எங்கே அது..?
*************************
கொஞ்சம் படபடப்பாய் இருந்தது..
இந்த நேரத்தில் .. என்ன செய்ய..
சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் ..
எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்..
சத்தம் கேட்டு கணவர் விழித்து விடாதிருக்க வேண்டும்..
பிள்ளைகள் இன்னொரு ரூமில்.. சத்தம் கேட்டு திடீரென்று எழுந்து வந்தால் அர்த்த ராத்திரியில் என்ன செய்கிறாய் என்று அனைவரும் கோபித்துக் கொள்வார்கள்..
திட்டு என்ன புதுசா.. நினைத்ததை நினைத்தவுடன் செய்து முடிக்க வேண்டும்..
எங்கே அது.. மறதி வந்தது போல் இருந்தது..
பூனை நடையில் சென்று மேஜையை துழாவினாள்..
சை.. அவசரத்துக்குக் கிடைக்காது..
இந்த மாதிரி சமயத்துக்காகவே எல்லா இடத்திலும் போட்டு வைப்பாள்..
எங்கே காணமல் போனது..
யார்தான் எடுப்பார்களோ..
சாமி ஷெல்ஃபின் விளக்கில் தென்பட்டது .. அட அது இல்லை..
டீப்பாயில் நிறைய பேப்பர்கள் இருந்தது.. அதன் பக்கம் இருக்கலாம்.
அப்பாடா .. ஒன்று கிடைத்து விட்டது..
அடச் சே.. என்ன இது ஒன்றுமில்லாமல் காலியாய் இருக்கு..
அடடா .. கிச்சன் லைட்டை போடாமல் வேலை ஆகாதோ..
எல்லா பெட்ரூமின் கதவையும் சாத்தியபின் கிச்சன் லைட்டை போட்டாள்..
அப்பாடா கிடைத்து விட்டது மளிகை லிஸ்ட் எழுத வைத்திருந்த இன்னொன்று..
விருவிருவென்று டேபிள் பக்கம் வந்து பேப்பரில் எழுதத் துவங்கினாள்..
தூக்கம் வராமல் மனதில் சிக்கிக் கொண்டிருந்த கவிதையை..
” ஆதி மூர்க்கம் விலா கொய்து செய்த பாதிமூர்க்கம் நான்.. “
மூச்சு சந்தோஷமாய் வெளிவந்தது..
அட ஆரம்பமே நல்லா வருது.. என்று முத்தம் கொடுத்தாள் பால்பாயிண்ட் பேனாவுக்கு..
டிஸ்கி ;- இந்தச் சிறுகதை ஜனவரி 17., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. :))

பாதி படிக்கும் போதே நினைத்தேன். பேனாவாகத்தான் இருக்கும் என்று. என் யூகம் சரியாகிப்போனதில் ஏதோ ஒரு சந்தோஷம்.
பதிலளிநீக்குஉடனே பேனாவை எடுக்காமலேயே பின்னூட்டம் கொடுத்து விட்டேன்.
நல்ல வேளையாக கரண்ட் கட் இல்லாமல், கம்ப்யூட்டர் நெட் கனெக்ஷனும் தங்குதடையின்று உடனே கிடைத்ததால்.
நல்ல சஸ்பென்ஸுடன் கூடிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தேனக்கா,
பதிலளிநீக்குதமிழ் நாட்டுல எல்லா பத்திரிக்கைகளையும் குத்தகைக்கு எடுத்துட்டீங்க போல!
சின்னதா நல்லாயிருக்கு அக்கா.
very nice mam...super
பதிலளிநீக்குபென்சில் என்று நினைத்தேன். அவசரக் கிறுக்கல்களுக்கு பென்சில் தான் சௌகர்யம் Superb thenammai
பதிலளிநீக்குShort but cute story . . Super mam
பதிலளிநீக்குகதை எழுதும் நிகழ்வே ஒரு கதையாக. மாறுப்பட்ட கற்பனை.
பதிலளிநீக்குஇதை இங்கு பதிய இத்தனை நாளாச்சா? திண்ணையில் வாசித்த நாளிலிருந்து ‘எங்கே அது?’ என நானும் கேட்டுக் கேட்டு நிறுத்தி விட்டிருந்தேன்:))!
பதிலளிநீக்குநன்று தேனம்மை.
அட..நம்ம தேனு என்னதான் சொல்லவற்ரார் என்று கவிதையை ஆரவமாக ,வேகமாக படிக்க ஆரம்பித்த பொழுது...அடடா..
பதிலளிநீக்குபேனாவா...!
பதிலளிநீக்குஇன்னைக்கு கதையா... நல்லா இருக்கு அக்கா.
பதிலளிநீக்குமாறுப்பட்ட கற்பனை.
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்., கோபால்., வெங்கி., ரூஃபினா., ராஜா., ரமேஷ்., ராமலெக்ஷ்மி., ரத்னவேல் ஐயா., ஸாதிகா., ஹேமா., சசி., குமார்.,
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓஙட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!