தேனம்மை லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன் வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.
ஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா ? இல்லை எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா ?
தேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது. 2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால் வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.
ஊடகம்: நீங்கள் ஒரு பெண் எழுத்தாளர் என்ற முறையில் பெண் உரிமை மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய உங்கள் கருத்து ?
என்றும் அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக எதற்கெடுத்தாலும் அடுத்தவரை நினைத்தே பெண்கள் செயலாற்றாமல் தன் சுய விருப்பப்படியும் சாதிக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
ஊடகம்: உங்கள் எழுத்தில் உங்களுக்கு பிடித்த கதை மற்றும் கவிதை எது ?
என்னுடைய எழுத்தில் எனக்குப் பிடித்த கவிதை கவிதைகளின் கடவுள்..
கதை ப்ளாக்கில் வெளியிடவில்லை.. ஆனால் அதன் பெயர் அப்பத்தா.
ஊடகம்: தற்போதுள்ள இணைய எழுத்தாளர்களில் உங்களை கவர்ந்த சிலர் ?
அனைவருமேதான்.. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.. எல்லார் எழுத்தையும் ரசிக்கிறேன்.. நேரமின்மை என்பதால் அனைத்தும் படிக்க முடியாவிட்டாலும்.. தங்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற அவர்களின் நோக்கமும் விழைவும் மிகவும் பிடிக்கிறது..
ஊடகம்: இன்றைய இளைஞர் பற்றிய உங்கள் கருத்து ?
பதில்:- சுதந்திரப் பறவைகள்….. அவர்களுக்கு சில சுய கட்டுப்பாடுகளும் தேவை என எண்ணுகிறேன்..
ஊடகம்: உங்களுக்கு பிடித்த ever favorite எழுத்தாளர் யார் ?
பதில்:- பியோதர் தஸ்தவ்யெஸ்கி., தமிழில் சுஜாதா..
ஊடகம்: இரு வளர்ந்த பிள்ளைகளின் தாயாக நீங்கள் அவர்களுக்கு கூறிய மறக்க முடிய அறிவுரை ?
பெரியவர்., சிறியவர் அனைவரையும் மதியுங்கள். அனைவரின் அன்பும் ஆசீர்வாதமும் நமக்குத் தேவை..
ஊடகம்: எழுத்தராக நீங்கள் பூரிப்பு அடைந்த தருணங்கள் ?
ஒரு சுய உதவிக் குழுப் பெண் .,”அக்கா உங்க கட்டுரை படித்தேன்.. உங்க பேச்சும் பிரமாதம். எதற்காகவும் விட்டுவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள் ”’ என பாராட்டியபோது..
ஊடகம்: கடைசியாக நீங்கள் எந்த தளம் பற்றி எழுத நினைத்தும் எழுத முடியாமல் போனது ?
பதில்:- புலம் பெயர்ந்தவர்களது துயரை எழுத எண்ணுகிறேன்.. முழுமையாக எழுத இயலவில்லை. அவர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்.
டிஸ்கி :- நன்றி ஊடகம்.
http://odagam.com/2010/11/thennamai-lakshmanan-interview/
இந்த லிங்கிலும் படிக்கலாம்.
// பெரியவர்., சிறியவர் அனைவரையும் மதியுங்கள்...//
பதிலளிநீக்குபதில்கள் அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி...
வாவ்.. வாழ்த்துகள் தேனக்கா..
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
பதிலளிநீக்குநன்றி சாரல்
நன்றி குமார்.