எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2015

வெள்ளையா இருக்கதெல்லாம் வெசமாமே..

மனோ சுவாமிநாதன் மேடம்  இன்று எதைத்தான் சாப்பிடுவது என்று ஒரு போஸ்ட். போட்டிருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டே இருந்தேன். சிக்கன் சாப்பிடாதீங்க அதுல ஆர்சனிக் இருக்குன்றாங்க. எறால் சில சமயம் கல்டிவேட் ஆகுற இடத்துல ஓவரா ஏதோ மருந்து தெளிச்சு விட்டிருக்காங்க போல டபுள் கொடலோட எறாக்கள பார்த்தேன். ரெட் மீட் வேண்டவே வேண்டாம் வெயிட் போடும். ஹார்ட்டுக்கு எதிரி. முட்டை மஞ்சக் கரு வேணாம். மத்ததுல கொழுப்பு, தோல் எல்லாம் வேணாம். கருவாடும் உப்புக் கண்டமும் ”ஆத்தாடி கெட்ட பயவிட்டு..” என்று சொல்வார்கள். ( கெடுதல் என்பதைக் காரைக்குடி மொழி வழக்கில் )


அதுவும் கே எஃப் சி கோழி, பிஸ்ஸா , பர்கர் , ஜாம், சாஸ், நூடுல்ஸ், பாஸ்தா, ஸ்பாகெட்டி, சௌமின், வேஃபிள்ஸ், வேஃபர்ஸ், கேக் , பஃப்ஸ், சிப்ஸ்,ஐஸ்க்ரீம் , கோல்ட் பிவரேஜஸ், பேக்கரி ஐட்டம் எல்லாமே சாப்பிட வேண்டாம் ஈவன் போரிட்ஜ், கூழ் , கஞ்சி கூட வெயிட் போடும்.

ஒண்ணு சுகாதாரமில்ல. இல்ல உடம்புக்கு/ இதயத்துக்கு  நல்லதில்ல. இல்லாட்டி வெயிட் போடும் அப்பிடியே சாப்பிட்டாலும் ஏதேனும் பாக்டீரியா, ஃபங்கஸ் புகுந்து நோய் வரும். அப்பிடிங்கிறாங்க.காளான் மட்டுமில்ல காரட்டைக் கூட நல்லா வேகவைச்சித்தான் சாப்பிடணுமாம். காரட்ல கூட புழு இருக்குமாம்.

. ஆப்பிள் தோல்ல மெழுகு இருக்கு , பீட்ரூட்டும் தர்பூசணியும் மாதுளையும் பிங்க் சாயத்துல தோச்சுக் காயப்போட்டிருக்குன்றாங்க. மோரிஸ் பழம் மஞ்ச மஞ்சேர்னு இருக்கு ஆனா சாப்பிட்டா நாக்கில் கொப்புளம் வருது. வெண்டைக்காயில மருந்தோ மருந்து. கீரை கடைஞ்சா ஒரே தழை நாத்தம்.

இன்னும் சின்னப் புள்ளையில நமக்குப் பிடிச்ச எதுவுமே இப்ப சாப்பிடக் கூடாது. அதாங்க முட்டாயி. அதும் ஃபாரின் முட்டாயெல்லாம் வெயிட் போடும். எண்ணெயில பொரிச்சது வறுத்தது ( பஜ்ஜி பணியாரம் போண்டா, பூரி சமோசா ) சாப்பிடக்கூடாது. அப்பளம் வத்தல் வகையறா ஊறுகாய் மூச்.தினம் பிஸ்கட் சாப்பிட்டா பப்ளிமாஸ்தான். சிலப்போ ரஸ்க் ஓகே.( கொஞ்சம்  சமரசம்  :)

