எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு. நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும். சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர் ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா.. சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..
காலிங் பெல் அடிச்சவுடனே பூஜா உள்ள ஓடிப் போயி.,” அம்மா பாபு அக்கா பிளிசின்னாரு” அப்பிடின்னா.. ( என் தம்பி பாபு நாங்கள் இருந்த வீட்டில் முன்பு இருந்தான். அவன் போன பின்னாடி நாங்கள் வந்து 3 வருடம் கூட ஆச்சு. இருந்தாலும் நான் பூஜாவுக்கு பாபு அக்காதான்..) போய் பூஜா சூப்பரா பாடுறாளேன்னு கேட்டா அவங்க அம்மா கீதா., அவ இப்ப ஸ்லோகம் க்ளாஸ்., பாட்டு க்ளாஸ் எல்லாம் போறான்னு சொன்னாங்க.. அவங்க கிச்சன்ல அடுப்புல ஏதோ ஃப்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க.. அவங்க கணவர் ரகு அவங்களுக்கு உதவி செய்துகிட்டு இருந்தார். கீதா ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பார்க்கிறாங்க. ரகு மாக்ஸ் ந்யூயார்க் லைஃப் இன்சூரன்ஸ்ல வேலை பார்க்கிறார். அவங்க பொண்ணு பூஜா எல் கே ஜி படிக்கிறா.. ரொம்ப சுட்டியான பொண்ணு.
என்னங்க விஷேஷம்.. இன்னிக்கு உங்க வீட்டுல இருந்து நல்ல சமையல் வாசனை அடிக்குது .. என்ன ஸ்பெஷல் அப்பிடின்னு கேட்டேன்.. அவங்க மாமனார் நாகேஸ்வரம் வேலையிலிருந்து ரிட்டையர் ஆகிட்டார். மாமியார் ராதா முதுமை காரணமா கொஞ்சம் நடக்க முடியாம இருக்காங்க.. உடம்பு நல்லா இருந்த வரைக்கும் அவங்கதான் சமைப்பாங்களாம்.
நாளைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு இங்கே அட்டண்ட் பண்ண இவரு ரிலேஷன்ஸ் வர்றாங்க.. அதுனால இன்னிக்கு சாம்பார் ., ரசம்., பொரியல்னு ஆர்டினரியா பண்ணாம.. கலவை சாதம்., சூப்., ஜீஸ்., கோசுமரி., உசிலி பண்றேன்னாங்க..
டேபிள்ள ஒவ்வொரு ஐட்டமா வந்துகிட்டே இருந்துச்சு. ஆந்திர மாகண்டி குடும்பத்தை சேர்ந்த அவங்க சமையல்ல கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும். கலர்புல்லா எல்லாத்தையும் பார்த்ததும் ஒவ்வொன்னு பேரா விசாரித்தேன்.முதல்ல கொஞ்சம் தர்பூசணி ஜூஸ் சாப்பிடுங்கன்னு கொடுத்தாங்க .. நல்ல ரோஸ் கலர்ல வெய்யிலுக்கு ஜில்லுன்னு சூப்பரா இருந்துச்சு.. அதுக்குள்ள அவங்க நாத்தனார் அன்னபூர்ணாவும் அவங்க பையன் சித்தார்த்தும் விஜயவாடாவில் இருந்து வந்துட்டாங்க.. ரகுவோட மாமா பையனும் வந்துட்டார்.. எல்லாரும் ஜூஸ் குடித்தோம். வெய்யில் நேரத்துல குளு குளுன்னு இருந்துச்சு. தர்பூசணியும் ஜீனியும் போட்டு ஐஸ்க்யூப் போட்டு மிக்ஸியில் அடித்தாராம்.
ப்ளெயின் ரைஸ்., தால்.,( துவரம்பருப்பு நெய் உப்பு போட்டது ) , டொமாட்டோ சூப் கொண்டு வந்தாங்க.. சூப் எப்பிடி செய்தீங்கன்னு கேட்டேன். தக்காளியை வேகவைச்சு அரைச்சு கார்ன்ஃப்ளோரை பாலில் கரைச்சு கொதிக்க வைச்சு ரெண்டையும் கலந்து உப்பு., மிளகுத்தூள் போட்டேன்னு சொன்னாங்க. சூப்பர் சூப்..
