எனது நூல்கள்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

யாரோ இருவருக்குள்..

யாரோ இருவருக்குள்
நிகழ்ந்தபடி இருக்கிறது சண்டை.
வேடிக்கை பார்த்தபடி
நகர்கிறார்கள் அனைவரும்.
சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
சிலர் தலை துண்டிக்கப்படுகிறது.
சிலர் வெடிவைத்துத் தகர்க்கப்படுகிறார்கள்.
சிலர் ராஜ்யக் கைதிகளாய்
சிலர் பிணைக் கைதிகளாய்

சிலர் என்கவுண்டரிலும்
சிலர் கண்ணி வெடிகளிலும்
சிலர் எரிக்கப்பட்டும்
சிலர் சிதறடிக்கப்பட்டும்
சில உடைக்கப்பட்டும்
சில சிதைக்கப்பட்டும்
சிலருக்கு அணுகுண்டு
சிலருக்கு அணு உலை
இடம் மாறியும்
காலம் மாறியும்
துவேஷம் மாற்றமில்லாமல்
கைமாற்றப்படுகிறது.
எதனால் ஏன் யாருக்காக
நிகழ்த்துகிறோம் என்ற உண்மையை
அறியாமலும் அறிவிக்கப்படாமலும்
யாரோ இருவருக்குள்
நிகழ்ந்தபடி இருக்கிறது சண்டை.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 1 - 15. 2013 அதீதத்தில் வெளிவந்தது. 7 கருத்துகள் :

sury siva சொன்னது…

பல பிரச்சினைகள் தோன்றுவதன் மூல காரனமே
அந்த பிரச்சினையைத் துவங்கினவருக்கு அடுத்தவரைப்
பிடிக்கவில்லை. அவர் செய்வதை ஒப்புக்கொள்ள இயலவில்லை.
சுய கௌரவம் சும்மா இருப்பதை தடுக்கிறது.

ஏதேனும் செய்யவேண்டும் என்பதால் பல சண்டைகள் துவங்கி,
அதில் சம்பந்தப்படாதவர் பலரை வதைத்து காலம் காலமாய்
தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அண்டைய நாட்டு குடிமகன் ஒருவர் முதியவரை அண்மையில் இங்கு சந்தித்தேன்.
பல விஷயங்களில் நானும் அவரும் ஒன்றாகவே எண்ணினோம்.
நம்முடைய இரு நாடுகளிக்கிடயே ஏன் இப்படி 60 ஆண்டுகளாக துவேஷம் ?
பிரச்சினையைத் துவங்கியவர் எவருமே இன்று இல்லை. இருப்பினும், பிரச்சினையைப் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டிய கட்டாயம் இருவருக்குமே இருக்கிறது என்றார். நானும் ஆம் என்றேன்.

சுப்பு தாத்தா.
from new jersey
www.subbuthatha72.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புரிதலில் முரண்... தொடரும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...
இங்கே சண்டைகள் காலங்காலமாக இதைத்தான் செய்கின்றன...
வாழ்த்துக்கள்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

சண்டைகளும் அதனால் மரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன...
நல்ல கவிதை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் .. தேவையில்லாத சண்டைகள் நிறைய நடக்குது சுப்பு சார்.

ஆம் தனபாலன்

நன்றி குமார்

நன்றி ஸ்கூல் பையன்

நன்றி சாய்ரோஸ், & தனபாலன் பகிர்வுக்கு. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...