காய்கறி கீரை பழம் சாப்பிடலாம்னாலும் ஒரே கெடுபிடி. முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர் தைராய்டு காரங்களுக்கு ஆகாது. டயபடீஸ்காரங்களுக்கு சப்போட்டா, மாம்பழம் , பலாப்பழம், சீதாப்பழம், பேரீச்சை,ஆகாது. அதே போல அதிகம் ப்ரோடீன் டயட்டும் ஆகாதாம். கிட்னிக்குக் கெடுதலாம். நான் வெஜ்லயும் சரி, பயறு வகைகளிலும் சரி  தட்டைப்பயறு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பட்டாணின்னு தினம் சமைக்கக்கூடாதாம். பாதாம் பிஸ்தா முந்திரி, அக்ரூட்ல பாதாமும் அக்ரூட்டும் பரவாயில்லையாம்.

மைதா மூச் ஆகவே ஆகாது. அதுனால பரோட்டா BANNED.எண்ணெயை சொட்டு சொட்டா விட்டு வாணலிய தடவித் தடவித்தான் எல்லாத்தையுமே தாளிக்கிறேன். தப்பித்தவறி பொறிச்ச எண்ணெயைத் திரும்ப உபயோகிச்சா கான்சர் வந்திருமாம். இட்லி, நல்லெண்ணெய், பொடி, நெய் எல்லாம் குற்ற உணர்ச்சியோடதான் சாப்பிட வேண்டி இருக்கு.

வெங்காயமும் தக்காளியும் நெகட்டிவ் ப்ரானிக்குங்குறாங்க . எலுமிச்சை சோம்பு தக்காளி பால் பொருட்கள் அதிகமானாலும் கிட்னில கல் வந்துரும்கிறாங்க. ஃபுட் கலர்ஸ், அஜினோமோட்டொ, வினிகர், பெருங்காயம் கூட கெடுதல்ங்கிறாங்க.

பொதுவா ஸ்வீட்ஸ், & மில்க் ஸ்வீட்ஸ், பனீர், சீஸ், க்ரீம், தயிர், யோகர்ட், லஸ்ஸி , வெண்ணெய், நெய், சில்டு ஃப்ளேவர்ட் மில்க், ( பாசந்தி பால்கோவா ரஸமலாய் ரசகுல்லா பாதாம் கீர் ) இதெல்லாம் வெயிட்டோ வெயிட் போடுமாம். ஆவின் பால் பூத்ல சூடாவும் குளிர்ச்சியாவும் பால் குடிச்சிட்டு இருக்கவங்கள ஏக்கமா பார்த்துட்டே நம்ம வெயிட்டை நினைச்சுட்டே கடக்க வேண்டியதுதான். அதாங்க வாக்கிங். பாலிலும் இப்போ டேஸ்ட் நல்லாயில்லை. இங்கே ஒரே பால்பாக்கெட் வாசனை ( ப்ளாஸ்டிக் வாசனை போல அடிக்குது - ஹெரிட்டேஜ் பால் ) கர்நாடகாவுல நந்தினி இங்கே விஜயா நல்லா இருக்கும். ஆனா சமீபகாலமா பால் கூட வெறுக்குது. நாக்குக்கு உகந்த டேஸ்ட் இல்ல.

பசுமாட்டுப் பால சூட்டோட வாங்கிக் குடிச்ச நமக்கு இதெல்லாம் ஒத்துவருமா. அதுவும் பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான் பல வருஷமா குடிச்சிட்டு இப்ப இதெல்லாம் குடிக்காதீங்கங்கிறாங்க. இயற்கை பானத்துக்குத் திரும்புங்கங்கிறாங்க.

வீட்டுல விளைஞ்ச கொய்யா, பப்பாளி ஓகே. கீரை, காய் வகை ஓகே. நல்லா அலசிக் கழுவி சாப்பிடலாமாம். சரி சோறு இட்லி காஃபி டீ சாப்பிடலாம்னா. காஃபி டீ யையும் கொறைக்கணுமாம். இது மது போதையை விடக்கெடுதலாம். சூப், சீனி போடாத ஜூஸ், இளநீர், உப்பு குறைவா போட்ட நீர்மோர் சாப்பிடலாமாம். கைகுத்தல் அரிசியும் பார்லி, குதிரை வாலி, திணை சாமை சாப்பிடலாமாம். இதெல்லாம் நாக்கு பழகிக்கணுமே.