அப்புறம் வெஜிடபிள் சாலட்., காரட்., பீட்ரூட்., தக்காளி., வெள்ளரிக்காய் இதை நறுக்கி உப்பு., மிளகுத்தூள் போட்டு வச்சாங்க.
கும்மிடிக்காய்னு சொல்ற பரங்கிக்காய்ல.. அதாங்க சிகப்பு பூசணி .. அதை வேகவைச்சு மசித்து தயிர்ல உப்பு சேர்த்து கலந்து கடுகு உளுத்தம்பருப்பு தாளிச்சிருந்தாங்க..அலங்காரத்துக்கு கருவேப்பிலை., கொத்துமல்லி தூவி இருந்தாங்க. இந்த கும்மிடிக்காய் சாலட்/தயிர்ப் பச்சடி சூப்பர். வெய்யில் நேரத்துக்கு அமிர்தம்.
ஃப்ரூட் பச்சடின்னு ஒரு ஐட்டம். அதுல எல்லா பழமும் போடலாம். கிடைத்ததை போட்டதாக சொன்னார் கீதா. அதில் வாழைப்பழம்., மாம்பழம்., பன்னீர் திராக்ஷை., பலாச்சுளை எல்லாம் குட்டியா நறுக்கிப்போட்டு வெல்லம் போட்டுக் கலந்து வச்சிருந்தார். இதுவும் சுப்பர் டேஸ்ட் ஃப்ரூட் சாலட் மாதிரி இருந்துச்சு.
அப்பளம் வடகம்., பொறிச்சு., கொஞ்சம் கலவையான தூள் காய்கறியும் கொத்துமல்லியும்., கருவேப்பிலையும் தூவி இருந்தாங்க..
கோசுமறின்னு ஒரு ஐட்டம். பாசிப்பருப்பை ஊறவச்சு அதுல துருவின தேங்காய்., வெள்ளரிக்காய்., மாங்காய்., பச்சைமிளகாய் எல்லாம் போட்டு எலுமிச்சை பிழிந்து., உப்பு போட்டு., கடுகு தாளிச்சிருந்தாங்க.. ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்தேன் .. செம செம டேஸ்ட்.
பீன்ஸை வேகவைத்து., ஊறவச்சு அரைச்ச கடலைப்பருப்பு போட்டு., எண்ணெயில் கடுகு., பெருங்காயம்., போட்டு கிளறி இருந்தாங்க.. அது பீன்ஸ் பருப்புசிலியாம். அதுக்கு நிறைய எண்ணெய் செலவாகும்னு சொன்னாங்க..
அப்புறம் மூணு சாதம்., 4 ஊறுகாய்.. சொல்லும்போதே நாக்கு ஊறுதுல்ல..
முதல்ல தேங்காய் சாதம்.. சாதம் உதிரியா வடிச்சிட்டு., எண்ணெயில் கடுகு., கடலைப்பருப்பு., உளுந்தம் பருப்பு., பச்சை மிளகாய்., கருவேப்பிலை ., கொத்துமல்லி., துருவின தேங்காய்., உப்பு போட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறினதா சொன்னார். இதுல என்ன ஸ்பெஷல்னா வேகவைத்த பட்டாணியையும் அலங்காரத்துக்காக சேர்த்திருந்தார். கலர்புல் மற்றும் டேஸ்டி. லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்தனுப்பலாம்னு குறிச்சுக்கிட்டேன்..
வழக்கமா செய்யிறது போல புளிக்காய்ச்சல் முதல்நாள் செய்து வைச்சிட்டு மறுநாள் சாதத்துல மஞ்சப்பொடி., நல்லெண்ணெய் போட்டு., கடாயில் திரும்ப கடுகு., கருவேப்பிலை.,பச்சை வேர்க்கடலை., சாதத்துல தாளிச்சுக் கொட்டிபுளிக்காய்ச்சலையும் சேர்த்துக் கிளறினதா சொன்னார். அடிஷனல் டேஸ்டுக்கு என்ன காரணம்னு கேட்டப்ப கொஞ்சம் பெருங்காயமும்., வெந்தயமும் வறுத்துப் பொடி பண்ணித்தூவுனதா சொன்னார். பெருமாள் கோயில் புளியோதரை போல இருந்தது.
