எனது நூல்கள்.

திங்கள், 15 ஜூலை, 2013

கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை.. புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா.

புஜ்ஜுவின் அம்மா
புஜ்ஜுவின் அப்பா
என்றே அழைக்கப்படுகிறோம்
அக்கம் பக்கத்தவர்களால்
அவரவர்க்கெனப் பெயரிருந்தும்

புஜ்ஜுவின் தோழி
புஜ்ஜுவின் பூனை
எல்லாம் அவள் சார்ந்தே
குறிப்பிடுகிறோம்
நாமும் பெயரற்று..


புஜ்ஜுவின் பள்ளி
புஜ்ஜுவின் ஆசிரியை
அனுப்பும் ஆண்டுவிழா அழைப்பும்
ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கார்டும்
இல்லாவிட்டால்
நாமும் புஜ்ஜுவிற்கு
இட்ட பெயர் மறந்து

புஜ்ஜுவின் புனைபெயரே
உண்மையானதாய்..
அவளுக்கே தன் பெயர்
மறந்து போகும் அளவில்
சூழ்ந்து கிடக்கிறாள்
செல்ல விளிப்புக்களால்

டிஸ்கி:- இந்தக் கவிதை ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை.

11 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைத்த புஜ்ஜு...

ரியாத் தமிழ்ச்சங்கம் போட்டியில் 3-ஆம் இடம் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை. இரசித்தேன்:)! வாழ்த்துகள் தேனம்மை!

அமைதிச்சாரல் சொன்னது…

அசத்தல் கவிதை தேனக்கா.

பரிசு பெற்றமைக்கு மீண்டும் வாழ்த்துகள்.

Ambal adiyal சொன்னது…

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி .

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சாந்தி

நன்றி அம்பாள் அடியாள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் தளம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

மாதேவி சொன்னது…

வாழ்த்துகள்.

Sabarkhan சொன்னது…

வாழ்த்துக்கள்.....

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

புஜ்ஜு கண்ணு நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள் 0சரஸ்வதிராசேந்திரன்

பாலா சுக சொன்னது…

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...