 அட மைதாவை விட்டுறலாம் மேலே சொன்னதெல்லாம் விட்டுறலாம் ஆனா வெள்ளையா இருக்கிற அரிசிச் சோறும் தோசையும் இட்லியும் பாலும் தயிரும்  சீனி போட்ட காஃபியும் டீயும் குடிக்காம இருக்க முடியுமா. இதையும் வெசம்கிறாங்களே.. என்ன செய்றது..


14 கருத்துகள்:

  1. நல்லா எழுதியிருக்கிறீங்க தேனம்மை! இட்லியும் இடியாப்பமும் மட்டும் தான் வேண்டாம் லிஸ்டில் இல்லை! மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் கிரெடிட் கூட இவைகளுக்கு இருக்கின்றது!

    பதிலளிநீக்கு
  2. ஏங்க பயமுறுத்தறீங்க! இந்தப் பதிவைப் படிக்காமலே இருந்திருக்கலாமோ! :))))))

    பதிலளிநீக்கு
  3. இந்தப்பதிவைப்படித்து முடிக்கும் 10 நிமிடங்கள் வரை நான் சத்தியமா எதையுமே சாப்பிடவே இல்லை. தண்ணீரோ வெந்நீரோ கூட குடிக்கவே இல்லை. தயவுசெய்து நம்புங்கோ.

    ஏனெனில் அதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் முன்புதான் அருமையான ருசியான சதைப்பத்து மிக்க முருங்கைக்காய்கள் நிறைய போட்ட ஜோரான மணமான நெய் + எண்ணெய் கலந்த சாம்பார் சாதம், , தொட்டுக்கொள்ள நிறைய தேங்காய் துருவிப்போட்டிருந்த கோஸ் கறி, அதன் பின் தயிர் சாதம் + பொடிப்பொடியாய் நறுக்கிய காரசாரமான மாங்காய் ஊறுகாய் என வெளுத்துக்கட்டிவிட்டு, நிறைய சூடான வெந்நீரை நன்றாக ஆற்றி 4 டம்ளர் குடித்துவிட்டு, பதிவினைப்படிக்க அமர்ந்தேன்.

    இனி சற்று நேரத்தில் தட்டை [எள்ளடை], முறுக்கு, நேத்திரங்காய் சிப்ஸ் என ஏதாவது தேடிடும் என் கைகளும் / நாக்கும்.

    என்னவோ போங்கோ. ஏதேதோ சொல்லி இப்படி ஒரேயடியா பயமுறுத்துகிறீர்களே !

    எது சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் என் வெயிட் ஒரு கிலோ கூட குறையப்போவது இல்லை.
    அதனால் துணிந்து விட்டேன் .... எனக்குப் பிடித்த அனைத்தையும் ஆசைதீர சாப்பிட்டே விடுவது என்று.

    பதிலளிநீக்கு
  4. தேனம்மை,

    இதை படிக்கும்போதே திடுக்குனு இருக்குப்பா..

    ஏற்கனவே சாப்பிடும் அளவை குறைச்சாச்சு.

    இப்ப இது வேண்டாம் அது வேண்டாம்னு ஆனால் நான் என்ன ஆவேன்

    அருமையான பகிர்வுப்பா....

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்:( . அரிசியிலிருந்து எல்லோரும் இப்போ சாமை, குதிரைவாலிக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே சிறுதானியங்கள் எளிதாகக் கிடைப்பதுமில்லை.

    எல்லோருக்கும் வருகிற குழப்பத்தைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறீர்கள் :).