அடுத்து தயிர்சாதம். சாதத்தில் பால்., தயிர் உப்பு போட்டுக் கலந்து கடுகு., பச்சைமிளகாய் தாளித்திருந்தார். அலங்காரத்துக்கு பன்னீர் திராக்ஷையும்., கருவேப்பிலை., கொத்துமல்லியும் தூவி இருந்தார்.. ரொம்ப டிலைட்ஃபுல்..
முக்கியமான ஐட்டம் அடுத்து நமக்கெல்லாம் பிடிச்ச ஊறுகாய்கள் ஆந்திராவிலிருந்து வந்தவங்கன்னா ஊறுகாய் இல்லாம சாப்பாடா.. வகை வகையா அணிவகுத்து வந்தன ஊறுகாய்கள் . முதல்ல வடுமாங்காய்.. அதை கழுவி காயவைத்து., கடுகுப்பொடி., உப்பு.,மஞ்சள் பொடி., மிளகாய்ப்பொடி கலந்ததா சொன்னார்.
முக்கலு பச்சடி என்று மாங்காயை பல் பல்லாக நறுக்கி எண்ணெய் மிதக்க மிதக்க இன்னொரு ஊறுகாய். மிளகாய்ப் பொடி., உப்பு மஞ்சள் பொடி போட்டு நிறைய எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்ததாக சொன்னார்.
ஆவக்காய் ஊறுகாய் .. ரொம்ப அட்டகாசம்.. மினுமினுவென்று இருந்தது. பெரிய பெரிய துண்டாகவெட்டிய மாங்காய்களை கொட்டை நீக்கி கழுவி காயவைத்து ., மிளகாய்ப்பொடி., உப்பு., கடுகுப்பொடி., நிறைய எண்ணெய்., உரித்த பூண்டு., கொத்துகடலை போட்டதாக சொன்னார்..
மிக முக்கியமான ஊறுகாய்.. கோங்குரா சட்னி என்று அதன் பெயர்.. ஃபேமசான ஊறுகாய். அது புளிச்ச கீரையில் இருந்து செய்யப்படுகிறது. புளிச்ச கீரைப்பச்சடின்னும் சொல்றாங்க. . புளிச்ச கீரை ரெண்டு கைப்பிடியை ஆய்ந்துகழுவி ., எண்ணெயில் வதக்கி வைக்கணும். பிறகு இன்னொரு வாணலியில் இரண்டு கைப்பிடி மிளகாய்., ரெண்டு டேபிள் ஸ்பூன் தனியா. கட்டிப் பெருங்காயம் பெரிய துண்டு., எல்லாம் வறுத்து ., உப்பும் புளிச்ச கீரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து., பின் கடாயில் நிறைய எண்ணெய் காயவைத்து கடுகு தாளிச்சு இந்த ஊறுகாயில் சேர்ப்பார்களாம். செம காரம் மற்றும் விறுவிறுப்பு..
எல்லா டேஸ்டும் எப்பிடிக் கரெக்டா சொல்றேன்னு பார்க்கிறீங்களா.. எல்லாத்திலயும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தாச்சுல்ல.. ஞாயித்துக் கிழமையும் அதுவுமா இவ்வளவும் நல்ல நியுட்ரிஷியசோடவும்., ஹெல்த்தியாகவும்., அருமையாகவும் சமைத்து அழகா டேபிள்ல அடுக்கி வைச்சுக்கிட்டு இருந்தாங்க கீதாவும் ., ரகுவும். அவங்கள பாராட்டிட்டு கிளம்புனா எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பவுல்களில் வைத்து கொடுத்தார் கீதா. வீட்டுக்குக் கொண்டு வந்து எங்க லஞ்சோட சேர்த்து சாப்பிட்டோம்.. நீங்க என்ன செய்தீங்கன்னா கேட்டீட்ங்க.. ப்ளெயின் ரைஸ் வச்சோம்க. வீட்டுல உறை வச்ச தயிர் இருந்துச்சு.. அப்ப நீங்க சமைக்கலியான்னு கேட்டா ஆமாங்க ஆமாம் சமைக்கலை. அவங்க கொடுத்த ஊறுகாய் பச்சடி ., சாலட் வச்சு சாப்பிட்டோம்.. அட.. இது கூட நல்லா இருக்கேங்கிறீங்களா.. ஆமாங்க யாராவது சமைச்சு கொடுத்தா எதுவானாலும் நல்லா இருக்குதுதான்..:))
டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 ., இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.:)

தேனு அடுத்த் சண்டே உங்கள் வீட்டு காலிங்பெல்லை அடிக்கப்போறேன்.
