வெள்ளி, 29 ஜூலை, 2011

வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)

வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்கள் (திரு நெல்லிமூர்த்தி மற்றும் நாஞ்சில் மனோ ) தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட் தவிர எதில் எல்லாம் முதலீடு செய்யலாம். அதுவும் தாங்கள் வந்து செல்லும் ஒரு மாதகால அவகாசத்துக்குள் எனக் கேட்டிருந்தார்கள். இதற்கு, முதலீட்டு ஆலோசகர் மற்றும் சென்னை பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பன் அவர்களிடம் குறுகிய கால அவகாசத்தில் இந்தியா வந்து செல்பவர்களின் முதலீட்டுக்கான ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டோம். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.


வங்கியில் இருக்கும் பணத்துக்கு இருவிதமான முதலீடுகள் செய்யலாம். அவை

(1) அசையும் ( LIQUID ASSETS) முதலீடுகள்.

(2) அசையா ( ILLIQUID ASSETS) முதலீடுகள்.

வீடு., இடம்., நிலம் இந்த மூன்றும் அசையா சொத்துக்கள். வந்து செல்லும் குறுகிய காலத்துக்குள் இவற்றின் டாக்குமெண்டேஷன்., லோன் எல்லாம் முடிக்க வேண்டும் என்பதால் டென்ஷன் அதிகம். சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என வில்லங்கமில்லாமல் பார்த்து வாங்கவேண்டும் – குறுகிய காலத்தில் இவ்வளவும் சாத்தியமா ? மேலும் இன்றைய சூழலில், தற்போது கையில் 5 லட்சரூபாய் இருப்பு இருந்தால்கூட, அதற்குள் அரைக்காணி நிலம்கூட வாங்க முடியாது.

எனவே மிடில் க்ளாஸ்., லோயர் மிடில் க்ளாஸ் மக்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது போன்ற, தங்கள் பெரிய இலக்குகளை அடையும்வரை, சுலபமாக விற்றுக் காசாக்கக் கூடிய வகையில் உள்ள (LIQUID INVESTMENTS ) 2 விதமான முதலீடுகள் இருக்கின்றன.

(1) FIXED RETURN INVESTMENTS – முதலுக்கு உத்தரவாதமுள்ள வருவாய் தரக்கூடிய முதலீடுகள்.

(2) ”வேரியபிள் ரிட்டர்ன் - ரிஸ்க் அதிகமுள்ள ஆனால் வருவாயும் அதிகமாக வாய்ப்புள்ள முதலீடுகள்.

முதலில், பிக்ஸட் ரிட்டர்ன் இன்வெஸ்ட்மெண்ட்ஸில்1. பாங்க் டெப்பாஸிட்டுகள்.2. கம்பெனி டெப்பாஸிட்டுகள் ( மீடியம் ரிஸ்க் உள்ளது ) .3. பாண்டுகள்., டிபென்சர்கள் ( கடன் பத்திரங்கள் .-- மீடியம் ரிஸ்க் உள்ளது)

4. போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்க்ஸ் ( அஞ்சலக சேமிப்பு)

5. பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட். ( பொது சேம நல நிதி)
ஆகியன அடங்கும்.

இதில் வருடத்துக்கு 8 லிருந்து 10% வரை ரிட்டர்ன் இருக்கு.

ஓரளவு பாதுகாப்புடன் ஓரளவு உத்தரவாதத்துடன் கூடியது.முதலுக்கு மோசமில்லாத முதலீடு. இதுக்கு அதிக ஆராய்ச்சியோ ஆலோசனையோ தேவை இல்லை. நேஷனலைஸ்ட் பாங்க்., சுந்தரம் ஃபைனான்ஸ் போன்றவற்றில் போட அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

இதில் ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் பண வீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறைந்து வருவதுதான். சமீபத்திய பணவீக்கம் 9 % க்கு மேல்! இத்திட்டங்களின் மூலம் வரும் வருவாய், விலைவாசி ஏற்றத்தை சரிக்கட்டத்தான் போதுமானதாக இருக்குமே தவிர பெரிய லாபம் இருக்காது.

அடுத்த்து, ரிஸ்க் அதிகமுள்ள இன்வெஸ்ட்மெண்டில்

1. ஈக்குவிட்டி ம்யூச்சுவல் ஃபண்ட் மற்றும் புதிய பரஸ்பர நிதி வெளியீடுகள் ( NFO)

2. ஈக்குவிட்டி ஷேர்ஸ் மற்றும் புதிய பங்கு வெளியீடுகள் ( IPO., FPO) - இதில் ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ். மற்றும் ஸ்பாட் ட்ரேடிங் இருக்கிறது.

3. கம்மாடிட்டீஸ் ட்ரேடிங்க் ( கோல்ட்., சில்வர்., க்ரூட் ஆயில்., ரப்பர்., பெப்பர்., இதுபோல 50 பொருட்கள் இருக்கு)

4. கரன்ஸி ட்ரேடிங்க் . இதில்

(1) ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ்

(2) யூ எஸ் டாலர்ஸ்

(3) யூரோ

(4) ஜப்பான் யென்.

5. IPO - INITIAL PUBLIC OFFERINGS. - புதிய பங்கு வெளியீடு. மூலதனம் திரட்டுதல்.

ஹையர் ரிஸ்க் இன்வெஸ்ட்மெண்ட்ஸில் வர்த்தகம் செய்ய, கவனிக்க வேண்டியவை:

(1) இன்ஃபார்மேஷன்ஸ் திரட்ட வேண்டும். நாம் முதலீடு செய்யும் கம்பெனிகளின் வர்த்தக நிலவரம் பற்றிய தகவல்கள் திரட்டவேண்டும். இன்று இணையதளங்கள் மூலமாக இது எளிதில் சாத்தியமாகிறது.

(2) பான் அட்டைதேவை. சேவிங்க்ஸ் அக்கவுண்ட், டீமேட் கணக்கு மற்றும் ட்ரேடிங் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். தேவையான எல்லா டாகுமெண்ட்ஸையும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

(3) ட்ரைவிங் லைசன்ஸ்., ரேஷன் கார்டு. பான் கார்டு., சம்பள விவர பட்டியல் போன்ற தேவையான டாகுமெண்ட்கள்., ஃபோட்டோக்கள் கைவசம் இருக்கவேண்டும்.

(4) எந்த கம்பெனி நன்றாக சேவை செய்யக்கூடியது என்று கண்டு சேவைக்கட்டணம் சற்றே அதிகமானாலும் அதிலேயே அக்கவுண்டை தொடங்கவேண்டும். என் ஆர் ஐயாக இருப்பதால் எந்தக் கம்பெனி ஆன்லைனில் நம்முடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு ., தொடர்புக்கு எந்நேரமும் உதவிகரமாக இருக்கக்கூடும் எனக் கண்டறிந்து அவற்றில் பிஸினஸ் செய்வது நம் பணத்துக்கு நல்லது. எனவே இரண்டு மூன்று கம்பெனிகளைத் தொடர்புகொண்டு எது நமக்கு நல்ல சேவை வழங்குமோ அதில் அக்கவுண்டை ஆரம்பிக்கலாம்.

ஒன்று தெரியுமா? பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலும் செய்யும் முதலீட்டின் மீது வரும் நீண்ட கால ஆதாயம் ( ஓராண்டுக்கு மேல் ) முழுமையும் பூரண வரிவிலக்குடன் கூடியது; மிக முக்கியமான இன்னொரு தகவல்: இந்த முதலீட்டின் மீது நமக்குக் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்திற்கும் வருமான வரியே கிடையாது ! ஆக, ஆதாயத்துக்கும் நோ டாக்ஸ், வருமானத்திற்கும் நோ டாக்ஸ் – அது எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்!

எனவே சகோதரர்களே .. . வெளிநாட்டிலிருந்து வரும் முன்னே தகவல்களைத் திரட்ட ஆரம்பியுங்க. இங்கு வந்தபின் அந்த கம்பெனிகளில் உங்க பணத்தை முதலீடு செய்து பெருக்க வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- ரியல் எஸ்டேட் தவிர எதில் முதலீடு செய்வது லாபம் என்ற தலைப்பில் இக்கட்டுரை ஜூலை 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது. :)

15 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பயனுள்ள தகவல்கள்.

இங்குள்ளவர்கள் முதலீடு செய்யும் அளவுக்கு பணத்தை எப்படி நியாயமான வழியில் சம்பாதிப்பது, அதை எப்படி குருவிபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பது, சேமித்த பணத்தை எப்படிப் பன்மடங்கு பெருக்குவது என்பது பற்றியும் எழுதுங்கோ!

நம்மாள்களுக்கும் கொஞ்சம் பயன்படட்டும்.

kggouthaman சொன்னது…

பயனுள்ள பதிவு. நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றி.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

டிஸ்கி :பணம் இருப்பவர்களுக்கு நல்ல கட்டுரை !
பணம் இல்லாதவர்களுக்கு அவர்களைப் பற்றி யார் இப்ப யோசிப்பது !>??????????

மாய உலகம் சொன்னது…

ரிஸ்க் அதிகமுள்ள இன்வஸ்ட்மெண்டான ஈக்குவூட்டி ஷேர்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஸன்ஸ ,கமாடிட்டி பற்றி குறிப்பிட்டிள்ளீர்கள் தற்பொழுது உள்ள நிலையில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது.. பிரசண்ட் அண்ட் பியூச்சர் இதையே முழு தொழிலாக அனைவரும் செய்வார்கள் ... உபயோகமான பகிர்வு நன்றியுடன் வாழ்த்துக்கள்...

மாய உலகம் சொன்னது…

எனது வலைப்பதிவில்….

முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
http://maayaulagam4u.blogspot.com/2011/07/blog-post_29.html

சுற்றி நடந்த காதல் கதை
http://maayaulagam-4u.blogspot.com/2011/07/blog-post_2389.html
நண்பர்களே வந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்

மாய உலகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாய உலகம் சொன்னது…

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

நெல்லி. மூர்த்தி சொன்னது…

முதலீடு குறித்த இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. அருமையாக வகைப் படுத்தி ஒரு தெளிவினை தந்துள்ளீர்கள். இதற்காக பிரபல முதலீட்டு ஆலோசகர் திரு.நாகப்பன் அவர்களுக்கும், அதனைப் பதிவிட்ட தங்களுக்கும் சம்பிரதாயமான் நன்றி யன்றி நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்!

பொதுவாக NRI என்றாலே பணம் படைத்தவர்கள் எனும் மாயை உண்டு. வளைகுடாவில் வசிப்பவர்கள் பெரும்பாலோர் மாதச்சம்பளத்தில், வாழும் முறையில் இந்தியாவில் இருப்பவர்களை விட அதிகமாகவோ அல்லது Hifi ஆகவோ இருக்கலாம். ஆனால், அசையும் / அசையா சொத்துக்களில், முதலீடுகளில்... இவர்களை விடக் குறைவு. உறவு, நட்பு என அனைத்துவட்டமுமே இவர்களிடமிருந்து ஆதாயம் பெறத் தான் முனைகின்றனரே தவிர, உதவுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதே வேதனையான உண்மை!

NRI ஆக உள்ளவர்கள் சாதாரண சேமிப்பு வங்கிக் கணக்கின் வாயிலாகவும் பங்குகளை வாங்கலாமா? பின்னர் சட்டச்சிக்கல் ஏதும் எழாதா?! நிறைய நண்பர்கள் இரண்டின் வாயிலாகவும் முதலீடு செய்கின்றனர். NRE SB a/c வாயிலாக புதிய பங்குகளைத் தான் வாங்க இயலுமே தவிர பிரபல நடப்பு பங்குகளை வாங்க இயலவில்லை. இது குறித்தும் தாங்கள் பதிவிடுவீர்களேயானால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

sriram சொன்னது…

தேனம்மை, நாகப்பன் அவர்களின் தொலைபேசி எண் / மின்மடல் முகவரி கிடைக்குமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Rathnavel சொன்னது…

அருமையான பயனுள்ள செய்திகள் நிரம்பிய பதிவு.
வாழ்த்துக்கள்.

மாலதி சொன்னது…

பயனுள்ள பதிவு. நன்றி.

சே.குமார் சொன்னது…

பணம் உபரியாக வைத்துள்ள NRI களுக்கு நல்ல மிகவும் பயனுள்ள தகவல்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கோபால் சார்., கௌதமன்., ராஜி., சங்கர்., மாய உலகம்., நெல்லி மூர்த்தி., ராம்., ரத்னவேல் ஐயா., மாலதி., குமார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...