    பதிலளிநீக்கு
  6. //சீனி போட்ட காஃபியும் டீயும் குடிக்காம இருக்க முடியுமா//

    நோ ! முடியாது எனக்கு மூணு நேரமும் காபி வேணும் ..
    அக்கா சிலருக்கு பயங்கர ஒவ்வாமை வருவது உண்மைதான் ,நான் வெண்டக்கையை உப்பு மிளகு போட்டு பச்சையாவே சின்னதில் சாப்பிட்டேன் ஆனா இப்போ எவ்ளோ சமைத்தும் ஒத்துக்க மாட்டேங்குது :( ..அதேதான் கத்ரிக்காவும் ..
    இந்த பிரச்சினை சிலருக்குண்டு .என்ன செய்ய தெரில

    பதிலளிநீக்கு
  7. இவ்ளோ சாப்பாட்டு ஐட்டங்களை வாசிச்சதும், எதாவது தின்னணும்போல் ஒரு வெறி வந்துருக்கு. போய் பாண்ட்ரியிலே என்ன இருக்குன்னு தேடப்போறேன். எப்படியும் கேம் பார்க்க வாங்குன ஐட்டங்கள் இருக்கும்தானே?

    போகட்டும். கொஞ்சூண்டு தின்னா தப்பில்லை. இல்லைன்னா... அடங்காத ஆசைக்காக் இன்னொருமுறை பிறந்து வரணுமா? ஊஹூம்.......

    பதிலளிநீக்கு
  8. எதையுமே சாப்பிடக்கூடாது என்றால் என்ன தான் சாப்பிடுவது!

    பதிலளிநீக்கு
  9. நன்றி மனோ மேம் உங்க போஸ்ட்தான் இன்ஸ்பிரேஷன். பல நாளா நினைச்சு எழுதாம இருந்தேன் உங்க போஸ்ட் பார்த்துத்தான் உடனே எழுதினேன்.

    ஏன் ஸ்ரீராம் இதுல பாதி ஐட்டம் அசைவம். அத நீங்க சாப்பிட மாட்டீங்களே பின்ன ஏன் பயம். :) என்ன பண்றது என்ன பண்ணாலும் எனக்கும் வெயிட் குறையல இது போல பீதியை கிளப்பி குறைக்கலாம்னா அதுவும் முடியல.. :)

    கோபால் சார் டயட்ல இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட உங்க பின்னூட்டம் பார்த்தா நொறுக்க ஏதாவது கிடைக்குமான்னு ஃப்ரிஜ்ஜை துழாவுவாங்க. :) நான் அததான் செய்தேன் ஹிஹி.

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் மஞ்சு எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை.

    ஆம் ராமலெக்ஷ்மி அனைவரும் மற்ற மாற்று உணவுக்கு மாறுகிறோம் ஆனா முழுசா ஃபாலோ பண்ண முடியல..

    ஆமா ஏஞ்சல் இதுல அலர்ஜி குழப்பங்கள் வேற. எல்லாம் மருந்தடிக்கப்பட்ட காய்கறிகளால் வருவது.

    பதிலளிநீக்கு
  11. பயப்பட வேண்டாம் தனபாலன் சகோ. மாற்று உணவுக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால் போதும் :)

    துளசி நமக்கெல்லாம் இந்த ஜென்மமே போறாது. அடுத்தும் பிறந்து வந்து ப்லாக் எழுதி. யம்மா என்னால முடியாது. கிடைச்சத கொடுங்க நானும் மொசுக்குறேன். க்கும் :) !

    நாம் நம்முடைய பாரம்பரிய உணவுக்கு மாறணும் வெங்கட் சகோ. அதுக்கு விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  13. வெள்ளையை ஒதுக்கணுமுன்னா..... பால், தயிர், மோர் இல்லாமல் என் வாழ்க்கை சூனியம்:(

    சரி சரி. முதலில் தமிழ்சினிமாவில் அந்த விஷ வெள்ளையை ஒதுக்கச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...