்சா, இனியா காயா பழமான்னு சொல்லி கண்மூடிக்கிட்டுக் கைய விரிச்சு நெத்தி மேல ஓட்டாஞ்சில்லியை வச்சு ரெண்டு காலாலயும் தாண்டனும். தப்பித் தவறிக்கூட அந்தக் கட்டங்களைப்பிரிக்கிற கோட்டுல கால் பட்டுறக் கூடாது. அப்பிடிப் பட்டா அவுட். அப்பிடிப் படாம நேரா போயிட்டு கண்ணைத் திறந்து அப்புறம் அங்கேயிருந்து நெத்திலேருந்து தூக்கி அடிக்கணும் அந்தச் சில்லை. அது விழுந்த இடத்துல நொண்டியடிச்சு இண்டூவைத் தாண்டி வெளியே வந்துட்டா சக்சஸ்னு கத்தலாம்.
15.கல்லா மண்ணா.:-
இது ஒரு ஸ்பெஷல் கேம். இதக் காரைக்குடியில விளையாடுவோம். மத்த ஊர்ல தெரியல. ஆனா காரைக்குடியில் வளவும் கீழ்வாசலும்தான் இதுக்கான விளையாட்டு இடம். கீழ்வாசல் சிமெண்ட் போட்டுருந்தாலும். அது மண். அதுபோல பட்டியக்கல் பதிச்ச வளவுப்பத்திதான் கல்.
கல்லா மண்ணா விளையாடுறவங்க ஒரு குழு. பிடிக்கிற ஆள் கிட்ட கல்லா மண்ணான்னு கேப்பாங்க. கல்லுன்னா பத்தி & பட்டியக்கல். மண்ணுன்னா கீழ் வாசல். இதுல பிடிக்கிறவங்க கல்லுன்னு சொல்லிட்டா ஓடுறவங்க கல்லுலயும் மண்ணுலயும் மாத்தி மாத்தி நிப்பாங்க. அப்போ பட்டியக்கல் & பத்தில நிக்கும்போது பிடிச்சிட்டா அவுட். அதே போல மண்ணுன்னு சொல்லிட்டா கீழ்வாசல்ல நிக்கும்போது பிடிச்சிட்டா அவுட்.
எல்லாரும் தாறுமாறா எல்லாத் திசையிலேயும் ஓடுவோம். ஒரு வேளை கல்லிலும் மண்ணிலும் கால் வச்சி நிக்கும்போது பிடிச்சிட்டா அவுட் இல்லை. அது “ ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் “ அப்பிடின்னு சொல்லித் தப்பிச்சுக்கலாம் ( போங்காட்டம்தான்.. ஹாஹா இதெல்லாம் கொஞ்சம் சலுகை அதுல ).
ஹ்ம்ம் இப்பிடி ஒவ்வொரு வருஷமும் சம்மர் வெகேஷன்ல எங்க ஆயாவீட்டுல விளையாடி ரெண்டு இல்ல நாலு இல்ல எட்டுப் பண்ணிருக்கோம். அதகளம் செய்திருக்கோம். அதெல்லாம் ஒரு அழகிய கனாக்காலம். :)
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.

இந்த விளையாட்டுகளை விளையாடிய நினைவுகள் ... இனியவை. நல்ல பதிவு.
பதிலளிநீக்குஅருமையான நினைவுகள். இப்போதைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை! அப்படியே சிறுவர்கள் வெளியே வந்தாலும் விளையாடுவது கிரிக்கெட் மட்டுமே! :(
பதிலளிநீக்குகண்ணாமூச்சி தான் நம்பர் 1
பதிலளிநீக்குபழைய கால நினைவுகளை மீட்டுத்தந்துள்ள பதிவு .... அருமை.
பதிலளிநீக்குஆம் கிரேஸ் அதுனாலதான் எழுதினேன். :)
பதிலளிநீக்குஆம் வெங்கட் சகோ க்ரிக்கெட் நமது தேசிய விளையாட்டு ஆகிவிட்டது
அஹா நல்ல விளையாட்டுக்குத் தான் நம்பர் 1 கொடுத்திருக்கீங்க தனபாலன் சகோ.
நன்றி கோபால் சார். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
எல்லாமே விளையாடிய இனிய நினைவுகள்! இப்போதுள்ள குழந்தைகள் மட்டையை மட்டும்தான் தூக்குறாங்க...வேற எதுவுமே இல்லை....கிராமங்களில் கூட....ம்ம்
பதிலளிநீக்குகில்லி, கோலிக் குண்டு கூட விளையாடி இருக்கோம்....பெண்களும் ஆண்களுமாக....
சரியா சொன்னீங்க துளசிதரன் சகோ
பதிலளிநீக்கு