வியாழன், 16 ஏப்ரல், 2015

புதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.பத்து நூல்கள் ஒரு பார்வை. - 1
புதிய பயணி - திசைகள் கடந்து ,என் வானிலே, ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும், நீர்க்கோல வாழ்வை நச்சி, டீக்கடைச் சூரியன் , எஞ்சோட்டுப் பெண், தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், கதை கதையாம் காரணமாம், சூடிய பூ சூடற்க, ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள். 

1.புதிய பயணி - திசைகள் கடந்து :-


சென்னையைச் சேர்ந்த நம்ம ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தார் கொண்டு வரும் பத்ரிக்கை புதிய பயணி - திசைகள் கடந்து. இது 2015 ஜனவரி மாதத்தில் இருந்து வெளிவருகிறது. பயணக் கட்டுரைகளுக்காகவே ஸ்பெஷலாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்காங்க. 

இதுல சுற்றுலாத் தலங்கள், மலைகள், கோட்டைகள், ஆறுகள், காடுகள், மட்டுமல்ல தொன்ம கலைகளான கரகாட்டம் பற்றிக்கூட கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது. பயண டிப்ஸ்கள், மேப்புகள், அமைவிடங்கள், சென்று வர ஆகும் தொகை, தங்குமிடங்கள், போக்கு வரத்து வசதிகள் ஆகியன பற்றியும் முழுமையாக வெளியிடுகிறார்கள் ஒவ்வொரு கட்டுரையுடனும். 

வெளிநாட்டுப் புத்தகங்கள் போல மிகப் பெரிய அளவிலும் வண்ணப் பக்கங்களிலும் ( 96 பக்கங்கள் - அட்டையுடன் சேர்த்து 100 பக்கங்கள். ! ) மிக அருமையான புகைப்படங்களோடும்  மிக அருமையான வடிவமைப்பில் வருது. என்னுடைய 3 பயணக் கட்டுரைகள் ( குவாலியர், பிதார், குல்பர்கா கோட்டைகள் பற்றிய கட்டுரைகள் ) இதன் 3 இதழ்களில் இடம் பெற்றுள்ளன. இதன் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி :)

நூல் -  புதிய பயணி – திசைகள் கடந்து ( மாதமொருமுறை வெளியீடு )
ஆசிரியர் – வன்மி
பக்கங்கள் – 90
விலை – ரூ 40.
10. ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்.

எம் எஸ் உதயமூர்த்தி மொழி பெயர்த்த இந்நூல் பல்லாண்டு காலமாக அவ்வப்போது என்னால் வாசிக்கப்பட்டு வருகிறது. நம்மூரில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை ” எண்ணம் போல் வாழ்வு “ அதை இந்நூல் பிரதிபலிப்பதாலும் அதே போல எண்ணங்களைச் சீரமைக்க ஒழுங்கமைக்க உதவுவதாலும் என் லிஸ்டில் என்றைக்கும் இடம் பெற்றுள்ளது.

இவருடைய உன்னால் முடியும் தம்பி என்ற வார்த்தைகள் மந்திரம் போல கல்லூரிப்பருவத்தில் செயல்பட்டிருக்கின்றன. உடல் நலம் மன நலம் சுற்றுச் சூழல் வாழ்க்கை வெற்றி எல்லாம் அமைப்பது நமது எண்ணங்களே என்பதைக் கூறும் நூல் இது. வ உ சி எழுதி சுப்பையா பிள்ளை பதிப்பித்த ஜேம்ஸ் ஆலன் வாழ்க்கை விபரங்களையும் கொடுத்துள்ளார்கள்.

“மனித ஜீவன் எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. “

“ நல்லெண்ணத்தின் விளைவாக ஏற்பட்ட வெற்றி சரியாக கண்காணிக்கப்படாவிட்டால் வீழ்ச்சியின் வித்து அங்கே விதைக்கப்பட்டிருக்கிறது : சரிவு வந்து சேரும் “ என்றும் எச்சரிக்கிறது.

மனிதன்தான் அவனது எண்ணங்களின் தலைவன்; அவனது குணங்களை அமைக்கும் சிற்பி; அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா என்கிறார்.

என்ன எண்ணங்கள் என்ன விளைவுகளை உருவாக்கும் எனவும் நல்லெண்ணங்களைக் கைக்கொள்ளவும் பயிற்றுவிப்பதால் இந்நூல் எனக்குப் பிடித்தமானதாகிறது.

நூல் – ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்.
ஆசிரியர் – தமிழாக்கம் எம் எஸ் உதயமூர்த்தி
பதிப்பகம் – வானதி பதிப்பகம்

டிஸ்கி :- மிச்சம் உள்ளவற்றை அடுத்த இடுகைகளில் தொடர்வேன். :)

9 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அருமையான பயனுள்ள பல்வேறு தகவல்கள் அளித்துள்ளீர்கள். பகிர்வுக்கு முதலில் நன்றிகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//என்னுடைய 3 பயணக் கட்டுரைகள் ( குவாலியர், பிதார், குல்பர்கா கோட்டைகள் பற்றிய கட்டுரைகள் ) இதன் 3 இதழ்களில் இடம் பெற்றுள்ளன. //

மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//“மனித ஜீவன் எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. “//

//மனிதன்தான் அவனது எண்ணங்களின் தலைவன்; அவனது குணங்களை அமைக்கும் சிற்பி; அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா //

//என்ன எண்ணங்கள் என்ன விளைவுகளை உருவாக்கும் எனவும் நல்லெண்ணங்களைக் கைக்கொள்ளவும் பயிற்றுவிப்பதால் இந்நூல் எனக்குப் பிடித்தமானதாகிறது.//

சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!

‘சும்மா’ அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

இந்நூல் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடித்தமானதாகிறது. :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள தகவல்கள்.....

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எண்ணங்களால் உருவாக்கப்பட்டதை வாசிக்க வேண்டும்... நன்றி சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா 3 விமர்சனங்களா மிக்க நன்றி கோபால் சார் !

நன்றி வெங்கட் சகோ

நன்றி தனபாலன் சகோ. வாசித்துப் பாருங்கள் அருமையான நூல்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பயனுள்ள அருமையான தகவல்கள் சகோதரி! மிக்க நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி துளசிதரன் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...