இருப்பு..:-
***************
மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,
சரித்திரச் சின்னங்களில்
கையெழுத்துப் பொரித்தல்.,
வானொலிப்பாடல்களுக்கு
பத்ரிக்கைகளுக்கு கடிதம் எழுதுதல்
தொலைக்காட்சி பாடல்களூடே
பெயரோடு மெசேஜ் அனுப்புதல்.,
ரயில் கழிவறைகளில் கூட
கிறுக்கி வைத்தல் என
மனித சமூகம்
பிரகடனப்படுத்திக்
கொண்டே இருக்கிறது..
கல்வெட்டிலோ., காற்றிலோ.,
தன்னின் இருப்பை..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 16 , 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.
***************
மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,
சரித்திரச் சின்னங்களில்
கையெழுத்துப் பொரித்தல்.,
வானொலிப்பாடல்களுக்கு
பத்ரிக்கைகளுக்கு கடிதம் எழுதுதல்
தொலைக்காட்சி பாடல்களூடே
பெயரோடு மெசேஜ் அனுப்புதல்.,
ரயில் கழிவறைகளில் கூட
கிறுக்கி வைத்தல் என
மனித சமூகம்
பிரகடனப்படுத்திக்
கொண்டே இருக்கிறது..
கல்வெட்டிலோ., காற்றிலோ.,
தன்னின் இருப்பை..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 16 , 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.
//மனித சமூகம்
பதிலளிநீக்குபிரகடனப்படுத்திக்
கொண்டே இருக்கிறது..
கல்வெட்டிலோ., காற்றிலோ.,
தன்னின் இருப்பை..//
ஆம், வரையறை என்பதே இல்லாமல்:)! நல்ல கவிதை தேனம்மை.
இல்லாட்டி ஊர் உலகம் மறந்துடுமே :-))
பதிலளிநீக்குநல்ல கவிதை :-)
எப்ப பார்த்தாலும் பேனாவும் கையுமாவே இருப்பீங்களா அக்கா இவ்ளோ கவிதைகள போடுறீங்க ஹி ஹி #டவுட்டு
பதிலளிநீக்குஏதோ.. நம்ம ரேஞ்சுக்கு இப்படித்தான் நம்ம பேரை நிலைச்சு நிக்க வைக்கமுடியும் :-))
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குவிஜய்
ஒவ்வொரு சராசரி மனுசனும் இன்று அரசியல்வாதியாக அல்ல்வா வாழ்கிறான்
பதிலளிநீக்குவிளம்பரம் தேடும் மறைமுக முகமுடிகள் தானே நாம்...
rajeshnedveera
கல்வெட்டிலோ காற்றிலோ கழிவறையிலோ எங்குமே மனித சமூகம் பிரகடனப்படுத்திக்
பதிலளிநீக்குகொண்டே தான் இருக்கிறது, தன்னின் இருப்பை.
உண்மையை
உண்மையாய்
உணர்த்தும்
உன்னதமான
கவிதை.
பாராட்டுக்கள்.
நன்றி ராமலெக்ஷ்மி., ஜெய்., சசி., சாந்தி., விஜய்., மாய உலகம்., கோபால் சார் .,
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!