வாக்கு மூல மொழி..
****************************
யார் மொழிய
நினைத்ததெல்லாம்
நீ மொழிந்தாய்..?
நீ மொழிய
நினைத்ததை
யார் மொழிவார்..?
மொழிவதெல்லாம்
உன் மொழிதானா
அறிய விருப்பம்..
நதிமூலம் ரிஷிமூலமாய்
உன் மொழிமூலம்
வாக்கு மூலம்
வாய் மொழியாய்..
அறியத்தராமலே
வழக்கொழிந்த
மொழியாகிப் போனாயே..
டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ., பிஃப்ரவரி ., 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது. :)
****************************
யார் மொழிய
நினைத்ததெல்லாம்
நீ மொழிந்தாய்..?
நீ மொழிய
நினைத்ததை
யார் மொழிவார்..?
மொழிவதெல்லாம்
உன் மொழிதானா
அறிய விருப்பம்..
நதிமூலம் ரிஷிமூலமாய்
உன் மொழிமூலம்
வாக்கு மூலம்
வாய் மொழியாய்..
அறியத்தராமலே
வழக்கொழிந்த
மொழியாகிப் போனாயே..
டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ., பிஃப்ரவரி ., 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது. :)
நான் பேச நினைப்பதெல்ல்லாம் .......நீ பேச வேண்டும் ....
பதிலளிநீக்குஎன்ற அருமையான பாடல் போலவே
உள்ளது தங்களின் இந்தக்கவிதையும்.
பாராட்டுக்கள்
மொழிவதெல்லாம்
பதிலளிநீக்குஉன் மொழிதானா
அறிய விருப்பம்...///
இந்த கேள்விகள் அனைவரிடமும் உண்டு.
வாக்குமூலம் ரொம்ப நல்லாருக்கு :-)
பதிலளிநீக்குசத்தியம் செய்து சொல்லப்படுகிற வாக்கு மூலங்கள் கூட
பதிலளிநீக்குபிறர் சொல்லிக் கொடுத்ததாய்
தான் விரும்பிச் சொல்வதாக சொல்லுகின்ற வார்த்தைகள் கூட
பிறர் அடியெடுத்துக் கொடுத்ததாய்
தங்கள் கவிதை இப்படியான பல வாக்கு மூலங்களை(
ஞாபகப்படுத்திச் செல்லுகிறது
தரமான கவிதை தொடர வாழ்த்துக்கள்
ரொம்ப அழகான வரிகள், ஆழமான அர்த்தங்களுடன்.
பதிலளிநீக்குமௌனராகமிசைத்த வாக்குமூலங்களுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமொழிந்ததற்க்கு நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காமல் இருந்தாலே நிறைய படைப்புகள் கிடைக்கும்
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
உன்னத மொழியின் வழியே
பதிலளிநீக்குமொழிந்ததை பற்றி
கவிதை மழை
பொழிந்தது அருமை,
கூடவே கொஞ்சம்
பொறாமையும் ............
எப்படி உங்களுக்கு மட்டும்
சாத்தியமாகிறது
இந்த நடை .........
நல்லா இருக்குங்க....
பதிலளிநீக்குஎப்போதோ யார் யாராலோ எல்லாம் 'மொழியப்' பட்டவை காற்றில் இன்னும் சுற்றி வருகிறதாம். எல்லாம் காதில் விழுந்தால் எப்படி இருக்கும்?!
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்குவாக்குமூலத்தின் உண்மைத்தன்மை கவிதையாய். அருமை மேடம்.
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு சகோ!
பதிலளிநீக்குகவிதை நடை நல்லா இருக்கு. ஆனா இந்த கவிதை மூலமாக நீங்க என்ன சொல்ல விரும்புறிங்க?
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்., ரமேஷ்., சாந்தி., ரமணி., ராமலெக்ஷ்மி., ராஜி., ரூஃபி்னா., ரத்னவேல் ஐயா., ராஜகோபாலன்.,கலாநேசன்., ஸ்ரீராம்.,ரவிக்குமார்., விஜயன்., குமார்., விக்கி., ப்ரசாத்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு