எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஸ்ரீஜியுடன்.. சப்தஸ்வரங்கள்..:))

நாதமெனும் கோயிலிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் .. ஏற்றி வைத்த விளக்கினிலே என்னை விட நீ கிடைத்தாய்.. என்ற பாடல் அவ்வப்போது மனதுள் ஒலிக்கும். எங்களுக்குக் கிடைத்த முகப்புத்தக நண்பர் பூவாளூர் ஸ்ரீஜி எனப்படும் ஆத்மாநாம் அவர்களுக்கும் இந்தப் பாடல் பொருந்தும்.


முகப்புத்தகத்தில் எத்தனையோ நட்புக்களைச் சேர்க்கிறோம். ஆனால் சிலர் நம்முடன் எப்போதும் வந்து வருவதாகவே உணர்வோம். புதிதாகப் பார்ப்பது போலோ ., சந்திப்பது போலோ இருக்காது.. ஆனாலும் முதன் முறை சிம்ரனில் ஸ்ரீஜியை நேரில் பார்த்தபோது விரு விருமாண்டி விருமாண்டி மீசையில் கொஞ்சம் மிரட்டலாக இருந்தார்..





ஒரு சங்கீதக்காரர் என்றால் நம் மனதில் ஒரு இமேஜை வரைந்து வைத்திருப்போம் . அதை எல்லாம் தகர்த்தது அந்த சந்திப்பு. அவர் பூவாளூர் திரு வெங்கட்ராமனின் மைந்தர். தனது சொந்த ஊரான பூவாளூருக்கு விக்கிபீடியாவில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தவர். யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கிராமி அவார்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். நிறைய நிகழ்ச்சிகள் உலகம் முழுமையும் ( ஜாஸ்.,& ஃப்யூஷன்., ஆர்கெஸ்ட்ரா., வானொலி நிகழ்ச்சிகள்., 1000 க்கும் மேற்பட்ட கர்நாடக இசை நிகழ்ச்சிகள். தொலைக்காட்சியிலும்) கொடுத்திருக்கிறார். ஒரு லிவிங் விக்கிபீடியா /என்சைக்ளோபீடியா/வேர்டு டிக்‌ஷ்னரி., என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.





சென்னை முகப்புத்தக நண்பர்களுக்காக உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் அவருடைய கர்நாடக இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. IGMAA -- INSTITUTE OF GLOBAL MUSIC AND ARTS. செவிக்கும் பின் வயிற்றுக்கும் அறுசுவை உணவுகள். அன்றைய நிகழ்ச்சி மிக இனிமையாய் இருந்தது. காதுகளில் தேனை நிஜமகவே ஊற்றினாற்போல.. ஸ்ரீஜியின் மிருதங்கமும்., ஜமாலின் தர்பூக்காவும்., கணேஷ் பிரசாத்., விட்டல் ராமமூர்த்தியின் வயலினும்., ராமானுஜனின் மோர்சிங்கும் அற்புதம்.. வயலின் வாய்ப் பாட்டைப் போல குழைந்துநெளிந்து அழகிய லயத்தோடு காதுகளில் கொடிகளாக வளையத்துவங்கும் நேரம் ஸ்ரீஜியின் மிருதங்கமும்., ஜமாலின் தர்பூக்காவும் காதுகளில் வித்யாசமான பூக்களைப் பூக்க வைத்தன. வாசனைக் கொடிகளூடே வளர்ந்து பூப்பந்தாடும் ராஜகுமாரிகளாய் ஆக்கியது பின்னே தொடர்ந்த வயலின். பெண்ணின் சந்தனக் குரலைப்போல இனிமை வாய்ந்த வயலினின் முன் மிருதங்கம் ஆணைப் போல ச(ப்)த்தஸ்வரத்துடன் தன் இடத்தை நிலை நாட்டியது. இன்னிசையே ஒரு நர்த்தகியாகவும் ஆகி மனதை மயக்கிய விந்தை நிகழ்ந்தது. இடம்., அகம்., புறம்., காலம் மறந்தோம்., நாதப்பிரம்மத்தில் கலந்து கிடந்தோம்.



நெஞ்சம் அதிர்ந்து கொண்டிருந்தது இன்னிசையால். இரு வேறு வாத்யார்களின் சிஷ்யர்களாக ( லால்குடி ஜெயராமன்., வி. வி சுப்ரமணியன் ) கணேஷ்., விட்டலின் வயலின் இசையில் இம்மியும் பிசகாத இசைக்கோர்வை.. தேவி நீயே துணையில் தேவியின் கைபிடித்து அழைத்து சிம்மாசனமிட்டு அமரவைத்திருந்தாள் கீரவாணி.. முக்கால் மணிநேரம் இசை உலக வி ஐ பிக்கள் கூட அமர்ந்து ( ஈரோடு நாகராஜ்., லால்குடி ஜெயராமன் மகள் லால்குடி விஜயலெக்ஷ்மி., மகன் லால்குடி ஜி ஜெ ஆர் கிருஷ்ணன்., சுரேஷ் - கடம்., முராரி வடக்கன்சேரி (வயலின் வி. வி. சுப்ரமணியனின் புதல்வர் ) ., பத்ரி சதீஷ் குமார்., ரமேஷ் விநாயகம் ( நள தமயந்தியின் மியூசிக் டைரக்டர். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் பெஸ்ட் சிங்கர் அவார்டு வாங்கி இருக்கிறார்.) கண்டு களித்தோம்..



பம்பையைப் போல அதிர்ந்தது ஜமாலின் மிருதங்கம்..தர்பூக்கா.. ( இது ஆஃப்ரிக்க வாத்தியம்) . அதற்கு பதில் சங்கதி சொல்லியபடி வெளுத்து வாங்கினார் ஸ்ரீஜி.. மொத்தத்தில் ஒரு சுவையான நீயா நானா.. நிகழ்ச்சியாய் இருந்தது.. ஸ்ரீஜியின் தனியும் அருமை.



சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்ற கேள்வி நிஜமாகவே எழுந்தது.. தாய்., பாலி., சிங்கப்பூர்., அமெரிக்கா என உலகம் பூரா ஒலித்த இசையனைத்தும் ஒரு சேரக் கேட்டுக் களிக்க முடிந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீஜி..



மெரினா பீச்சில் மூன்றாம் முறை குடும்பத்தோடு சந்தித்து பட்டம் விட்டு., பஞ்சுமிட்டாய் சாப்பிட்டுப் பிரிந்தபோது தோன்றியது.. எவ்வளவு பெரிய மியூஸிஷியன்.. என்ன எளிமை .. HOW GREAT HE IS ..என்று.



உங்கள் இசைமுயற்சி உலகம் முழுக்க பரவி ..( ACROSS THE WORLD) இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. என நிறைய இன்னிசைஞர்கள் உருவாக வாழ்த்துக்கள் ஸ்ரீஜி ... எங்கள் அன்பிற்குரிய நண்பரே..! இன்னும் இன்னும் சிகரங்களை எட்டுங்கள்..! உங்கள் பின்புலமாய் உங்கள் குடும்பமும் .. தோழமைத் தூண்களாய் நாங்களும் இருப்போம்..!!





டிஸ்கி :- ஸ்ரீஜியின் இரண்டு வெப்சைட்டுக்கள். http://www.poovalur.com/
http://www.brahmah.com/


17 கருத்துகள்:

  1. இசைக் கலைஞரைப் பற்றிய நல்லதொரு இசைவான அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இசை பற்றிய பதிவு எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும். ஸ்ரீஜி அறிமுகத்திற்கு நன்றி. நேரில் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் கேட்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு கலைஞரப்பற்றி பகிர்ந்ததற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல இசைக் கலைஞரை மிகச் சிறந்த முறையில்
    அறிமுகப் படுத்தியமைக்கும்
    தொடர்வதற்கென்று இரண்டு வெப்ஸைட்டுகளை
    அறிமுகப் படுத்தியமைக்கும் மனப் பூர்வமான நன்றி

    பதிலளிநீக்கு
  5. நல்ல இசை கலைஞரின் அசத்தலான அறிமுக பதிவு நன்றியுடன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தேனம்மை லக்ஷ்மணன் அவர்களே
    என்னை விட நீ கிடைத்தாய் என்பதை
    எண்ணெய் விட நீ கிடைத்தாய் என்று
    என்னைவிட யாரும் ொல்லவில்லையா
    தங்களது ஸ்ரீஜி யின் தொகுப்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. உங்களின் ரசனையை இனிமையான வ‌ரிகளில் படித்தபோது நானும் அந்த நாதபிரம்மத்தில் மானசீகமாக மூழ்கினேன்! இந்த மாதிரி இசையை அனுபவிக்கக் கொடுத்து வைக்க வேன்டும்! இப்போதெல்லாம் இந்த மாதிரி ஜுகல்பந்திகள் திருமண‌ வரவேற்புகளில் நடக்கிற‌து!

    பதிலளிநீக்கு
  8. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா ... என்று வியப்பில் ஆழ்த்திய அந்த அற்புத இசைகலைஞரின் சிறிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அன்பு உறவே இன்றுதான் முதன்முறையாக
    உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன் அதனால் உங்கள்
    ஆக்கங்கள் சிறப்புற வாழ்த்தி விடை பெறுகின்றேன்
    மிக்க நன்றி தங்களின் அருமையான பகிர்வுகளுக்கு.....

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீ ஜி ஒரு சிறந்த கலைஞர். அவ‌ரின் வலை தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. தேனம்மை...

    உங்களுடன் நானும் பூவாளூர் ஸ்ரீஜி எனப்படும் ஆத்மாநாம் அவர்களின் இசையில் நனைந்தேன்...

    தக திமி தாம்... தகிட தகிட தோம்...

    பதிலளிநீக்கு
  12. நல்ல ஒரு அறிமுகம் தேனம்மை.உங்களுக்கே உரித்தான எழுத்து நடையுடன் விமர்சனம் செய்து இருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  13. இசைக் கலைஞரைப் பற்றிய அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நன்றி கோபால்சார்., கௌதமன்.,கருன்., ரமணி., மாய உலகம்., சங்கர்., மனோ., ஃபுட்., சாந்தி., அம்பாளடியாள்., சூரி., சிபி., கோபி., ஸாதிகா., குமார்.

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...