பதிலளிநீக்குபடத்தையும் நீங்க சொல்லிப்போகிற அழகையும்
பதிலளிநீக்குபார்க்க படிக்க ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்
மனைவி அமைவது மட்டும் இல்லை
எதிர்வீடு அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்
கொடுத்துவைச்சவங்க..ஜமாய்ங்க..சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரொம்ப கொடுத்துவச்சவங்க....சூப்பர்ப்...ஹெல்தியான சமையல்...படங்கள் அருமை...
பதிலளிநீக்குபட் உங்க டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு :P
பதிலளிநீக்குநல்ல விருந்து தேனம்மை:)!
பதிலளிநீக்குசூப்பர்ப்... படங்கள் அருமை...
பதிலளிநீக்குஜூப்பரு டீலிங்க்+ விருந்து தேனக்கா :-))
பதிலளிநீக்குவிருந்து கலக்கல்
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குஎன்ன கன்றாவி இது ?
விருந்திலிருக்கும் சமையல் வகைகளை விட அவற்றைப் பற்றிய உங்களின் அருமையான வர்ணனை சுவையோ சுவை தேனம்மை!
பதிலளிநீக்குபடங்களுடன் செய்முறையும் சுவையா தந்து அசத்திட்டீங்கக்கா...அடுத்த விசிட் உங்க வீட்டுக்குதான்..
பதிலளிநீக்குபாபு அக்கா..ப்ளீஸ்..ப்ளீஸ்..அந்த எதிர்த்த வீட்டு அட்ரஸ் கொடுக்க முடியுமா?
பதிலளிநீக்குவாய்தான் ஊறுது தேனக்கா !
பதிலளிநீக்குஅடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..
பதிலளிநீக்குஅடுத்தவங்க பதிவுல என்ன போடறாங்கன்னு பாக்குறதுன்னா என்ன சந்தோசம்...
படிக்கும்போதே சாப்பிட்ட மாதிரி ஆச்சு...
ஏவ்வ்வ்வ் (ஏப்பம்)
நல்ல ஞாயிறு விருந்து.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தேனம்மா, சும்மாக் கலக்கல் ஐட்டங்களாச்
பதிலளிநீக்குசொல்லிட்டீங்களே. சாலடும் கொசுமர்யுமே போதும்.
களை கட்டிவிடும். எனக்கு ரொம்பப் பிடிச்சது,
அவங்க வீட்டுக்காரரும் கூட உதவி செய்ததுதான்.
என் பசியைக்கிளப்பி விட்டுட்டீங்க.
பதிலளிநீக்குஎங்களுக்கும் எதிர்வீடு பக்கத்து வீடுன்னு இருக்குதே! எப்போ பார்த்தாலும் பூட்டியிருக்கும் அல்லது ஏதாவது NV வாடை அடித்து, எனக்குக் குடலைப்பிரட்டும்.
உங்கள் வர்ணனைகள் அந்த சாப்பாட்டை ஒருபிடிபிடித்தது போல பேரானந்தம் கொடுத்தது.
நன்றி.
வாங்க ஸாதிகா.
பதிலளிநீக்குஆமாம் ரமணி.
நன்றி கீதா.
நன்றி ஜமால்., ராமலெக்ஷ்மி., குமார்., சாந்தி., ராஜா., மனோ., மேனகா., ஆர் ஆர் ஆர்., ஹேமா., மாய உலகம்., ரத்னவேல் ஐயா., வல்லி சிம்ஹன்., கோபால் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
எங்கள் விடுமுறை நாளிலும் இதே போல் தான்
பதிலளிநீக்கு