வெள்ளி, 19 ஜூலை, 2013

மனசு குறும்படம் எனது பார்வையில்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=EfxE7-YKez4

 உணவு தானம் வழங்கும் அனைவரும் தாம்  தேவையானவருக்கு வழங்குகிறோமா இல்லையா என சிந்திப்பதில்லை என நச் சென்று சொல்லி இருக்கும் குறும்படம் இது.

பசிக்காக பிரியாணி வாங்கி சாப்பிடும் ரவிக்குமார் அதைப் பசியோடு இருக்கும் இன்னொருவருக்குத் தர விரும்புகிறார்.தன் நண்பனோடு பைக்கில் பயணித்து ஒவ்வொருவராகக் கேட்க அவர்கள் கூறும் பதில்கள் வித்யாசம். ஒருவர் பணம் கேட்கிறார். ஒருவர் இவர்களையே உண்ண அழைக்கிறார். ஒரு பிச்சைக்காரர் உனக்கு வேணுமா பிரியாணி இதோ எடுத்துக்கோ என்கிறார். ஒரு கட்டிடத் தொழிலாளி நான் என்ன பிச்சைக்காரனா என்கிறார்.


நிறைய தானங்களை நாம் இதுபோல வலிந்து வேண்டாவர்களுக்குத் திணித்து அவர்களை அவமானப்படுத்துவதாக அவர்கள் கருத நாம் ஏதோ கர்ணமகாப் பிரபு போல நினைத்துக் கொள்கிறோம்.

உண்மையான அன்போடு யாருக்காவது வழங்கச் சென்றாலும் அது அவர்களுக்குத் தேவையா எனப் பார்த்து அதன் பின்னே வழங்குவதுதான் நல்லது என உணர்த்திய படம். கடைசியில் ஒரு அண்ணனிடம் தங்கை பிரியாணி கேட்டுக் கொண்டிருக்க அவர்களைச் சென்று அடையும் அந்த பிரியாணி  திரும்ப ஒரு பூவைப் பரிசாக்குகிறது.

பூக்களோடு புன்னகைக்கும் அனைவருமே ஒவ்வொரு பரிமாணத்தில் கலக்குகிறார்கள். ( ரவிக்குமாரின் நினைவோட்டத்தில் ஒவ்வொருவரும் வந்து ஒவ்வொரு பதிலைச் சொல்வது மனிதர்களின் எண்ணவோட்டத்தின் பளிச். ) அந்த இடத்தில் வசனங்களுக்காக இயக்குநரை அதிகம் பாராட்டலாம்.

மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அந்த அண்ணனும் தங்கையுமாக கலக்கி இருக்கும் குட்டீஸ் குருவும் ராஜேஸ்வரியும் அற்புதம். ஆனால் அதிகமாக கண்ணைக் கசக்க விட்டிருக்க வேண்டாம் டைரக்டர். நம்ம கண் கூட தேய்ச்சு எரியுறமாதிரி இருக்கு.

இசை முதலில் ரவிக்குமார் பேசும்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் டிஸ்டர்பாக இருந்தது. ஆனால் மிக அழகான இசையமைப்பு.. அந்தப் பெண் ஓடிப் பூவைப் பறிக்கும் இடத்தில் நன்றாக இருந்தது.

நிகழ்விலேயே அடுத்தவர்களின் நினைவுகளுக்குள் எண்ணத்துக்குள் பயணித்து அவர்கள் என்ன சொல்லி இருக்கலாம்/ நினைத்து இருக்கலாம் எனச் சொன்ன இடம் ப்ரில்லியண்ட். !

நேச்சுரல் லைட்டிங்ஸ். பெண் ஓடிச் சென்று அந்தப் பூவைப் பறிக்கும் இடம் இன்னும் அழகு. அந்தப் பூக்கள் ஒவ்வொருவரின் கைகளில் புன்னகைப்பதும் செம அழகு. ஒரு 15 நிமிட குறும்படத்தில் நல்ல மெசேஜ் சொன்ன டைரக்டர் செல்வகுமாருக்கும், கதாசிரியர் கேபிளாருக்கும், இசையமைப்பாளர் விவேக் நாராயணனுக்கும், நடிகர் ரவிக்குமார் , குரு, மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

மனதைப் பூவாக்கியவர்கள் குரு,.சுபஸ்ரீ ராஜேஸ்வரி, கார்க்கி, ரவிக்குமார், கேபிள் சங்கர் , ரமேஷ் பாபு, ஐ. எஸ் , சோலை, நாகராஜன், நாராயணன் , செல்வராஜ், குரல் அருண், இசைக்கலவை முரளி சுப்பிரமணி, இசை விவேக் நாராயணன், ஐஎஸ் ஆர் வென்சர்சின் இந்தக் குறும்படத்துக்கான கதை  கேபிள் சங்கர். திரைக்கதை, இயக்கம், வசனம் , ஒளிப்பதிவு ஐ எஸ் ஆர் . செல்வகுமார்.

வாழ்த்துக்கள் மனசு டீமுக்கும், ஐ எஸ் ஆர் வென்சர்ஸுக்கும். இன்னும் மனிதர்கள் செய்யும் யதார்த்தத் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துக்கள். !!!

 

5 கருத்துகள் :

sury Siva சொன்னது…

தேவையானவர்களுக்கு தேவையானவற்றை, தேவையான நேரத்தில் தருவதே தானம்.

மற்றதெல்லாம் வெறும் புகழ்ச்சி பெறவே .

அதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்றார்கள் போலும்.

மிகவும் சிறப்பான பதிவு.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

அமைதிச்சாரல் சொன்னது…

அருமை. தேவை இருப்பவர்களுக்கே உதவியின் அருமை புரியும்.

சே. குமார் சொன்னது…

நல்ல படம்...
நானும் பார்த்தேன்...
அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுப்பு சார்

நன்றி சாரல்

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...