எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஏப்ரல், 2015

மைக்கும் நானும்.

முகநூலில் மைக்குடன் ப்ரொஃபைல் பிக்சர் போட்டபோது வல்லிம்மா தன்னுடைய போஸ்ட் ஒன்றில் ஒரு  ஹேண்ட் ஷவர் சாய்ந்திருப்பது போலப் போட்டு இதப் பார்த்தா என்ன தோணுதுன்னு கேட்டிருந்தாங்க.

அப்போ நான் சொன்னேன் அம்மா எனக்கு அதைப் பார்த்தா மைக் ஞாபகம் வருது. அப்பிடின்னு சொல்லி அவங்களுக்குப் பிடித்த ( அப்பிடின்னு நான் நினைச்ச :) ) ஃப்ராங்க் சினாட்ராவின் ப்ளூ ஸ்கைஸ் சாங்கை ஷேர் செய்திருந்தேன். அதுக்கு அவங்க சொன்னாங்க. தேன் நானும் மைக் மோஹினி ஆகட்டுமான்னு.

ஸோ அந்த வார்த்தை ரொம்பப் பிடிச்சதால இந்த மைக் மோஹினி இடுகை. ( எதைப் பார்த்தாலும் கேட்டாலும் இடுகை இடுகைன்னு இடுகை போடத் தோணுதே இது இடுகையோமேனியாவா :)

சரி ரைட்டு படத்தைப் போடுறேன் :)

இது சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசியபோது முதன் முதலாக கல்லூரிப் பருவத்துக்குப்பின் பல ஆண்டுகள் கழித்து மைக்கைத் தொட்டது.

1.லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள். (2010)




2. சென்னை சங்கமம்..100 கவிஞர்களுள் ஒருவராக.(2011) ”நானும் பெண்” என்னும் தலைப்பில் “ஆதி மனிதன் விலா கொய்து செய்த பாதி மனுசி நான்”. என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தேன்.




3. சென்னை சங்கமம் பற்றிக்கூறிய கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தி சானலில் காண்பிக்கப்பட்டது.
http://www.youtube.com/watch?v=UoJYMWNoz3A





4. சேரன் மிஷ்கினுடன் "யுத்தம் செய்" கலந்துரையாடல். சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடல்கலைஞர் தொலைக்காட்சி.
. http://honeylaksh.blogspot.com/2011/03/blog-post.html






5. ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக.


6. சென்னை போர்ட் ட்ரஸ்டில் மகளிர் தினத்தில் துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ராவுடன் சிறப்பு பேச்சாளராக 2011. இல்


7.சிறப்பு "நீயா நானா" வில் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிய கருத்து.  ஸ்பெஷல் “நீயா, நானா..” – விஜய் டிவி
http://www.tubetamil.com/view_video.php?viewkey
38f7637ab6d9fa1da209&page=1&viewtype=&category=


8 . 106.4 ஹலோ எஃப் எம்மில் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கருத்து.  

9. திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டியும்

10. அதே வானொலியில்   சாதனைப் பெண்கள் பற்றி  எனது கருத்தும். 

11.  பெண்கள் தினம் பற்றி எஸ் ஆர் எம் யூனிவர்சிசிட்டியின் எஃப் எம் ரேடியோவுக்காக 6 சிறப்புத் தகுதிப் பெண்களை ஒருங்கிணைத்துப் பேட்டி எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியின் முத்துச்சரம் வானொலி நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினத்துக்காக.
 

12. .அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் அரசுப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.


13. . சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் கமலா செல்வராஜுடன் சிறப்பு பேச்சாளராக 2011. இல்.


14. விக்னேஷ்வரா லேடீஸ் கிளப் . ராமாவரம். சென்னை


15. ஜவஹர் வித்யாலயாவில் நடனப் போட்டியில் நடுவராக..


16 . ஸ்ரீ ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் 110 ஆசிரியர்கள் முன் ஆசிரியர் தின உரை.


17. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு. காரசாரம் நிகழ்ச்சியில்.பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு தேவை – காரசாரம் – பொதிகைத் தொலைக்காட்சி.

http://honeylaksh.blogspot.in/2013/05/blog-post_14.html 
 
http://honeylaksh.blogspot.in/2012/07/blog-post.html



டிஸ்கி :- நான் மைக் மோகினி ( நடிகர் மோகன் )  அல்ல. ஆனா மைக் கொடுத்துப் பேசச் சொன்னவங்களுக்கு, கருத்துக் கேட்டவங்களுக்கு  நன்றி. :)


6 கருத்துகள்:

  1. நீங்க அசத்துங்க சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோதரி! எல்லா புகைப்படங்களும், காணொளிகளும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! இடுகையோமேனியா// மிகவும் ரசித்தோம். ஆம் எங்களுக்கும் இந்த மேனியா தொற்றி வருகின்றது!!!!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான படங்களுடன் கூடிய அழகான பதிவு.

    பன்முகத் திறமையாளரான தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    கீழிருந்து மூன்றாவது படத்தில் தங்களின் வலப்பக்கம் அமர்ந்திருப்பவரை நான் நேரிலேயே சந்தித்துள்ளேனாக்கும். http://gopu1949.blogspot.in/2015/02/2.html :)

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி துளசிதரன் சகோ. ஆம் நம் அனைவருக்கும் தொற்றி வருகிறது இடுகையோ மேனியா :)

    நன்றி கோபால் சார். நான் அது பற்றிப் படித்துள்ளேன் சார். வாழ்த்துகள்.

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...