வாயில்படியில் கால்வைத்ததும்
சாலைகளைத் துரத்தத் துவங்குகிறீர்கள்
உங்கள் அந்தரங்கத்தை மறைக்கும்
லங்கோடு போல அது நீண்டு கிடக்கிறது.
அதே பாதையில் சென்று சுற்றிச் சுற்றி
உங்களை முடிந்துகொள்கிறீர்கள்.
இரத்தினக் கம்பளங்களில்., சிவப்பு விரிப்புகளில்
மையல் கொள்கிறீர்கள்.
பூக்களும் முட்களும் புற்களும் கொண்ட
பாதையைத் தவிர்க்கிறீர்கள்.
அவற்றின் மென்மைக்கும்
கடுமைக்கும் அஞ்சுகிறீர்கள்
ஏதேனும் பூச்சிகள் வாழலாம் என
சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள்.
அரவுகளை மிதிக்கலாம் என்ற
அந்தரங்கபயத்தை மறைத்துக் கொள்கிறீர்கள்.
ஒரு புதிய ஒத்தையடிப் பாதையை உருவாக்கும்
வாதையிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்கள்.
விரும்பிய பழைய பாதையையே
தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.
மழையிலும் வெய்யிலிலும்
துவைத்துக் காய்ந்து கருத்து நீண்டு
ஓரங்கள் நைந்து ஒழுங்கற்று இருக்கும்
அடுப்படிக் கரித்துண்டைப் போல் கிடக்கும்
பழைய சாலைகளையே விரும்புகிறீர்கள்.
மலைகளில் ஏறவிரும்புகிறீர்கள்.
படிகட்டுக்களைத் தேடுகிறீர்கள்.
மாடுகளும் கன்றுகளும் தன்போக்கில்
சுதந்திரமாய் தனக்கான எல்லாப் பாதைகளிலும்
அலைவதை மட்டும் ஏக்கமாய்ப் பார்க்கிறீர்கள்.
* * * * *
சாலைகள் பற்றிக்கூட அறிந்திராத நான்
சாலைகளில் உங்கள் நிழல்களின் கீழே
பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
சாலைகளைத் துரத்தத் துவங்குகிறீர்கள்
உங்கள் அந்தரங்கத்தை மறைக்கும்
லங்கோடு போல அது நீண்டு கிடக்கிறது.
அதே பாதையில் சென்று சுற்றிச் சுற்றி
உங்களை முடிந்துகொள்கிறீர்கள்.
இரத்தினக் கம்பளங்களில்., சிவப்பு விரிப்புகளில்
மையல் கொள்கிறீர்கள்.
பூக்களும் முட்களும் புற்களும் கொண்ட
பாதையைத் தவிர்க்கிறீர்கள்.
அவற்றின் மென்மைக்கும்
கடுமைக்கும் அஞ்சுகிறீர்கள்
ஏதேனும் பூச்சிகள் வாழலாம் என
சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள்.
அரவுகளை மிதிக்கலாம் என்ற
அந்தரங்கபயத்தை மறைத்துக் கொள்கிறீர்கள்.
ஒரு புதிய ஒத்தையடிப் பாதையை உருவாக்கும்
வாதையிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்கள்.
விரும்பிய பழைய பாதையையே
தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.
மழையிலும் வெய்யிலிலும்
துவைத்துக் காய்ந்து கருத்து நீண்டு
ஓரங்கள் நைந்து ஒழுங்கற்று இருக்கும்
அடுப்படிக் கரித்துண்டைப் போல் கிடக்கும்
பழைய சாலைகளையே விரும்புகிறீர்கள்.
மலைகளில் ஏறவிரும்புகிறீர்கள்.
படிகட்டுக்களைத் தேடுகிறீர்கள்.
மாடுகளும் கன்றுகளும் தன்போக்கில்
சுதந்திரமாய் தனக்கான எல்லாப் பாதைகளிலும்
அலைவதை மட்டும் ஏக்கமாய்ப் பார்க்கிறீர்கள்.
* * * * *
சாலைகள் பற்றிக்கூட அறிந்திராத நான்
சாலைகளில் உங்கள் நிழல்களின் கீழே
பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
Wav... Nice One..
பதிலளிநீக்குபலவற்றை சிந்திக்க வைக்கின்றன...
பதிலளிநீக்குமுடிவில் சொன்னதும் உண்மை...
வாழ்த்துக்கள் சகோதரி...
//மாடுகளும் கன்றுகளும் தன்போக்கில்
பதிலளிநீக்குசுதந்திரமாய் தனக்கான எல்லாப் பாதைகளிலும்
அலைவதை மட்டும் ஏக்கமாய்ப் பார்க்கிறீர்கள்.//
ரொம்பச்சரி.. அதுங்களுக்கு நம்மை மாதிரி மனத்தடை கிடையாதே.
நல்லா இருக்கு
பதிலளிநீக்குசிந்திக்கத் தூண்டும் கவிதை..... பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி சங்கவி
பதிலளிநீக்குநன்றி தனபால்
நன்றி சாந்தி
நன்றி ராஜி
நன்றி வெங்கட்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!