வியாழன், 18 ஜூலை, 2013

தாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..

தாய்மொழிப் பயன்பாடு என்று வரும்போது முதலில் கவனம் கொள்ளவேண்டியது எழுத்துப் பிழை.  இப்போது எழுத்துப் பிழைகள் மலிந்து வருகின்றன.

 விளம்பரங்களில் எழுத்துப் பிழை அதிகம். ”சீமாட்டி, புதிய பொழிவுடன் ”
என்று எழுதுகிறார்கள். விளம்பரப்பலகைகளைப் பார்த்தாலே ஆத்திரம்
ஏற்படுகிறது. 80 சதவிகிதம் எழுத்துப் பிழைகளோடு இருக்கின்றன.


பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏன் கல்லூரி மாணவர்க்கும் கூட முதலில் மொழியைப் பிழையில்லாமல் உச்சரிக்கவும் எழுதவும் கற்றுத் தரவேண்டும். இலக்கியப் பிழைகள் எல்லாமே இலக்கணப் பிழைகளாலேயே வருகின்றன.

ஆங்கிலக் கலப்பு தவிர்க்க இயலாததாகி விட்டது.  வார்த்தைகள் மாறி விட்டன. மொக்கை என்ற வார்த்தை எல்லாம் தமிழாகி விட்டது. வார்த்தைக் கலப்பைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.  எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகளைத்தான் ஏற்க இயலவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மொழிக்கலப்புக்கு வேண்டுமானால்
ஏற்புடையது. ஆனால் பிழைக்கலப்புக்கல்ல. இதுவே என் கருத்து.///

இந்தக் கருத்தில் பின் பகுதி இன்னொருவரின் கருத்துடன் அச்சுப் பிழையால் கோர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை அவர்களே தெரிவித்துள்ளார்கள்.


டிஸ்கி :- ///குங்குமம் தோழி இருவரது கருத்துகளுமே வெளியாகி இருக்கின்றன. தோழி தேனம்மை லஷ்மண் பெயர் அச்சுக்கோர்ப்புப் பிழை காரணமாக இடம் மாறியுள்ளது./// நன்றி தினகரன் வசந்தம். & குங்குமம் தோழி.9 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

படித்தவர்களே எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகள் ஒற்றுப்பிழைகளுடன் எழுதும்போது 'ச்சே'ன்னுதான் இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை உண்மை... குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது நாம் தான்... நம் கடமையும் கூட...

banuh shree சொன்னது…

ஏற்புடையது. ஆனால் பிழைக்கலப்புக்கல்ல. இதுவே என் கருத்து.///உங்கள் கருத்து உண்மையே!

banuh shree சொன்னது…

`

சே. குமார் சொன்னது…

உண்மை...
எழுத்துப் பிழைகளை நீக்கி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்....
வாழ்த்துக்கள் அக்கா...

nerkuppai thumbi சொன்னது…

நன்றி தேனம்மை.
இந்த விஷயம் பல ஆண்டுகளாக என்னை வருத்தி வந்த ஒன்று. உரையாடுபவர்களிடம் பல முறை ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
தமிழை தவறு இல்லாமல் எழுதவேண்டும் என்ற உணர்வு சிறு வகுப்பிலிருந்து மாணவர்களின் மனதில் படியும் வண்ணம் ஆசிரியர்கள் உணர்த்தவேண்டும். அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்ற முறையில் மதிப்பெண்களுக்கு மரியாதை இல்லை. இதற்கு முந்தைய தலைமுறை பள்ளியில் படித்தபோது கணிதம் விஞ்ஞானம், ஆங்கிலம் முதலியவற்றில் மதிப்பெண்கள் குறைந்தாலும் தமிழில் குறையக்கூடாது என்ற எண்ணம் கடை மாணவருக்கும் இருந்தது.
மற்றொன்று செய்தித்தாள்கள் நூல்கள் முதலியவற்றில் இருந்தால் சரியான முறை என்று சொல்லும் வண்ணம் பிழைத் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது செய்தித்தாள்களில், குறிப்பாக விளம்பரங்கள் பிழையுடன் வருவதால் எது சரி என்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது. தமிழ் வழிக் கல்வியும் இப்போது அரசு பள்ளிகளில் அதுவும் ஒரு சிறு சதவீதமே என்று ஆகிவிட்டது. தமிழை பயிற்று மொழியாகக் கற்றவர்களுக்கு இருந்த மொழிப்பற்று இப்போது இளைஞர்களிடையே காணப்படுவதில்லை என்று தோன்றுகிறது.
பொதுவாக உச்சரிப்பைப் பொறுத்தவரை திசைச்சொற்களின் காரணமாகவோ என்னமோ தமிழர்கள் உச்சரிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குடிசை என்ற சொல்லை, guடிசை என்றோ kuடிசை என்றோ சொல்லுவோம். குதிரையும் அப்படியே. இது போல் பலப்பல. தமிழ் ஆசிரியர்கள், தமிழ் விற்பன்னர்கள் உச்சரிப்பில் ஒருவண்ணம் (uniformity) என்று முயல வேண்டும்.

Thenammai Lakshmanan சொன்னது…


Babu Kothandaraman · 6 mutual friends
Thenammai Lakshamanan இங்கே உங்களின் கருத்துக்கள் வெளியிடுதல் பிழை மூலம் பெயர் மாறி வந்துவிட்டனவோ போலும் i
4 hours ago · Like · 1
குங்குமம் தோழி இருவரது கருத்துகளுமே வெளியாகி இருக்கின்றன. தோழி தேனம்மை லஷ்மண் பெயர் அச்சுக்கோர்ப்புப் பிழை காரணமாக இடம் மாறியுள்ளது.
3 hours ago · Unlike · 1
Thenammai Lakshmanan மறுமொழிக்கு நன்றி தோழி.. என்னுடைய கருத்தின் பின் பகுதி அவருடைய கருத்துடன் இடம் மாறி கோர்க்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி தனபால்

நன்றி பானு

நன்றி குமார்

நன்றி நெற்குப்பைத் தும்பி

நன்றி பாபு கோதண்டராமன் மற்றும் குங்குமம் தோழி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...