எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஏப்ரல், 2015

வெள்ளையா இருக்கதெல்லாம் வெசமாமே..

மனோ சுவாமிநாதன் மேடம்  இன்று எதைத்தான் சாப்பிடுவது என்று ஒரு போஸ்ட். போட்டிருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டே இருந்தேன். சிக்கன் சாப்பிடாதீங்க அதுல ஆர்சனிக் இருக்குன்றாங்க. எறால் சில சமயம் கல்டிவேட் ஆகுற இடத்துல ஓவரா ஏதோ மருந்து தெளிச்சு விட்டிருக்காங்க போல டபுள் கொடலோட எறாக்கள பார்த்தேன். ரெட் மீட் வேண்டவே வேண்டாம் வெயிட் போடும். ஹார்ட்டுக்கு எதிரி. முட்டை மஞ்சக் கரு வேணாம். மத்ததுல கொழுப்பு, தோல் எல்லாம் வேணாம். கருவாடும் உப்புக் கண்டமும் ”ஆத்தாடி கெட்ட பயவிட்டு..” என்று சொல்வார்கள். ( கெடுதல் என்பதைக் காரைக்குடி மொழி வழக்கில் )

திங்கள், 2 பிப்ரவரி, 2015

உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.



உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து  ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார்.  ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள்  இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.

Related Posts Plugin for WordPress, Blogger...