எனது பதிநான்கு நூல்கள்

புதன், 10 ஜூலை, 2013

நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.

மேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும்.
 ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது. உடனே இந்த போட்டோவை பேஸ்புக்'கில் "நட்பு"  என்று மட்டும் எழுதி வெளியிட்டேன். அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன்.
கடந்த சனிகிழமை குடும்ப ஆல்பத்தை பார்த்து கொண்டிருந்த போது இந்த போட்டோவையும் பார்க்க நேர்ந்தது. கவிதை பிறந்தது மனதில் நட்பை பற்றி. சரி நாம் எழுதினால் சரி படாது மதுரை பொண்ணுகிட்டே கேட்டு பார்ப்போம்னு தொடர்பு கொண்டேன். உடனே ஒப்புகொண்டார்கள். ஆனாலும் மனோ சோக கவிதைன்னா உடனே எழுதிருவேன் நட்பு பற்றி எழுதனும்னா டைம் வேணும் என்றார் நாளை தருவதாய் சொன்னார். அடுத்து தேனம்மைக்கு மெசேஜ் அனுப்பினேன். அவங்க போட்டோவை என் பதிவில் போட பெர்மிஷன் கேட்டு.....பதில் லேட்டு, இன்னைக்குதான் பதில் போட்டுருக்காங்க போட்டுகொள்ளுங்கள் என்று, இந்த கவிதை இரண்டு நாள் தாமதமாக வர நான் பொறுப்பல்ல அவிங்க ரெண்டு பேரும்தான் {ஹி ஹி]
இனி கவிதை பற்றி, "கவிதாயினி" மதுரை பொண்ணின் நட்பினை கொண்டாடும் கவிதை கீழே......இப்போது ஒரு முறை கூட மேலே உள்ள படத்தை பார்க்கவும்....
ரகசியமாய் பகிரப்படும் 
உணர்வுகள் எல்லாம்
உனக்காகவே காத்துக்கிடக்கும்..

உன்னை கண்டதும்..
என் துன்ப உளறல்கள் 
உன் செவிசாய்த்த போது
இனிமையாகிப் போவதும்..

உனக்கும் எனக்குமான 
உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
நான் திணறிப்போவதும்..

என் மனநினைவுகள் இங்கே
சேமிக்கப்படமால் 
உன்னிடம் சென்று ஆறுதல் 
தேடிக்கொள்கின்றது ..

நெஞ்சினில் நீ மட்டும் என்பதால் 
காற்றுக்கும் கூட 
அனுமதி மறுக்கப்படுகின்றது.......
டிஸ்கி : நன்றி மதுரை பொண்ணுக்கும், தேனம்மைக்கும்.
டிஸ்கி : தேனம்மையுடன் போட்டோவில் இருப்பது கயல்விழி லக்ஷ்மணன். இவர் அமைச்சர் அன்பழகனின்  பேத்தி [[தேனம்மை இப்போ மெசேஜ் பண்ணின பின்புதான்  எனக்கே  தெரியும்]]
 டிஸ்கி:- நன்றி நாஞ்சில் மனோ.. & மதுரைப் பொண்ணு. 
இந்த இடுகையில் பாருங்க.. :)

7 கருத்துகள்:

 1. நட்பின் நெருக்கத்தைக் காண்கையில் மனமகிழ்ச்சி. கவிதை தந்தது கூடுதல் ரசனை.

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை...
  எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கவிதை. எழுதியவருக்கும் பாராட்டுகள்....

  பதிலளிநீக்கு
 4. உனக்கும் எனக்குமான
  உறவுகளுக்கு பெயர்தெரியாமலே
  நான் திணறிப்போவதும்..

  பதிலளிநீக்கு
 5. நன்றி கணேஷ்

  நன்றி குமார்

  நன்றி ப்ரியா

  நன்றி வெங்கட்

  நன்றி கவியாழி கண்ணதாசன்

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...