எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஜூலை, 2011

சாமியும் சும்மா சாமியும்..(சும்மாவுக்குப் பிறந்தநாள்)

சாமி..:-
***************

நீ உலவும் இடத்தில் உலவி
உண்டக்கட்டி உண்டு
ஓரமாய் உறங்குகிறேன்.
தாவாங்கட்டை தாடிசூழ
தலைசுமந்த சடைமுடியுடன்.
உன்னைக் காண
வழிமோதி வருவோர்க்கு
தீவட்டி பிடிக்கிறேன்
வழி விடுமாறு.

தோள்களில் தாங்கி
பல்லாக்கு சுமக்கிறேன்
தாங்கு கம்புகளிலிலிருந்து
தோளுக்கு மாறும்போது
எலும்புவழி புகுவாய்..
இனம் புரியாக் குளிராய்..
இன்ப நடுக்கமாய்..
நீ.. என் சாமி..

**************************

சும்மா சாமி:-
***************
நீ என்னைச் சுமக்கிறாய்.
நான் உன்னைச் சுமக்கிறேன்.
சமயத்தில் ஓடிப் பிடித்தும்.
ஒளிந்து பிடித்தும்
இளமையாகிறோம்.
நீ வாசிக்கப்பட வேண்டும்.,
நேசிக்கப்பட வேண்டும்.,
என்பதே என் வேண்டுதல்.
கூகுளாண்டவர் கோயிலில்
உனக்கென்றும் தனிச் சன்னிதி.
தினம் ஒரு இடுகையே
என் தீபாராதனை.
கோஷ்ட தேவதைகளில்
என் ப்ரதம ப்லாக் தேவதையே
சும்மா உனைப் பணிந்தேன்.
உள்ளும் புறமும் உணர்ந்தேன்.
சும்மா இருப்பதே சுகம் எனச்
சுற்றிய என்னை
சும்மாவோடு இருப்பதையே
சொர்க்கம் ஆக்கினாய்..
முதல் வருடத்தை
எட்டுமுன்னே
பத்ரிக்கை பிரபஞ்சத்தின்
கதவுகளைத் திறப்பித்தாய்.
இரண்டாம் வருடத்தில்
இருக்கை அளித்தாய்..
என் மன உறுதித் தேவதையே
மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கும்
சும்மாவே.. சிகரம் தொட்டு நீ வாழி..
இன்னும் பலப் பல ஆண்டு...
சக பதிவர்களின் ஆசியோடும்
வாசிப்பவர்கள் ஆதரவோடும்..:)

டிஸ்கி:- இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சும்மாவுக்கு சும்மா உங்க ஆசிகளை அள்ளி வழங்குங்க மக்காஸ்.:)

22 கருத்துகள்:

  1. வாழ்க வளர்க

    சும்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. சும்மா சாமி கவிதை சூப்பர். சும்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    மென்மேலும் வளர்ந்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தேனம்மை மேடத்திற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க, வாழ்க - பதிவுலகில், பன்னெடுங்காலம்!
    சும்மா அள்ளித் தரும் சுவையான பதிவுகள், வாசகர்களின் அறிவுப் பசிக்கு தொடர்ந்து விருந்து படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அக்கா...
    கவிதைகள் அருமை.
    சும்மா... இன்னும் உயரப் பறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சும்மா சும்மான்னு சும்மாவை சுகமா சுமக்க வச்சிட்டீங்க.இன்னும் சுகமான சுமைகளோடு வளர உயர வாழ்த்துகள் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  7. ’சும்மா’-வுக்கு
    பொறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...மா.....!

    (அக்கா மறக்காம ‘கேக்’ துண்டு அனுப்பி வெச்சிடுங்க.

    ஆமா, ஃபேஸ் புக்-ல ’கேக்-பக்கத்துல வொக்காந்து போஸ் குடுத்திருந்தீங்களே... அதுக்கும் இதுக்கும் எனி சம்மந்தம்?))

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதைகள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கும்
    சும்மாவே.. சிகரம் தொட்டு நீ வாழி..

    சும்மாவ பத்தி சும்மா சொல்லக்கூடாது..சூப்பரு..
    rajeshnedveera

    பதிலளிநீக்கு
  11. HAPPY BIRTHDAY TO chumma.
    climb every mountain cross every streams thaan ninaivukku varukirathu.
    congratulatiions ma.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் தேனக்கா :-))

    பதிலளிநீக்கு
  13. சும்மாவிர்க்கு சும்மா இல்லாமல் நிஜமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அக்கா! வாழ்த்துகள் கோடி. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
    அன்புடன்
    சாந்தி லெட்சுமணன்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி விஜய்., ஜிஜி., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கௌதமன்., குமார்., ஹேமா., கோபால்., கலாநேசன்., ரத்னவேல்., ஸ்ரீராம்., மாய உலகம்., மாதவி.,அசோக்., வல்லி சிம்ஹன்.,சாந்தி., எம் ஆர்,கோபால் சார்.

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...